Logo

‘சினிமாவில் பாலும் விற்கலாம், கள்ளும் விற்கலாம்’ சூர்யா பேச்சு

சினிமா கனவுகளோடு சென்னைக்கு வந்து வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் எத்தனையோ பேர். சினிமா ஆசையோடு வருபவர்களுக்கு, குறும்படங்கள் சரியான விசிட்டிங் கார்டாக இருக்கிறது. மேலும் விரிவான செய்திகளுக்கு newstm.in
 | 

‘சினிமாவில் பாலும் விற்கலாம், கள்ளும் விற்கலாம்’ சூர்யா பேச்சு

சினிமா கனவுகளோடு சென்னைக்கு வந்து வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் எத்தனையோ பேர். இப்போது, சினிமாவில் நுழைவதற்கு உதவி இயக்குநராக ஐந்தாறு வருடங்கள் காத்திருந்த காலமெல்லாம் மலையேறி போயாச்சு. சினிமா ஆசையோடு வருபவர்களுக்கு, குறும்படங்கள் சரியான விசிட்டிங் கார்டாக இருக்கிறது. அப்படி குறும்பட போட்டிகளில் பங்கெடுத்து வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு கொடுத்து பேசிய நடிகர் சூர்யாவின் பேச்சு அத்தனை யதார்த்தம்.

‘ஒரு படம் எடுக்கிறது ரொம்ப சுலபம். ஆனால் நல்லபடம் எடுப்பது போருக்கு போறது மாதிரி. அதையும் தாண்டி கல்ட் படங்கள் எடுப்பது என்பதெல்லாம் பேரதிசயம். இந்த வயதில் யாராவது உதவி பண்ணினால் மேலே வந்துவிடலாம்.. ஆனால் இந்த வயதில் இருப்பவர்கள் தான் இனி வரும்நாட்களில் புதிய முயற்சிகளை உருவாக்க போகிறவர்கள் .நானெல்லாம் எழுபதுகளின் குழந்தைப்பருவத்தை பார்த்தவன். ஆனால் இப்போதிருக்கும் குழந்தைகளுக்கு தினமும் ஒரு அனுபவம் கிடைக்கிறது.

‘சினிமாவில் பாலும் விற்கலாம், கள்ளும் விற்கலாம்’ சூர்யா பேச்சு

எந்த ஒரு விஷயம் பண்ணும்போதும், இன்னும்கொஞ்சம் நன்றாக பண்ணியிருக்கலாமோன்னு நினைத்தால் அதை அப்போதே சரிசெய்து விடவேண்டும். எங்கேயும் குறைவந்துவிட கூடாது என இயக்குனர் பாலா அண்ணன் அடிக்கடி சொல்வார். அதனால் குறும்படங்கள் என்றாலும் அதில் சிறிய குறைகூட வந்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் உங்கள் வாழ்நாளையும் தாண்டி இதுதான் உங்களுக்கான முக்கியமான பதிவாக இருக்கப்போகிறது.

நிஜத்தில் நமக்கு நீதி கிடைக்கிறதோ இல்லையோ இதுபோன்ற குறும்படங்களின் மூலம் நீதியை நிலைநாட்ட முடியும். பெற்றோர், பள்ளிக்கூடம், இந்த சமூகம் சொல்லி கேட்காதவர்கள் சினிமா பார்த்து திருந்தினேன் என்று சொன்னால் அதுதான் சினிமாவின் பலம்.

இன்று எட்டு கோடி மக்களில் 50 லட்சம் பேர் படம் பார்த்தால் படம் ஹிட். 80 லட்சம் பேர் பார்த்தால் அது மெகா ஹிட். கடைக்குட்டி சிங்கம் படத்திற்கு கிடைத்த வரவேற்பு அந்தப் படம் பார்த்தவர்கள் மத்தியில் விவசாயிகள் குறித்த பார்வையை மாற்றியிருக்கும் என்பது தான் சந்தோசம். 

எது உங்கள் மனதுக்கு நெருக்கமாக அதை செய்யுங்கள்.இந்த மார்க்கெட் ஒப்பனனானது. இதில் பாலும் விற்கலாம் கள்ளும் விற்கலாம். இரண்டுமே விலைபோகும். ஆனால் எதை விற்கவேண்டும் என்பதை நீங்கள் தான் முடிவு செய்யவேண்டும்’ என்றார்  சூர்யா.
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP