‘சும்மா கிழி’ யை தொடர்ந்து...அடுத்த பாடல் டிச.,4இல்

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘சும்மா கிழி’ பாடலை தொடர்ந்து, இரண்டாவது பாடல் இம்மாதம் 4ஆம் தேதி வெளியாகவுள்ளது.
 | 

‘சும்மா கிழி’ யை தொடர்ந்து...அடுத்த பாடல் டிச.,4இல்

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ திரைப்படத்தின் முதல் பாடலான  ‘சும்மா கிழி’ பாடலை தொடர்ந்து,  இரண்டாவது பாடல் இம்மாதம்  4ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படத்தின் முதல் பாடல் கடந்த 27ஆம் தேதி வெளியானது. விவேக் வரிகளில் அனிருத் இசையில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் குரலில் ‘சும்மா கிழி’ என்ற அந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்ட இப்பாடல் வெளியான 24 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வையாளர்கள் கடந்தது. இதன்மூலம் தென்னிந்திய அளவில்  அதிக பார்வையாளர்களாக கேட்கப்பட்ட பாடல் என்ற சாதனையை புரிந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இப்படத்தின் இரண்டாவது பாடல் வரும் 4ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த பாடலை யார் பாடியுள்ளார்கள், இது எதுமாதிரியான பாடலாக இருக்கும் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். வரும் டிசம்பர் 7ஆம் தேதி தர்பார் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

லைகா நிறுவனம் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP