நானும் துன்புறுத்தப்பட்டேன்: MeTooவில் சேர்ந்த சைப் அலி கான்!

MeToo எழுச்சிக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான், 25 வருடங்களுக்கு முன் தானும் துன்புறுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
 | 

நானும் துன்புறுத்தப்பட்டேன்: MeTooவில் சேர்ந்த சைப் அலி கான்!

MeToo எழுச்சிக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான், 25 வருடங்களுக்கு முன் தானும் துன்புறுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் உள்ள பெண்கள், பொது இடங்களிலும், வேலை செய்யும் இடங்களிலும் தங்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லை பற்றி #MeToo என்ற ஹேஷ்டேக் மூலம் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர். இந்த எழுச்சியில் பாலிவுட் நடிகர் நானா படேகர், மத்திய அமைச்சர் எம்.ஜே அக்பர், பாடலாசிரியர் வைரமுத்து உட்பட பலர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 

பல பாலிவுட் நடிகர்களும் பிரபலங்களும், மீடூ இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில், பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானும், மீடூ இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். தானும் சிலரால் துன்புறுத்தப்பட்டதாகவும் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். 

"பாலியல் ரீதியாக இல்லாவிட்டாலும், 25 வருடங்களுக்கு முன்னால் தொழில்ரீதியாக என்னையும் சிலர் துன்புறுத்தியுள்ளனர். அதை நினைத்தால் இன்றும் எனக்கு கோபம் வருகிறது. மற்றவர்களின் கஷ்டத்தை புரிந்து கொள்வது மிக மிக கடினம். பலரால் அது முடியாது. இன்று அது பற்றி நான் பேசப் போவதில்லை. ஏனென்றால், இது என்னை பற்றிய இயக்கம் கிடையாது. இன்று நாம் பெண்களுக்காக துணை நிற்க வேண்டும்" என்றார் சைஃப்.

மேலும், பாலியல் ரீதியாக குற்றம் செய்தவர்கள் எவருடனும் தான் பணியாற்ற போவதில்லை என்றும் சைஃப் அலி கான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP