'நீங்கள் அவ்வளவு ஒழுங்கில்லை' - அமிதாப் மீதும் 'MeeToo' பாலியல் குற்றச்சாட்டு

MeeToo இணையதள இயக்கத்தின் வழியாக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மீது சிகை அலங்கார கலைஞரும் பிக் பாஸ் போட்டியாளருமான சப்னா பாவ்நானி பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாய் உள்ளது.
 | 

'நீங்கள் அவ்வளவு ஒழுங்கில்லை' - அமிதாப் மீதும் 'MeeToo' பாலியல் குற்றச்சாட்டு

MeeToo இணையதள இயக்கத்தின் வழியாக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மீது சிகை அலங்கார கலைஞரும் பிக் பாஸ் போட்டியாளருமான சப்னா பாவ்நானி பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாய் உள்ளது.

சமூக வலைதளங்களில் MeeToo ஹெஷ்டேகில் பல்வேறு துறையில் இருக்கும் பெண்களும் தாங்கள் எதிர்கொண்ட பாலியல் தொந்தரவுகளை அம்பலப்படுத்தி வருகின்றனர். இதில் சற்றும் எதிர்பாராத வகையில் பல்வேறு துறையில் சாதனை புரிந்த நபர்கள் சிக்கி வருகின்றனர். இந்த சூழ்நிலையில், நடிகர் அமிதாப் பச்சன் மீதும் பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் அமிதாப் பச்சனின் 76வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அதற்காக தொலைகாட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அமிதாபிடம் MeeToo 
விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.  நானா படேகர் மீது குற்றச்சாட்டு வைத்த துனுஸ்ரீ,  அமிதாப், ரஜினிகாந்த் போன்ற பெரிய நடிகர்கள் அவரோடு நடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் இந்த விவகாரத்தில் அமிதாப் பெரிதாக வாய்த் திறக்கவில்லை. பேட்டியின்போது இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய அவர், ''எந்த ஒரு பெண்ணிடமும் தவறாக நடந்துகொள்ளவோ அல்லது நிர்பந்திப்பதும் தவாறான செயல். அதுவும் இது போன்ற நிகழ்வு பணி இடங்களில் ஏற்படவே கூடாது. இது போன்ற குற்றச்சாட்டுகள் கவனிக்கப்பட வேண்டும்.'' என்று கூறினார் 

அமிதாபின் இந்தப் பேச்சை பிரபல திரையுலக ஹேர் ஸ்டைலிஸ்ட் சப்னா பாவ்நானி என்பவர் கடுமையாக சாடியுள்ளார்.  சப்னா பாவ்நானி பதிந்திருக்கும் ட்வீட்டில், ''இது மிகப்பெரிய பொய். அமிதாப் அவர்களே! நீங்கள் அவ்வளவு ஓழுங்கில்லை. 'பிங்க்' என்றத்  திரைப்படம் வெளியாகிக் கடந்து சென்று விட்டது. 

 

 

 

அதேபோல் போராளியாக காட்டிக் கொள்ளும் உங்களது முகமும் வெட்டவெளிச்சமாகும். உங்களது உண்மை மிக விரைவில் வெளிவரும். உங்கள் கைகளை தற்போது கடித்துக் கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஏனெனில் உங்கள் விரல் நகங்கள் எப்போதோ காணாமல் போயிருக்கும். பச்சன் குறித்து ஏராளமான பாலியல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. அவை அனைத்தும் படிப்படியாக வெளிவரும்'' என்று குறிப்பிட்டுள்ளார். 

அமிதாப் பச்சன் மீதான இந்தக் குற்றச்சாட்டு இந்திய சினிமா உலகை அதிர வைத்து MeeToo இயக்கத்தை மேலும் பரபரக்கச் செய்துள்ளது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP