Logo

40 வீரர்கள் வீரமரணம்: பாலிவுட் நடிகர்கள் இரங்கல் !

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பயங்கரவாத தாக்குதலை நடத்தியதற்காக, அக்ஷய் குமார், ரன்வீர் சிங், பிரியங்கா சோப்ரா மற்றும் பல பாலிவுட் பிரபலங்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.
 | 

40 வீரர்கள் வீரமரணம்: பாலிவுட் நடிகர்கள் இரங்கல் !

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பயங்கரவாத தாக்குதலை நடத்தியதற்காக, அக்ஷய் குமார், ரன்வீர் சிங், பிரியங்கா சோப்ரா மற்றும் பல பாலிவுட் பிரபலங்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.

அக்‌ஷய் குமார்: புல்வாமாவில் நடந்துள்ள சிஆர்பிஎப் வீரர்கள் மீதான கொடூரமான பயங்கரவாத தாக்குதலில் நமது நம்பிக்கையை தகர்த்துவிட்டது. உயிரிழந்தவர்களின் ஆத்மாக்களுக்கு அமைதியையும் துயருற்ற குடும்பத்தினருக்கு வலிமையையும் கடவுள் தரவேண்டும். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்போம். இச்சம்பவத்தை நாம் மறக்க முடியாது.

40 வீரர்கள் வீரமரணம்: பாலிவுட் நடிகர்கள் இரங்கல் !

விக்கி கவுஷல்: சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து எடுக்கப்பட்ட திரைப்படமான உரியில் நடித நடிகர் விக்கி கவுஷல் பேசும் போது,"இது எனது சொந்த இழப்பாக கருதுகிறேன். திவீரவாதத்திற்கு பதிலடி கொடுத்தே ஆக வேண்டும். ஒரே நாட்டினராக ஒன்று சேர்ந்து வீரமரணம் அடைந்தவர்களின் குடும்பாத்தாருடம் இருக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார். 

பூமி பட்னேகர்: புல்வாமா தாக்குதல் குறித்து அறிந்து அதிர்ச்சியடைந்தேன். எனது வருத்தத்தை கூற வார்த்தைகள் இல்லை. இது மனித தன்மையற்ற செயல். வன்முறைக்கு எதற்கும் பதில் அல்ல 

அமீர் கான்: சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது நடந்த தாக்குதல் குறித்து அறிந்து மனமுடைந்தேன். இது மோசமான செயல். அவர்கள் குடும்பாத்தாருக்கு எனது இரங்கல்கள். 

40 வீரர்கள் வீரமரணம்: பாலிவுட் நடிகர்கள் இரங்கல் !

ஷாருக் கான்: உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். நாட்டிற்காக வீரமரணம் அடைந்தவர்களின் ஆத்மா சாந்தி அடையட்டும். 

ஷாஹித் கபூர்: புல்வாமா தாக்குதல் குறித்து அறிந்து அதிர்ச்சியடைந்தேன். இது மிகவும் கொழைத்தனமான செயல். அவர்களின் குடும்பத்தாருக்காக பிரார்த்திக்கிறேன். 

ஆயூஷ்மான் குரானா: அதிர்ச்சியிலும் மன வேதனையும் அடைந்தேன். அவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்

மனோஜ் பாஜ்பாய்: புல்வாமாவில் நடந்தது மிகவும் வருத்தமளிக்க கூடியது. எனது கோபத்தை விளக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. இந்த நேரத்தில் நமது அரசு நல்ல முடிவை எடுக்கும் என்றும் நம்புகிறேன். நாம் அரசுடன் நிற்க வேண்டும்.

பிரியங்கா சோப்ரா: புல்வாமா தாக்குதல் என்னை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. எப்போதும் வெறுப்பு விடையாகாது. இறந்தவர்களின் குடும்பத்தாருடன் துணை நிற்கிறேன். 

40 வீரர்கள் வீரமரணம்: பாலிவுட் நடிகர்கள் இரங்கல் !

பர்ஹான் அக்தர்: புல்வாமாவில் நடந்த கோழைத்தனமான தாக்குதல் குறித்து அறிந்து வருத்தமடைந்தேன். வீரர்களை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். 

அபிஷேக் பச்சான்: புல்வாமாவில் இருந்து மிகவும் கொடூரமான செய்தி வந்துள்ளது. காதலை கொண்டாடிய நாளில் இப்படி மோசமாக வெறுப்பு காட்டப்பட்டுள்ளது. வீரமரணம் அடைந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். 

ரன்வீர் சிங்: சிஆர்பிஎஃப் வீரர்கள் மீதான தாக்குதல் மிகவும் வெறுக்கத்தக்கது. 

40 வீரர்கள் வீரமரணம்: பாலிவுட் நடிகர்கள் இரங்கல் !

டாப்சி பன்னு: இந்த சம்பவம் என்னை மனமுடைய செய்திருக்கிறது. என் வாழ்நாளிலேயே இது போன்ற சம்பவங்கள் முடிவுற வேண்டும் என்று நினைக்கிறேன். 

வருண் தவான்: புல்வாமா தாக்குதல் மிகவும் கோழைத்தனமானது. மறைந்திருந்து நடத்தப்பட்ட தாக்குதலில் வீரமரணமடைந்த ஹீரோக்களின் ஆத்மா சாந்தி அடையட்டும். 

ரிஷி கபூர்: முழுமையான கோழைத்தனமான செயல். இந்த கொடூரமான குற்றம் செய்தவர்கள் காஷ்மீர் மக்களுடன் நண்பர்களாக இருக்க முடியாது. நாங்கள் வஞ்சிக்கப்பட்ட குடும்பத்தினருடன் நிற்கிறோம்

சல்மான் கான்: ம் நாட்டின் அன்பிற்குரிய வீரர்களுக்கும் நமது குடும்பங்களைக் காப்பாற்ற தங்கள் இன்னுயிரைத் தந்தவர்களின் குடும்பத்தினருக்கும் என் இதயம் இரங்குகிறது.

40 வீரர்கள் வீரமரணம்: பாலிவுட் நடிகர்கள் இரங்கல் !

மேலும் புல்வாமா தீவிரவாதத் தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு, தலா 5 லட்சம் ரூபாய் வழங்குவதாக, இந்தி நடிகர் அமிதாப் பச்சன் அறிவித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP