Logo

உயிருடன் இருக்கும் போதே இறந்துவிட்டதாக செய்தி..!! நடிகை லீலாவிற்கு அதிர்ச்சி கொடுத்த யூடியூப் சேனல்..!!  

 | 

பிரபல மலையாள நடிகையான குலப்புள்ளி லீலா, விஷாலின் ‘மருது’ படத்தில் அவர் பாட்டியாக நடித்திருப்பார். இவர் பெரும்பாலும் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். இவர் 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் மேடை நாடகங்களில் நடித்து தனது வாழ்க்கையைத் தொடங்கியவர்.

kulapulli-leela

தமிழில் ரஜினியின் ’முத்து’ படம் மூலம் அறிமுகமான இவர், நாச்சியார், மாஸ்டர், அரண்மனை 3, அண்ணாத்த, கொம்பு வச்ச சிங்கம்டா உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், அவர் உயிரிழந்துவிட்டதாக யூடியூப் சேனல் ஒன்றில், தவறாக சிலர் செய்தி வெளியிட்டதால் பரபரப்பானது. கடைசியில் இந்தத் தகவல் லீலாவுக்கே வந்ததும் அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து அவருக்குத் தொடர்ந்து போன் அழைப்புகள் வரத் தொடங்கியதுடன், சிலர் சமூக வலைதளங்களில் இரங்கல் செய்தியும் பதிவிட்டனர்.

இந்நிலையில் இந்த வதந்தி குறித்து நடிகை குலப்புள்ளி லீலா கூறுகையில், இதுபோன்ற தவறானச் செய்திகளைத் தயவு செய்து பரப்ப வேண்டாம். இந்த யூடியூப் செய்தியைக் கேட்டு, நண்பர்கள், உறவினர்கள் என ஏராளமானவர்கள் போன் செய்து விசாரித்தார்கள். விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.

kulapulli-leela

தொடர்ந்து பேசிய அவர், யூடியூப் சேனல் நடத்தும் பலர் லைக்ஸ் மற்றும் ஷேரிங்கிற்காக தவறான தகவல்களைத் கொடுக்கிறார்கள். அதன்மூலம் அவர்களுக்குப் பணம் வருகிறது என்பது எனக்குத் தெரியும். அதற்காக உயிருடன் இருப்பவர்களைக் கொன்றுதான் பணம் சம்பாதிக்க வேண்டுமா? என்னைப் பற்றிய செய்தியை அரை மணி நேரத்தில் 30 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர் என்று வேதனையுடன் கூறினார்.

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP