8 வருடம் முயற்சித்தும் அஜித்தை சந்திக்க முடியவில்லை!!

நடிகர் அஜித்தை சந்திக்க 8 வருடமாக முயற்சித்து சோர்ந்து போய்விட்டதாக பிரபல இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் தெரிவித்துள்ளார்.
நேரம் படத்தை இயக்கிய இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் பிரேமம் படம் மூலம் மிகவும் பிரபலமானார். அதன்பிறகு 5 ஆண்டுகளாக படம் இயக்காத அவர் அண்மையில் கோல்ட் என்ற படத்தை இயக்கியிருந்தார்.
ஆனால் கோல்ட் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. அவர் கேரளாவை சேர்ந்தவர் என்றாலும், தமிழ் படங்கள், இயக்குநர், நடிகர்கள் குறித்து தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார்.

அதே போல் சோஷியல் மீடியாவிலும் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். அண்மையில், சினிமாவுக்கென்று ஒரு துறையை உருவாக்கி அதில் கமல்ஹாசனை அமைச்சராக்க முதல்வருக்கு கோரிக்கை வைத்தார்.
அதன்பிறகு கமல்ஹாசன் நேரில் சந்தித்த, அதுகுறித்து அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். இந்நிலையில் நடிகர் அஜித்தை இதுவரை சந்திக்க முடியவில்லை என்று அவர் வருத்தமாக கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

அஜித் உடன் ஒரு படம் பண்ணுமாறு ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு அல்போன்ஸ் புத்ரன், அஜித் சாரை இதுவரைக்கும் மீட் பண்ண முடியவில்லை. 10 முறை அவரின் மேலாளர் சுரேஷ் சந்திராவிடம் அஜித் சாரை சந்திக்க வேண்டும் என கேட்டிருப்பேன்.
8 வருடங்கள் ஆகிறது, ஆனால் இன்னும் அவரை சந்திக்க முடியலை என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். எனக்கு வயதாவதற்குள்ளாக அஜித் சாரை பார்த்தால் படம் பண்ணுவேன் என்று கூறியுள்ளார்.

அஜித்தை பார்க்க பலமுறை முயற்சி செய்து சோர்வடைந்து விட்டேன். நீங்கள் கேட்கும்போது முதலில் கோபம் வரும். பின்னர் நீங்களும் என்னை மாதிரி ஒரு ஏ.கே ரசிகரென நினைத்து அமைதியாக கடந்து விடுவேன் என அவர் கூறியுள்ளார்.
newstm.in