நடிகர் போண்டா மணியிடம் நலம் விசாரித்தார் அமைச்சர் சுப்பிரமணியன்..!

நடிகர் போண்டா மணியிடம் நலம் விசாரித்தார் அமைச்சர் சுப்பிரமணியன்..!
X

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நகைச்சுவை நடிகர் போண்டா மணியை, அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்து நலம் விசாரித்தார்.

தமிழ்த்திரையுலகின் நகைச்சுவை நடிகர் போண்டா மணி உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு, இரண்டு சிறுநீரகங்களும் செயலிழக்கும் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.


"படப்பிடிப்பின் போது சாக்கடை நீரில் விழுந்தேன். அந்த நீர் நுரையீரலில் தங்கி அதன் காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டது. அதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, எனது சிறுநீரகங்கள் செயலிழக்கும் நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் கண்டறிந்து கூறினர். அதை கேட்டு மனம் உடைந்து போனேன்.

தனியார் மருத்துவமனையில் பணம் செலுத்த முடியாமல் அரசு மருத்துவமனைக்கு வந்தேன். அரசு மருத்துவமனையில் சிறப்பாக கவனித்துக் கொள்கிறார்கள். எனக்கு, டயாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்" என்று என்று போண்டா மணி கூறியிருந்தார்.


இந்த நிலையில், சிறுநீரக பிரச்சனை காரணமாக சிகிச்சை பெற்று வரும் நடிகர் போண்டா மணியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், அவருடைய உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

Next Story
Share it