1. Home
  2. சினிமா

விபத்தில் சிக்கி பிரபல இளம் நடிகை மரணம்!!

விபத்தில் சிக்கி பிரபல இளம் நடிகை மரணம்!!

ஹிந்தி நடிகை வைபவி உபாத்யாயா, சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வைபவி உபாத்யாய் (32) கடந்த 2017ஆம் ஆண்டு சாராபாய் vs சாராபாய் என்ற இந்தி தொலைக்காட்சி தொடரில் ஜாஸ்மின் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தார். அதன் மூலம் அவர் இந்தி சின்னத்திரையுலகில் பிரபலமானார்.

பெரும் வரவேற்பை பெற்ற இந்த தொடர் மூலம் இவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்தன. பல பிரபலமான இந்தி தொடர்களில் நடித்த இவர், திரைப்படத்திலும் நடித்தார்.


விபத்தில் சிக்கி பிரபல இளம் நடிகை மரணம்!!

தீபிகா படுகோன் நடிப்பில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியான சபக் என்ற படத்தில் மீனாட்சி எனும் முக்கிய கதாப்பாத்திரமாக இவர் நடித்துள்ளார். இந்த சூழலில் வைபவிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

திருமணம் நிச்சயமான நபருடன் வைபவி அடிக்கடி சுற்று பயணம் மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் இருவரும் இமாச்சல பிரதேசத்திற்கு சுற்று பயணம் மேற்கொண்டனர். அப்போது அங்கே எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் இவர்கள் சென்ற கார், பள்ளத்தில் விழுந்தது.

இந்த கோர விபத்தில் சிக்கிய வைபவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் பயணம் செய்த அவரது வருங்கால கணவர் கடும் காயங்களுடன் உயிர் தப்பினார்.


விபத்தில் சிக்கி பிரபல இளம் நடிகை மரணம்!!

இதையடுத்து இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே அவரது வருங்கால கணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோர விபத்தில் சிக்கி உயிரிழந்த வைபவிக்கு திரைபிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை டநத்தி வருகின்றனர். இவரது மறைவு தற்போது இந்தி திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like