ஜியோ போனிலும் இனி வாட்ஸ்ஆப், பேஸ்புக் உபயோகிக்கலாம்!

ஜியோ போன்களில் வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், யூ-டியூப், கூகுள் சேவைகள் வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. செப்டம்பர் 10ம் தேதி இதனை அறிமுகப்படுத்தவுள்ளனர். அனைத்து ஜியோ போன்களிலும் செப்டம்பர் 20 முதல் செயல்படும்.
 | 

ஜியோ போனிலும் இனி வாட்ஸ்ஆப், பேஸ்புக் உபயோகிக்கலாம்!

ஆண்ட்ராய்டு மொபைல்களில் வாட்ஸ்ஆப் வசதி உள்ளதுபோல் தற்போது ஜியோ போன்களிலும் வாட்ஸ்ஆப் வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. 

பொதுமக்கள் மத்தியில் தற்போது மொபைல் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதுவும் பேஸ்புக், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் என பல்வேறு சாட் செயலிகளை உபயோகிக்கின்றனர். சாட் செய்வதில் முக்கிய செயலியாக வாட்ஸ்ஆப் இருப்பது அனைவரும் அறிந்ததே. பல்வேறு ஆண்ட்ராய்டு போன்களில் இயங்கி வரும் வாட்ஸ்ஆப், ஜியோ போனிலும் விரைவில் கொண்டு வரப்படும் என ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்திருந்தார். அதன்படி, KaiOS அடிப்படையாக கொண்ட ஜியோ போன் மற்றும் ஜியோ போன் 2 ஆகிய மாடல்களுக்கு ஏற்ப வாட்ஸ்ஆப் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி  ஃபேஸ்புக், யூ-டியூப், கூகுள் சேவைகள் செயலிகளையும் இந்த போன்களில் உபயோகிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 10ம் தேதி இதனை அறிமுகப்படுத்தவுள்ளனர். அனைத்து ஜியோ போன்களிலும் செப்டம்பர் 20 முதல் செயல்படும்.

ஜியோ போன்களில் ‘ஜியோ ஆப் ஸ்டோர்'  மூலமாக இந்த செயலிகளை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும். பின்னர் வழக்கம்போல் உங்களது கான்டக்ட்ஸ்-ல் உள்ள நபர்களோடு மெசேஜ் மூலமாக உரையாடலாம். ஜியோ போனில் கீபேடு மாடலை உபயோகிக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த வாட்ஸ்ஆப் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த உங்களது சந்தேகங்களை 1991 என்ற டோல் ஃப்ரீ எண்ணை தொடர்புகொள்ளலாம் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP