செல்ஃபோன் கட்டணங்களை ஒப்பிட வலைத்தளம்!

பல்வேறு செல்ஃபோன் சேவை நிறுவனங்களின் கட்டண விகிதங்களை ஓப்பிட்டு அறிவதற்காக வலைத்தளம் ஒன்று உருவாக்கப்பட உள்ளது.
 | 

செல்ஃபோன் கட்டணங்களை ஒப்பிட வலைத்தளம்!

செல்ஃபோன் கட்டணங்களை ஒப்பிட வலைத்தளம்!

பல்வேறு செல்ஃபோன் சேவை நிறுவனங்களின் கட்டண விகிதங்களை ஓப்பிட்டு பார்க்க, புதிய இணையதளம் ஒன்று உருவாக்கப்பட உள்ளது. 

இதற்கு முன்னோடியாக சோதனை ரீதியிலான வலைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தளத்தை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் டெல்லியில் அறிமுகப்படுத்தியுள்ளது, இதை பார்த்து வாடிக்கையாளர்கள் தெரிவிக்கும் யோசனைகள் அடிப்படையில் வலைத்தளம் மேம்படுத்தப்பட்டு நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்தப்படும். இதன் மூலம் செல்ஃபோன் கட்டண நிர்ணய முறையை வெளிப்படையானதாக்க முடியும் என டிராய் கருதுகிறது. பயனர்கள் அனைத்து செல்ஃபோன் சேவைகளின் கட்டணத்தையும் வெளிப்படையாக tariff.trai.gov.in என்ற இணையத்தில் பார்க்கலாம் என்றும் டிராய் தெரிவித்துள்ளது. இந்த இணையதளம் தற்போது பீட்டா சோதனையில் இருப்பதாகவும் விரைவில் பயனர்களின் பயன்பாட்டுக்கு வரும் என்றும் டிராய் அறிவித்துள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP