பணம் செய்ய விரும்பு - பகுதி 3 

ஆசைக்கும் தேவைக்கும் உள்ள வித்தியாசம்: வாகனம் என்பது தேவை - 25 லட்சத்திற்கு வாங்க வேண்டும் இந்த மாடல் , இந்த நிறம் , இந்த வசதி வேண்டும் என நினைப்பது ஆசை .
 | 

பணம் செய்ய விரும்பு - பகுதி 3 

மாத தவணை - EMI - Excuse My Ignorance 

என்  அறியாமையை மன்னித்து விடுவீர்களாக !.  ஏன் emi  ஒரு அறியாமை? வீடு வாங்க, வாகனம் வாங்க, பெரும் தொகை கையில் இல்லை. என்னதான் செய்வது? ஒரே தீர்வு- கடன் - மாத தவணை . இப்படி தான்  நினைக்கிறார்கள் பலர்.  தங்கள் வாழ்வில் கடன் பட்டு 45-50 வயது வரை அதை திருப்ப கட்ட; பல தியாகம் செய்து , உழைத்து ஓடாய் தேய்த்து , ஒரு கட்டத்தில் வாழ்வை தொலைக்கிறார்கள் . 

என்னதான் சொல்கிறீர்கள் ?மாத தவணை  சரியா  தவறா ?

 1. சொத்து ,வாகனம் , பொருட்கள் - ( குளிர் சாதனம் ,தொலைக்காட்சி , கைபேசி ) எது  வாங்குவதாக இருந்தாலும், 50 % முன்பணம் காட்டாமல் வாங்குவதில்லை என முடிவெடுக்க வேண்டும் . முன்பே சொன்னது போல, 'instant gratification '- உடனடியாக  நினைத்த மாத்திரத்தில் வாங்கும் எண்ணத்தை கைவிடவேண்டும் .

பொருட்களை சந்தை படுத்துதலில் ஒரு உக்தியை  கையாள்வார்கள் - 'impulsive buying '. பார்த்த மாத்திரத்தில் வாங்குவது . நாம் சில கடைகளில் , இனிப்புகள் ,சாக்லேட்கள் ,பணம் செலுத்தும் இடத்தில் இருப்பதை பார்த்திருப்போம் . குறைந்த செலவு பொருட்கள் , தின்பண்டங்கள் நம் கண் முன்னே இருப்பதை பார்த்த குழந்தைகள், அவைகளை கேட்க ,மறுப்பு கூறாமல் நாம் வாங்குவதில்லையா? 

இதே மன நிலையில் தான்  நிறுவனங்கள் நம்மை அணுகுகிறார்கள். நம்மிடம் பணம் இல்லாவிட்டாலும் , 'பிறகு கட்டுங்கள் ' என்ற ஒற்றை வார்த்தையில் மயங்கி கடனாளி ஆகிறோம் .

பணம் செய்ய விரும்பு - பகுதி 3 

இந்த கட்டுரையின் நோக்கம் சிந்தித்து செயல் புரிய வேண்டும் என வலியுறுத்துவதுவே தவிர, வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்பதல்ல .

2. ஆசைக்கும் தேவைக்கும் உள்ள வித்தியாசம்: வாகனம்  என்பது தேவை - 25 லட்சத்திற்கு வாங்க வேண்டும் இந்த மாடல் , இந்த நிறம் , இந்த வசதி வேண்டும் என நினைப்பது ஆசை . 
 எனக்கு தெரிந்த ஒருவர் ,85 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு தொலைக்காட்சி பெட்டி வாங்கினார் .  அவரின் மாத வருமானம் 24 ஆயிரம் ரூபாய்.  ஆசை பட்டு வாங்கிவிட்டார் . அனால் அதை பார்க்க அவருக்கு நேரமில்லை . மாதம் 7 ஆயிரம் கட்ட கூடுதலாக 2 மணி நேரம் உழைக்க வேண்டிய கட்டாயம் . 

சரியாக 13 மாதங்கள், பழுது அடைந்து விட்டது . சரி செய்ய 9 ஆயிரம் தேவை . பொருளுக்கான உத்திரவாத காலம் முடிந்து விட்டது. 9 ஆயிரம்  என்பது  அவருடைய மாத சம்பளத்தின் மூன்றில் ஒரு பகுதியை விட அதிகம். மிகுந்த சிரமத்திற்குள்ளானார் . இப்படியம் சிலர் . 

என்ன செய்திருக்க வேண்டும் ?  சிந்திப்போம்

பணம் செய்ய விரும்பு - பகுதி 3 

3. அது என்ன 50-30-20  விதி  ? நம்மை  பல ஆபத்தில் இருந்து காப்பாற்றவல்லது  இந்த எண்கள். அடுத்த பாகத்தில் விவரிக்கிறேன். அதுவரை காத்திருங்கள்....

- சுப்ரமணியன் நடேசன் -

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP