1. Home
  2. வர்த்தகம்

பணம் செய்ய விரும்பு! பகுதி 2

பணம் செய்ய விரும்பு! பகுதி 2

பணம் பற்றிய புரிதலின் முதல் படியாக செலவுகளை இரண்டு பிரிவுகளாக வைக்க சொல்லியிருந்தோம் . இந்த செயல் மூலம், நமக்கு செலவுகள் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் குறைத்துக்கொள்ள கூடியதாக உள்ளது என்ற ஒரு உண்மை விளங்கியிருக்கும் .

செலவுகளை பற்றி விவாதிக்கும் போது, கடன் அட்டைகள் என்ற (கிரெடிட் கார்டுகள் ) பற்றி கூற வேண்டியது அவசியமாகிறது . அறிந்தோ, அறியாமலோ இ .எம் . ஐ , கிரெடிட் கார்டு, தனி நபர் கடன் ( பர்சனல் லோன் ) என்ற மிக கூரிய வாள்கள் நம்மிடம் வந்துவிட்டது .

ஏன் அவை வாள்கள்? வாள்கள், நம்மை பாதுகாக்கவும் முடியம் , நம்மை அழித்து விடவும் முடியும் .
கடன் அட்டைகளை பற்றி அறிந்துகொள்ள, அதன் பின்னால் ஒளிந்துள்ள வியாபாரத்தை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு ஆண்டிற்கு கடன் அட்டைகள் மூலம் நடக்கும் வியாபாரம் மட்டும் பல லட்சம் கோடிகள். இந்த உண்மையை நம்பத்தான் வேண்டும் .

நேரடியாக அவர்களுக்கு பல வழிகளில் அவைகளுக்கு வருமானம் கிடைக்கும் தான். ஆனால், பல நுகர்வோர்கள் கடன் அட்டைகள் மூலம் பொருள் பெற்று தவணை தேதியில் காட்டாமல் , வட்டி காட்டுவதால் தான் அவர்கள் லாபம்
ஈட்டுகிறார்கள்.

அதாவது தவணை தொகையை தள்ளி கட்டுவதும் , குறிப்பிட்ட குறைந்த தொகையை கட்டுவதும் , நம்மை
பெருந்தொல்லைக்கு உள்ளாக்கும் . அது கடன் அட்டை நிறுவனங்களுக்கு பெருத்த லாபத்தை பெற்றுத்தரும் . கடன் அட்டை மூலம் பெற்ற கடனை திரும்ப செலுத்த முடியாமல், ஒரு பெரும் சமூகம் , கடனாளியாகி, தூக்கம் தொலைத்து, வாழ்விழந்து ,ஊரை மாற்றி , என பல விஷயங்களை மாற்றி வாழ்கிறார்கள் என்றால் அது மிகை அல்ல .

சமீபத்தில் இது பற்றி ஒரு சக பயணியிடம் பேச நேர்ந்தது . அவர் ‛நாடே கடன் வாங்குகிறது, இதில் நான் எம்மாத்திரம்’ என்று அங்கலாய்த்துக்கொண்டார். இது என்ன எதிர்மறை சிந்தனை. இவர்கள் போன்றவர்களின் சிந்தனை வீட்டையும், நாட்டையும் எதிர் திசையில் இழுத்து செல்லும் என்று சொல்லத்தான் வேண்டுமா ?

இதை சரி செய்ய, என்ன செய்ய வேண்டும்? எப்பாடு பட்டாலும் முதலில் கடன்அட்டைகளின் கடன்களை கட்ட வேண்டும். முதல் காரணம் : அதிகவட்டி- கடன் சுமை , இரண்டாவது மன உளைச்சல்.

எப்படி கட்டலாம் ? பல வழிகள் உண்டு, சிலவற்றை கூறுகிறேன்:

1. உங்கள் வங்கி சேமிப்பு ,
2. பி .எப் எனப்படும் வைப்பு நிதி ,
3. எல் .ஐ.சி பாலிசி மீது கடன் ,
4. அரசு சார்த்த வங்கி நகை கடன் ( இவைகடன் அட்டைகளை விட குறைந்த வட்டிகள்)
மேலும் இவற்றிற்கு நம்மால் முடிந்த அளவு கடன் தொகையை திரும்ப கட்டலாம். மாதம் இவ்வளவு என கட்ட வேண்டிய அவசியம் இல்லை .சென்ற பாகத்தில் கேட்ட திருக்குறள் :

குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை.

பாெருள்: தன்னிடம் உள்ள பொருள் கொண்டு செயல் செய்வது எப்பொழுதும்
சிறப்பானது.

தொடர்ந்து பயணிப்போம்

- சுப்ரமணியன் நடேசன் -

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like