வோடஃபோன் புதிய ஆஃபர்; ரூ.399-க்கு 30 ஜிபி டேட்டா

வோடஃபோன் நிறுவனம் தங்களின் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ஒரு அதிரடி ஆஃபரை வழங்கியுள்ளது. 'ரெட் போஸ்ட்பெய்ட் பிளான்' என்ற இந்த திட்டத்தில் ரூ. 399 க்கு ஒரு நாளைக்கு 1 ஜிபி வீதம் 30 நாட்களுக்கு 30 ஜிபி வழங்குகிறது.
 | 

வோடஃபோன் புதிய ஆஃபர்; ரூ.399-க்கு 30 ஜிபி டேட்டா

வோடஃபோன் புதிய ஆஃபர்; ரூ.399-க்கு 30 ஜிபி டேட்டா

வோடஃபோன் நிறுவனம் தங்களின் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய ஆஃபரை வழங்கியுள்ளது. 'ரெட் போஸ்ட்பெய்ட் பிளான்' என்ற இந்த திட்டத்தில் ரூ. 399-க்கு ஒரு நாளைக்கு 1 ஜிபி வீதம் 30 நாட்களுக்கு 30 ஜிபி வழங்குகிறது.

மேலும் அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்டிடி வாய்ஸ் கால், 100 எஸ்.எம்.எஸ், இலவச ரோமிங் வசதி, ரூ.4,000-க்கு வோடஃபோன் ப்ளேயில் வீடியோ பார்க்கும் வசதி, 4 மாதங்களுக்கு 3,500 பத்திரிக்கை இதழ்களை இணையதளம் மூலமாக பெறும் வசதி, உபயோகிக்கும் ஸ்மார்ட் போனுக்கு ஒரு வருட இன்சூரன்ஸ் உள்ளிட்ட அம்சங்கள் இத்திட்டத்தில் அடங்கியுள்ளன.

வோடஃபோன் ப்ரீபெய்ட் சேவையில் இருந்து போஸ்ட்பெய்ட் சேவைக்கு மாற்றியவர்கள் மற்றும் மற்ற நெட்ஒர்க் சேவையில் இருந்து வோடஃபோன் சேவைக்கு மாறியவர்களுக்கு இந்த ஆஃபர் வழங்கப்படும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP