ரூ. 2000 கேஷ்பேக்கை அள்ளித்தரும் ஐடியா..!

4ஜி ஸ்மார்ட்போன்களுக்கு மட்டும் ஐடியா புதிய கேஷ்பேக் ஆஃபரை அறிமுகப்படுத்தியுள்ளது.
 | 

ரூ. 2000 கேஷ்பேக்கை அள்ளித்தரும் ஐடியா..!

ரூ. 2000 கேஷ்பேக்கை அள்ளித்தரும் ஐடியா..!

4ஜி ஸ்மார்ட்போன்களுக்கு மட்டும் ஐடியா புதிய கேஷ்பேக் ஆஃபரை அறிமுகப்படுத்தியுள்ளது.

தூங்கி கொண்டிருந்த தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ஜியோவின் வருகைக்கு பின்னர் துள்ளிகுதிக்க ஆரம்பித்து விட்டன. ஜியோவின் அதிரடிகளுக்கு போட்டிபோடும் முனைப்பில் ஐடியா ரூ.199/- திட்டத்தின் கீழ் ஒரு நாளைக்கு 1.4 ஜிபி டேட்டா வழங்குகிறது. அத்துடன் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் ரோமிங் உட்பட வரம்பற்ற அழைப்புகளையும், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களையும் 28 நாட்களுக்கு இலவசமாக கொடுக்கிறது. இந்நிலையில் தற்போது ஐடியா 4ஜி ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்காக நிர்வானா காம்போ திட்டம் எனும் மெகா கேஷ்பேக் சலுகையை அறிவித்துள்ளது. 

ரூ. 2000 கேஷ்பேக்கை பெற என்ன செய்ய வேண்டும்?

ஐடியாவின் சலுகை திட்டங்களான ரூ.199, ரூ.398, ரூ.449, ரூ.459 மற்றும் ரூ.509 போன்ற திட்டங்களில் வாடிக்கையாளார்கள் ரீசார்ஜ் செய்துகொள்ளலாம். ஆனால் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதமும் ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. 

ஐடியா ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் முதல் 18 மாதங்களில் ரூ.750/- கேஷ்பேக்கை பெற ரூ.3000/- அளவிலான ரீசார்ஜை செய்ய வேண்டும். பின்னர் மீதமுள்ள ரூ.1250/-ஐ பெற அடுத்த 18 மாதங்களுக்குள் ரூ.3000/- அளவிலான ரீசார்ஜை செய்ய வேண்டும். ஆக 36 மாதங்களுக்கு ரூ. 6000 வரை ரீசார்ஜ் செய்யம்போது வாடிக்கையாளர்களுக்கு ரூ. 2000 வரை கேஷ்பேக் சலுகை பெற முடியும் என ஐடியா நிறுவனம் அறிவித்துள்ளது. மற்ற நெட்வொர்க்கிற்கு வாடிக்கையாளர்கள் சென்று விடுவதை தவிர்க்கவே ஐடியாவின் ராஜ தந்திர ஐடியா இது..!

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP