முகேஷ் அம்பானியின் அடுத்த அதிரடி ப்ளான்: நீங்க ரெடியா?

ரிலையன்ஸ் ஜியோ சேவை தொலைத்தொடர்புத் துறையில் ஒரு தனி முத்திரையை பதித்துள்ளது என்றே கூறலாம்.
 | 

முகேஷ் அம்பானியின் அடுத்த அதிரடி ப்ளான்: நீங்க ரெடியா?

ரிலையன்ஸ் ஜியோ சேவை தொலைத்தொடர்புத் துறையில் ஒரு தனி முத்திரையை பதித்துள்ளது என்றே கூறலாம். கடந்த 2018 மார்ச் மாதம் தொடங்கப்பட்ட இந்த ஜியோ சேவையானது தொடங்கிய 22 மாதங்களில் 21.5 கோடி செல்போன் வாடிக்கையாளர்களை பெற்றது. இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது, சேவை தொடங்கிய சில மாதங்கள் இலவச சேவை வழங்கப்பட்டது தான். 

ஜியோ வாய்ஸ் கால் மற்றும் இணைய சேவை அதிபயங்கர வெற்றி பெற்றதையடுத்து, அடுத்த ஒரு அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆம், ஃபைபர் பிராட்பேண்ட்டில் கால் பதிக்க இருப்பதாக அறிவித்த நிலையில், இந்த சேவையை பெற நாம் என்ன செய்யவேண்டும் என்பதை பார்ப்போம். 

2 ஆண்டுகளுக்கு முன் ஆகஸ்ட் 15ல் ஜியோ சேவை தொடங்கப்பட்டது. இதனை நினைவு கூறும் வகையில் இந்த முறையும் ஆகஸ்ட் 15ல் இருந்து ஜியோ ஜிகா ஃபைபர் இணைப்புக்கான முன்பதிவு ஆரம்பமாகும். அன்று Myjio அல்லது jio.com ல் முன்பதிவு தொடங்கும், எந்த நகரங்களில் அதிக முன்பதிவு உள்ளதோ, அந்நகரங்களில் சேவை முதலில் துவக்கப்படும் என தெரிகிறது. முதற்கட்டமாக 15 முதல் 20 நகரங்களில் இந்த சேவை தொடங்கப்படவுள்ளது. தொடர்ந்து 1,100 நகரங்களில் ஏற்படுத்தப்படவுள்ளது.  உலகத்திலேயே மிக பிரமாண்டமாக 1100 நகரங்களில் பைபர் பிராட்பேண்ட் சந்தைப்படுத்தப் படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

500-700 ரூபாய் திட்டத்தில் 100 Mbps வேகமும், சில நூறு Gb களும் கிடைக்கும் வகையில் பிளான்கள் அமையலாம் எனவும் கூறப்படுகிறது.  இந்த சேவை சில மாதங்களுக்கு இலவசமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பிராட்பேண்ட் உடன் செட்-டாப் பாக்ஸ் மூலம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் அளிக்கப்படும் என தெரிவதால் ஏர்டெல் உட்பட அனைத்து முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களும் கலக்கத்தில் உள்ளன.

ஜியோ வாய்ஸ் கால், இணைய சேவைக்கே பல்வேறு ஆஃபர்கள் வழங்கப்பட்ட நிலையில், இந்த ஃபைபர் பிராட்பேண்ட் திட்டத்திலும் சலுகைகளுக்கு பஞ்சமிருக்காது என தெரிவிக்கப்படுகிறது.  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP