அமெரிக்க பைக்குகள் மீது அதிக வரி: இந்தியா மீது டிரம்ப் கோபம்

அமெரிக்க பைக்குகள் மீது அதிக வரி: இந்தியா மீது டிரம்ப் கோபம்
 | 

அமெரிக்க பைக்குகள் மீது அதிக வரி: இந்தியா மீது டிரம்ப் கோபம்


அமெரிக்காவின் முன்னணி பைக் நிறுவனமான ஹார்லி டேவிட்ஸன் ஏற்றுமதி செய்யும் வாகனங்களுக்கு இந்தியாவில் அதிக வரி போடுவதாக குற்றம் சாட்டியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். 

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இதுபற்றி அவர் பேசியபோது, இந்திய அரசு அதிக வரி சுமத்துவதை சுட்டிக்காட்டி விமர்சித்தார். 

முன்னதாக 800சிசி எஞ்சின் பவருக்கு குறைவான பைக்குகள் மீது 60% வரியும், 800சிசி-க்கும் அதிகமான வாகனங்கள் மீது 75% வரியும் வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது அதை மத்திய அரசு மாற்றியுள்ளது. அனைத்து வகை பைக்குகள் மீதுள்ள இறக்குமதி வரியை 50% என குறைத்துள்ளது.

இந்த குறைப்பு போதாதென்று டிரம்ப் கூறியுள்ளார். பிரதமர் மோடியுடன் சமீபத்தில் தொலைபேசியில் பேசியதை குறிப்பிட்டு, இவ்வாறு கூறினார். "ஹார்லி டேவிட்ஸன் மீது 50%, 75% என வரி போடுவதாக அவர் கூறுகிறார். அதை 100 சதவீதத்தில் இருந்து குறைந்துவிட்டதாக சொல்கிறார். இந்தியாவை ஏன் இப்படி செய்ய நாம் அனுமதிக்கிறோம்?" என டிரம்ப் கூறியதாக தெரிகிறது. ஆயிரக்கணக்கான இந்திய பைக்குகளை அமெரிக்காவில் இறக்குமதி செய்ய 0% வரி வசூலிப்பதாகவும், அதையே இந்தியாவும் பின்பற்ற வேண்டும் என அவர் விரும்புவதாக தெரிவித்தார். 

ஆண்டுக்கு சுமார் 3,700 ஹார்லி டேவிட்ஸன் பைக்குகள் இந்தியாவில் விற்கப்படும் நிலையில், டிரம்ப் குறிப்பிட்டது போல, எந்த இந்திய பைக்கும் ஆயிரக்கணக்கில் அமெரிக்காவில் விற்பதில்லை என நிபுணர்கள் கூறுகின்றனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP