ஜெட் ஏர்வேஸ் நிறுவனபங்குகள் ஒரே நாளில் 50 சதவீதம் வீழ்ச்சி

வங்கிகள் திவால் நடவடிக்கை தொடர்பான நீதிமன்றத்திற்கு சென்ற தகவல் வெளியானதையடுத்து ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் பங்குகள் இன்று ஒரே நாளில் 50 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.
 | 

ஜெட் ஏர்வேஸ் நிறுவனபங்குகள் ஒரே நாளில் 50 சதவீதம் வீழ்ச்சி

ஜெட் ஏர்வேஸ் விமானத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, கடனளித்துள்ள வங்கிகள் திவால் நடவடிக்கை தொடர்பான நீதிமன்றத்திற்கு சென்ற தகவல் வெளியானதையடுத்து  அந்த நிறுவனத்தின் பங்குகள் இன்று ஒரே நாளில் 50 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் கடும் நிதி நெருக்கடியால் தனது சேவையை முற்றிலுமாக நிறுத்தியது. இதனால் அங்கு வேலை செய்த பணியாளர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாமல் முடங்கியது.

இந்நிலையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு கடன் கொடுத்த வங்கிகள் அந்நிறுவனம் திவாலானதாக அறிவிக்க வேண்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த தகவல் வெளியில் பரவியதையடுத்து அந்நிறுவனத்தின் பங்குகள் இன்று ஒரே நாளில் 50 சதவீதம் விழ்ச்சியடைந்துள்ளது என மும்பையிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP