அதிகரிக்கும் ஆன்லைன் ஷாப்பிங்!

ஆன்லைன் மூலம் செல்போன், உடைகள், வீட்டு வசதி சாதனங்கள் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்னன.
 | 

அதிகரிக்கும் ஆன்லைன் ஷாப்பிங்!

ஆன்லைன் மூலம் செல்போன், உடைகள், வீட்டு வசதி சாதனங்கள் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்னன.

அன்றாட செயல்கள் அனதத்திற்கும் இணையத்தை பயன்படுத்த தொடங்கிவிட்ட நிலையில் இணையம் வழியாக ஷாப்பிங் செய்வது அதிகரித்து வருகிறது. கடந்த 2017ம் ஆண்டு, இணையதளம் வழியாக 10 கோடியே 80 லட்சம் பேர் தங்களுக்கு வேண்டிய பொருட்களையும், சாதனங்களையும் மக்கள் வாங்கி உள்ளனர்.

இந்த ஆண்டிலும் இப்படி இணையதளம் வழியாக பொருட்களை வாங்குவோரின் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. குறிப்பாக 12 கோடிப் பேர் இந்த ஆண்டு இணையதளம் வழியாக பொருட்களை வாங்குவார்கள் என்று ‘அசோசாம்’ என்ற தொழில், வர்த்தக சபை மற்றும் ரீ சர்ஜன்ட் அமைப்பும் இணைந்து நடத்திய ஆய்வு முடிவு கூறுகிறது.

இணையதளம் வழியாக பொருட்களை , சாதனங்களை வாங்குவோரில் 60 முதல் 65 சதவீதம்பேர் செல்போனில் ‘ஆர்டர்’ செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

கடந்த ஆண்டில் இணையதளம் வழியாக பொருட்களை, சாதனங்களை வாங்கியவர்களில் 74 சதவீதம் பேர், தங்களுக்கு உரிய பொருள் அல்லது சாதனம் கையில் கிடைக்கிறபோது பணம் செலுத்தும் வழியை தேர்ந்தெடுத்து உள்ளனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP