1. Home
  2. வர்த்தகம்

ஜிஎஸ்டியால் எல்ஐசி-க்கு வந்துள்ள வினை!

ஜிஎஸ்டியால் எல்ஐசி-க்கு வந்துள்ள வினை!

ஆயுள் காப்பீட்டு கழகம் (எல்ஐசி) உள்ளிட்டவற்றில் பாலிசிதாரர்களாக உள்ளவர்களின் பிரீயத் தொகைக்கு ஜிஎஸ்டி வரி வசூலிப்பதால், புதிய பாலிசிதாரர்களை பெறுவதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக எஸ்ஐசி நிர்வாகத்தினர் வேதனை தெரிவிக்கின்றனர்.

எல்ஐசி உள்ளிட்டவற்றில் பாலிசிதாரர்கள் செலுத்தும் பிரீயத் தொகைக்கு 1.8 சதவீதத்திலிருந்து 4.5 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. கடந்த 2014 -ஆம் ஆண்டு மற்றும் அதன் பிறகு எடுக்கப்பட்டு வரும் பாலிசிகளுக்கு ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் எல்ஐசியில் முதலீடு செய்வதை ஊக்குவிக்கும் நோக்கில், இதில் முதலீடு செய்யப்படும் தொகை எவ்வளவாக இருந்தாலும், அத்தொகை சேமிப்பாக கருதப்பட்டு அதற்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு விலக்கு கொடுத்துவிட்டு, அனைத்து பிரீயத் தொகைக்கும் ஜிஎஸ்டி விதிக்கப்படுவதால், புதிய பாலிசிதாரர்களை பெறுவதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என எல்ஐசி நிர்வாகத்தினர் வேதனை தெரிவிக்கின்றனர்.

எல்ஐசியில் புழங்கும் பொதுமக்களின் பல லட்சம் கோடி கணக்கிலான பணம்தான் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு குறைந்த வட்டியில் கடனாக அளிக்கப்படுகிறது.

அத்துடன் ஒவ்வொரு நிதியாண்டிலும் ஐஎல்சியின் லாபத்தில் மத்திய அரசின் பங்காக பல லட்சம் கோடி ரூபாய் அளிக்கப்படுகிறது.

இவ்வாறிருக்க, எல்ஐசி வாடிக்கையாளர்களின் பாலிசி பிரீமியத் தொகைக்கு ஜிஎஸ்டி வசூலிப்பது எந்த விதித்திலும் நியாயமில்லை. எனவே, இதற்கு ஜிஎஸ்டி-யிலிருந்து விலக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கை பாலிசிதாரர்கள் மற்றும் எல்ஐசி நிர்வாக தரப்பில் வலுத்துள்ளது.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like