இந்தியாவுக்கும் வந்தது அமேசான் மியூசிக் - சிறப்பு அம்சங்கள் என்ன?

அமேசான் பிரைம் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமேசான் மியூசிக் இப்போது இந்தியாவிலும் வந்துவிட்டது.
 | 

இந்தியாவுக்கும் வந்தது அமேசான் மியூசிக் - சிறப்பு அம்சங்கள் என்ன?

இந்தியாவுக்கும் வந்தது அமேசான் மியூசிக் - சிறப்பு அம்சங்கள் என்ன?அமேசான் பிரைம் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமேசான் மியூசிக் இப்போது இந்தியாவிலும் வந்துவிட்டது. 

அமேசான் பிரைமைத் தொடர்ந்து அமேசான் மியூசிக் ஆப் நேற்று (புதன்கிழமை) அறிமுகமானது. இதனால் அமேசானின் பிரியர்களும் இசை ரசிகர்களும் ஆர்வமடைந்துள்ளனர். 

அனைத்து மொழிகளுக்கும் ஒரே ஆப்:

குறிப்பாக வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப தமிழ், தெலுங்கு, கன்னடா, ஆங்கிலம், பஞ்சாபி, பெங்காலி, போஜ்பூரி, குஜராத்தி, ராஜஸ்தானி, மலையாளம், மராத்தி, மற்றும் இந்தி என 10 மொழிகளுக்கு ஒரே ஆப்-பில் பாடல் கேட்டு அனுபவிக்கலாம்.

இடைவெளி இல்லா பாடல்கள்:

ஏற்கெனவே சாவன், கானா மற்றும் ஆப்பிள் மியூசிக் ஆகிய ஆப்-கள் இசைப் பிரியர்களுக்காக இருக்கிறது. அந்த வகையில் இவற்றிலிருந்து வேறுபடுகிறது  அமேசான் மியூசிக். ஆமாம் அமேசான் மியூசிக்கில் விளம்பர இடைவெளி இல்லா பாடல்களைக் கேட்கலாம். 

ஆஃப்லைன் வசதி:

மேலும் ஆஃப்லைன் மியூசிக் டவுன்லோடு, அலெக்சா வாய்ஸ் சப்போர்ட் போன்ற பல்வேறு சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளது இந்த அமேசான் மியூசிக்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP