வாட்ஸ் ஆப் மெசேஜ் டெலிட் செய்யும் வசதியில் அதிரடி மாற்றம்

வாட்ஸ் ஆப்பில் மற்றவர்களுக்கு அனுப்பிய குறுஞ்செய்திகளை அனுப்பி குறிப்பிட்ட சில மணி நேரத்தில் டெலிட் செய்தால் அழிந்துவிடும் வசதி கொடுக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த வசதி அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
 | 

வாட்ஸ் ஆப் மெசேஜ் டெலிட் செய்யும் வசதியில் அதிரடி மாற்றம்

வாட்ஸ் ஆப் மெசேஜ் டெலிட் செய்யும் வசதியில் அதிரடி மாற்றம்

வாட்ஸ் ஆப்-ல் மற்றவர்களுக்கு அனுப்பிய மெசேஜ்களை அனுப்பிய குறிப்பிட்ட சில நிமிட நேரத்தில் டெலிட் செய்தால் அழிந்துவிடும் வசதி கொடுக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த வசதி அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

பிரபலமான சாட்டிங் செயலியான வாட்ஸ் ஆப், பயனாளர்களுக்கு தொடர்ந்து பல அம்சங்களை அப்டேட் செய்து கொண்டே உள்ளது. அந்தவகையில் தற்போது மேலும் ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது மெசேஜ் அனுப்பப்பட்ட 420 விநாடிகளில்,  அதாவது 7 நிமிடங்களுக்குள் அந்த மெசேஜை அழிக்கக்கூடிய வசதி தரப்பட்டிருந்தது. இந்த வசதியானது வாட்ஸ் ஆப் பயனர்கள் மத்தியில் பலத்த வரவேற்பினைப் பெற்றிருந்ததையடுத்து,  குறுஞ்செய்திகளை அழிக்கக்கூடிய கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. புதிய அப்டேட் படி, ஒரு மணி நேரம் 8 நிமிடத்தில் (68 நிமிடங்கள் அல்லது 4096 விநாடி) குறுஞ்செய்தியினை அழித்துவிட முடியும்.

வாட்ஸ் ஆப் மெசேஜ் டெலிட் செய்யும் வசதியில் அதிரடி மாற்றம்

இந்த வசதி தற்போது அன்ராய்டு மொபைல் பயன்படுத்தும் வாட்ஸ் ஆப் செயலியில் மட்டும் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. விரைவில் ஐஓஎஸ் மொபைல் போனிலும் அப்டேட் செய்யப்படும் என வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது. அனுப்பப்படும் டைப் செய்யப்பட்ட தகவல் மட்டுமின்றி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உட்பட அனைத்தையும் டெலிட் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP