13 இலக்க மொபைல் எண்: இருக்கு ஆனா இல்லை!

ஜூலை முதல் மொபைல் எண்கள் இனி 13 இலக்கத்தில் தான் இருக்கும் எனப் பரவிய தகவல் தவறானது எனத் தெரியவந்துள்ளது. ஆவணம் உண்மை, ஆனாலும் அதை நெட்டிசன்களும், மீடியாக்களும் புரிந்து கொண்ட விதத்தில் தான் தவறு எனத் தெளிவு படுத்தியுள்ளது பி.எஸ்.என்.எல் நிறுவனம்.
 | 

13 இலக்க மொபைல் எண்: இருக்கு ஆனா இல்லை!

ஜூலை முதல் மொபைல் எண்கள் இனி 13 இலக்கத்தில் தான் இருக்கும் எனப் பரவிய தகவல் தவறானது எனத் தெரியவந்துள்ளது. ஆவணம் உண்மை, ஆனாலும் அதை நெட்டிசன்களும், மீடியாக்களும் புரிந்து கொண்ட விதத்தில் தான் தவறு எனத் தெளிவு படுத்தியுள்ளது பி.எஸ்.என்.எல் நிறுவனம். 

கடந்த இரண்டு நாட்களாக பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் ஆவணத்துடன் வாட்ஸ்ஆப்பில் தகவல் ஒன்று பரவியது. அதில், இனி ஜூலை 1 முதல் அனைத்து மொபைல் நம்பர்களும் 13 எண்களுடன் வரும். வாட்ஸ்ஆப்பில் வெளியான இந்த ஆவணம், BSNL தன் ஒப்பந்ததாரர் நோக்கியா நெட்வொர்க்ஸ் நிறுவனத்துக்கு அனுப்பிய சுற்றறிக்கையாகும். 

இந்த ஆவணத்தை மேற்கோள் காட்டியே, மொபைல் நம்பர் 13 டிஜிட்டுக்கு மாறப்போகிறது என்று அனைவருக்கும் வாட்ஸ்ஆப்பில் ஃபார்வேர்டும் செய்யத் துவங்கினர் நெட்டிசன்கள். ஆனால் ஆவணத்தில் கூறியதென்னவோ இயந்திரங்களுக்கு இடையேயான - 'மெஷின் டு மெஷின் (M2M)' சாதனங்களுக்கு மட்டுமே என BSNL நிறுவனம் தெளிவு படுத்தியுள்ளது. 

(IoT) எனப்படும் 'இன்டர்நெட் ஆப் திங்ஸ்' - அதாங்க வெளியிலிருந்தபடியே மின்விசிறியை இயக்குவது, வை-ஃபை ஆன் செய்வது என மேலும் பல விஷயங்களுக்கு மொபைலில் உள்ளது போன்றே சிம் கார்டுகள் வழங்கப்படும், அவை மேற்படி இயந்திரங்களில் உபயோகிக்கப்படும். அவற்றில் யூஸ் செய்யும் சிம் கார்டுகள் 13 இலக்க எண்ணுடன் வரும்... இவ்ளோதாங்க விஷயம். இதனால், நாம் உபயோகப்படுத்தும் செல்போன் நம்பரில் எந்த மாறுதலும் இருக்காது. எனவே, 13 இலக்கத்துக்கு மாற வேண்டுமா என்று எல்லாம் கவலைப்படத் தேவையில்லை. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP