இந்தியாவில் ஒரே மாதத்தில் 5ஜி: ஹுவேயி உறுதி

இந்தியாவில் 5ஜி சேவைகளை துவக்க தயாராக உள்ளதாகவும், இந்திய அரசின் ஒப்புதல் கிடைத்தால் ஒரே மாதத்தில் 5ஜி சேவையின் சோதனைகளை துவக்க முடியும், என்றும் சீன நிறுவனமான ஹுவேயி தெரிவித்துள்ளது.
 | 

இந்தியாவில் ஒரே மாதத்தில் 5ஜி: ஹுவேயி உறுதி

இந்தியாவில் 5ஜி சேவைகளை துவக்க தயாராக உள்ளதாகவும், இந்திய அரசின் ஒப்புதல் கிடைத்தால் ஒரே மாதத்தில் 5ஜி சேவையின் சோதனைகளை துவக்க முடியும், என்றும் சீன நிறுவனமான ஹுவேயி தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் 5ஜி சேவைகளை அமல்படுத்துவதில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில் முக்கியமாக சீனாவை சேர்ந்த ஹுவேயி நிறுவனம் முன்னிலை வகித்து வருகிறது. கட்டமைப்பில் இந்த நிறுவனம், சர்வதேச அளவில் பல்வேறு ஏற்பாடுகளையும் ஆராய்ச்சிகளையும் செய்துள்ளது.

ஆனால், ஹுவேயி நிறுவனம், அமெரிக்காவில் கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. அந்நிறுவனத்தின் 5ஜி சேவைகள், அமெரிக்க தேசப் பாதுகாப்புக்கு ஆபத்து, என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளதால், அங்கு 5ஜி சேவை துவங்குவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் 5ஜி சோதனைகளை துவக்க, இந்திய அரசின் ஒப்புதலுக்காக ஹுவேயி நிறுவனம் காத்திருக்கிறது.

இது குறித்து பேசிய ஹுவேயி இந்தியாவின் தலைவர் ஜெய் சென், "இந்திய அரசுடன் எனது அனைத்து முயற்சிகளும் நல்லவிதமாகவே முடிந்துள்ளன. நாங்கள் தயாராக உள்ளோம். தொலைத்தொடர்பு ஆணையத்தின் அனுமதி பெற்றவுடன், ஒரே மாதத்தில் சோதனைகளை செய்ய தயாராக இருக்கிறோம். ஏர்டெல், ஜியோ, பிஎஸ்என்எல் உள்ளிட்ட பெரிய நிறுவனங்களுடனும், இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்" என்று கூறினார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP