48 மெகாபிக்சல் கேமரா கொண்ட ஹானர் ஸ்மார்போன் இந்தியாவுக்கு வந்தாச்சு!

ஹானர் நிறுவனம், 48 மெகாபிக்சல் கொண்ட சோனியின் அதிநவீன கேமராவுடன் ஹானர் வியூ 20 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ.37,999 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 | 

பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் சமீபத்தில் பல கேமராக்களை கொண்டு நவீன மொபைல் போன்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த வரிசையில் ஹானர் நிறுவனம் சமீபத்தில் 40 மெகாபிக்ஸல் உள்ளிட்ட 3 கேமராக்கள் கொண்ட P20 ப்ரோ, MATE 20 ப்ரோ என்ற அதிநவீன ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு, வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து, தற்போது வியூ 20 என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் 48 மெகாபிக்சல் கொண்ட சோனி நிறுவனத்தின் IMX586 என்ற பின்பக்க கேமராவுடன், TOF 3D சென்சாரும் கொண்டுள்ளது. மேலும், 25 மெகாபிக்சல் முன்பக்க கேமராவும், இதில் உள்ளது. கிரின் 980 பிராசஸர், 8 ஜிபி ரேம், 4000 mAhபேட்டரி உள்ளிட்ட வசதிகளும் இதில் உள்ளன. முக்கியமாக, டிஸ்ப்ளேவின் மேல் பகுதியில் கேமராவுக்கு இடமும் ஒதுக்கும் நாட்ச் முறையை பின்பாற்றாமல், டிஸ்ப்ளேவின் ஓரத்திலேயே, முன்பக்க கேமரா செயல்படும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த வியூ 20.

இந்தியாவில் 37,999 ரூபாய்க்கு விற்பனைக்கு வருகிறது இந்த போன். ஆன்லைனில் அமேசான் நிறுவனத்தில் இந்த மொபைல் விரைவில் விற்பனைக்கு வருகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP