வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், மெசஞ்சர் அனைத்தையும் இணைக்கிறது பேஸ்புக்!

ஃபேஸ்புக் நிறுவனம், தனது வாட்ஸ்அப், பேஸ்புக் மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய மூன்று சமூக வலைத்தளங்களையும் ஒருங்கிணைத்து, அவற்றின் அனைத்து வாடிக்கையாளர்களும் சேட் செய்யும் வசதியை கொண்டு வர முயற்சித்து வருகிறது.
 | 

சமீப காலமாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள பேஸ்புக் நிறுவனம், புதிய நடவடிக்கைகள் மூலம் வாடிக்கையாளர்களை ஈர்க்க முயற்சித்து வருகிறது. உலகிலேயே அதிகம் பயன்படுத்தப்படும், சேட்டிங் மற்றும் சமூக வலைதளங்களான பேஸ்புக்கின் இன்ஸ்டாகிராம், மெசஞ்சர் மற்றும் வாட்ஸ்அப் ஆகிய மூன்று ஆப்களையும் இணைத்து, அதிலுள்ள அனைத்து வாடிக்கையாளர்களும் ஒருவருக்கொருவர் சேட்டிங் செய்யும் வசதியை கொண்டு வரவுள்ளதாக பேஸ்புக் தரப்பில் கூறப்படுகிறது.  

இந்த மாற்றம் எப்போது நிகழும் என்று பேஸ்புக் தரப்பில் எந்த பதிலும் இல்லை. 3 ஆப்களின் சேட்டிங் ஒருங்கிணைக்கப்பட்டாலும், அதில் நடைபெறும் அனைத்து சேட்டிங் குறுஞ்செய்திகளுமே 'எண்ட் டு எண்ட் என்க்ரிப்ஷன்' எனப்படும் முழுக்க பாதுகாக்கப்பட்டவையாக இருக்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP