ரத்தாகிறதா ஃப்ளிப்கார்ட் வால்மார்ட் ஒப்பந்தம்?

இந்திய அரசின் புதிய ஆன்லைன் வர்த்தக விதிகளை தொடர்ந்து, பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ஃப்ளிப்கார்ட்டை வாங்கும் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்க நிறுவனமான வால்மார்ட் பின் வாங்கலாம் என கூறப்படுகிறது.
 | 

ரத்தாகிறதா ஃப்ளிப்கார்ட் வால்மார்ட் ஒப்பந்தம்?

இந்திய அரசின் புதிய ஆன்லைன் வர்த்தக விதிகளை தொடர்ந்து, பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ஃப்ளிப்கார்ட்டை வாங்கும் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்க நிறுவனமான வால்மார்ட் பின் வாங்கலாம் என கூறப்படுகிறது.

இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுள் ஒன்றான ஃப்ளிப்கார்ட், அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனத்தை வாங்க கடந்த ஆண்டு ஒப்பந்தம் போட்டது. இந்நிலையில், இந்திய அரசு ஆன்லைன் வர்த்தகத்துக்கு புதிய விதிகளை அறிவித்துள்ளது. இது ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

புதிய விதிகளின் படி, ஒரு ஆன்லைன் வர்த்தக நிறுவனம் தன்னிடம் பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்களிடன் நிறுவனங்களில் பங்கு வைத்திருக்க கூடாது. மேலும், ஒரு விற்பனையாளருடன் தாங்கள் மட்டும் தனி ஒப்பந்தம் போட்டு, வேறு எந்த இணைய தளத்திலும், கடைகளிலும் இல்லாத பொருட்களை பிரத்யேகமாக தங்கள் இணையதளத்தில் விற்க கூடாது, என்றும் புதிய விதிகள் அமல்படுத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து, ஃப்ளிப்கார்ட் நிறுவனம் கடும் பின்னடைவை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனங்களுடன் தனி ஒப்பந்தம் போட்டு, தங்களுக்கென பிரத்யேகமாக  விற்று வரும் மொபைல்கள் மூலம், ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் 50% வருவாய் கிடைப்பதாக கூறப்படுகிறது. இதனால், இந்த புதிய விதி, அந்த நிறுவனத்தை கடுமையாக பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பிரபல மார்கன் ஸ்டேன்லி நிறுவனம், ஒப்பந்தத்தில் இருந்து வால்மார்ட் பின்வாங்க வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP