செல்போன் நிறுவனங்களுடன் தகவல் பரிமாற்றம்: ஒப்புக்கொண்டது பேஸ்புக்

செல்போன் நிறுவனங்களுக்கு தனது பயனீட்டாளர்கள் குறித்த தகவல்களை பகிர்ந்து கொள்ள ஒப்பந்தம் போட்டுக்கொண்டதை பேஸ்புக் ஒப்புக்கொண்டுள்ளது.
 | 

செல்போன் நிறுவனங்களுடன் தகவல் பரிமாற்றம்: ஒப்புக்கொண்டது பேஸ்புக்

செல்போன் நிறுவனங்களுக்கு தனது பயனீட்டாளர்கள் குறித்த தகவல்களை பகிர்ந்து கொள்ள ஒப்பந்தம் போட்டுக்கொண்டதை பேஸ்புக் ஒப்புக்கொண்டுள்ளது.

அமெரிக்க தேர்தலின் போது பேஸ்புக் பயனீட்டாளர்களின்  தனிப்பட்ட தகவல்கள் குறித்து கேம்பிரிட்ஜ் அனலிட்டிக்கா நிறுவனம் திருடியதாக எழுந்த குற்றச்சாட்டு உலகளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து அதற்காக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் அமெரிக்க நாடாளுமன்றம் முன்பு மன்னிப்பு கேட்டார். மேலும் இனி தனது பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்திருந்தார்.  இந்நிலையில், தற்போது பேஸ்புக் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கி உள்ளது. 

60 செல்போன் நிறுவனங்களுடன் பயனர்களின் தகவல்களை பகிர்ந்து கொண்டதை ஒப்புக்கொண்டுள்ளது பேஸ்புக் நிறுவனம். இதன்மூலம் எந்த செல்போனில் பேஸ்புக் பயன்படுத்தப்படுகிறதோ, அந்த செல்போன் நிறுவனம் பயன்பாட்டாளர் மற்றும் அவர்களது நண்பர்களின் தகவல்களை தெரிந்து கொள்ளும் படி ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. 

இதன் மூலம் செல்போன் நிறுவனங்கள் தனி மனிதரின் மதம், அரசியல் பார்வை, அவர் செய்யும் தொழில், கல்வி மற்றும் உறவுகள் பற்றிய தகவல்களை பெற்றுக்கொண்டு இருந்தது. இந்த ஓப்பந்தம் கடந்த 2010ம் ஆண்டு போடப்பட்டதாகவும், ஹுவாய் நிறுவனத்தின் ஒப்பந்தம் வரும் வாரத்துடன் முடிவடைவதாகவும் பேஸ்புக் தெரிவித்துள்ளது. மேலும் பேஸ்புக் பிரபலமாவதற்கு முன்பே ஆப்பிள், சாம்சங் போன்ற நிறுவனங்களுடன் இந்த ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளதாகவும், இவை வரையறுக்கப்பட்ட ஒப்பந்தம் தான் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

உலகில் 3வது பெரிய செல்போன் உற்பத்தியாளரான ஹுவாய் நிறுவனத்தை அமெரிக்க உளவுத்துறை நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் நிறுவனம் என அறிவித்துள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP