1. Home
  2. வர்த்தகம்

'டெஸ்லா' கார் விலையை குறைக்க அதிரடி நடவடிக்கை!

'டெஸ்லா' கார் விலையை குறைக்க அதிரடி நடவடிக்கை!

பிரபல டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய காரை, நடுத்தர வாடிக்கையாளர்களும் வாங்கவேண்டும் என்பதற்காக, தனது 7 சதவீத பணியாளர்களை நீக்கி, காரின் விலையை குறைக்க அந்நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

ஈலான் மஸ்க்கின் டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனம், மின்சாரத்தால் இயங்கும் நவீன கார்களை உருவாக்கி, பிரபலமடைந்தது. அட்டகாசமான டிசைனுடன், ஸ்போர்ட்ஸ் கார் போல காட்சியளிக்கும் டெஸ்லா கார்கள், மின்சார மோட்டார் கொண்டே அதிவேகத்தில் செல்லும் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டு வருகின்றன. டெஸ்லாவின் முதல் இரண்டு மாடல்களும், பெரும் பணக்காரர்கள் மட்டுமே வாங்க கூடிய வகையில் அதிக விலை கொண்டதாக இருந்தது. இந்நிலையில் தனது மூன்றாவது மாடல் காரை, நடுத்தர மக்களும் பெறும் வகையில், அதை குறைந்த விலையில் அறிமுகப்படுத்த அந்நிறுவனம் முடிவெடுத்தது.

இதனால் டெஸ்லா நிறுவனம் தனது பணியாளர்கள் 7 சதவீதம் பேரை குறைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் வரை 45,000 பேர் அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், 7% பேர் குறைக்கப்பட்டால், சுமார் 3,150 பேர் வேலை இழப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பை தொடர்ந்து டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் 13% சரிந்தன.

அந்நிறுவனத்தின் மாடல் 3 கார் அறிமுகப்படுத்தப்பட்டபோது, 59,000 டாலர்கள் அதாவது சுமார் ரூ.42 லட்சத்திற்கு விற்கப்பட்டு வந்த நிலையில், ஒருசில வசதிகளை குறைத்து, 32 லட்ச ரூபாய்க்கு அடிப்படை மாடலை விற்று வந்தது டெஸ்லா. இந்நிலையில் இந்த புதிய நடவடிக்கையால் மாடல் 3ன் விலை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like