1. Home
  2. வர்த்தகம்

இனி வாடிக்கையாளர்களிடம் வியாபாரிகள் இந்த தகவலை கேட்கக்கூடாது..!!

இனி வாடிக்கையாளர்களிடம் வியாபாரிகள் இந்த தகவலை கேட்கக்கூடாது..!!

மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் ரோகித் குமார் சிங் கூறுகையில், வாடிக்கையாளர்கள் தங்கள் தனிப்பட்ட தொடர்பு எண் விவரங்களைத் தரவில்லை என்றால் ரசீது போட முடியாது என்று வியாபாரிகள் கூறுகின்றனர். இது நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி கட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கை ஆகும். இவ்வாறு தகவல்களை சேமிப்பது தவறான செயலாகும்.

எனவே, வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு சில்லரை வியாபாரத்துறைக்கும், இந்திய தொழில் சம்மேளனத்துக்கும், இந்திய வர்த்தக தொழில் சம்மேளனத்துக்கும் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவில், குறிப்பிட்ட சேவைகளை வழங்குவதற்கு வாடிக்கையாளர்கள் தங்கள் செல்போன் எண்களைத் தரவேண்டும் என்று சில்லரை வியாபாரிகள் வற்புறுத்தக்கூடாது என உத்தரவில் குறிப்பிடபட்டுள்ளதாக தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like