12 ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள் (25-08-2020)

12 ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள் (25-08-2020)

12 ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள் (25-08-2020)
X

கிரகநிலை:

ராசியில் செவ்வாய் - தைரிய ஸ்தானத்தில் ராஹூ, சுக்ரன்   - பஞ்சம ஸ்தானத்தில் புதன், சூர்யன் - களத்திர ஸ்தானத்தில் சந்திரன்  - பாக்கிய ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ)  என கிரகங்கள் வலம் வருகின்றன. 

இன்று பகல் 1.30 மணிக்கு சந்திர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று மனம் மகிழும் சம்பவங்கள் உண்டாகும். மனநிம்மதியும், மனோதிடமும் உண்டாகும். தெளிவான சிந்தனையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள். திடீர் செலவு உண்டாகும். புதிய நட்பு கிடைப்பதுடன் அவர்களது ஆலோசனையும் வெற்றிக்கு உதவும். தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகி நன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

கிரகநிலை:

குடும்ப ஸ்தானத்தில்  ராஹூ, சுக்ரன்  ன் - சுக ஸ்தானத்தில்  புதன், சூர்யன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன்  - அஷ்டம ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ) -  விரைய ஸ்தானத்தில் செவ்வாய்   என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று பகல் 1.30 மணிக்கு சந்திர பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். போட்டிகள் குறையும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தெளிவாக சிந்தித்து எதனையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். புதிய பதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் விருந்தினர்கள் வருகை இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற முழுமூச்சாக பாடுபடுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

கிரகநிலை:

ராசியில்  ராஹூ, சுக்ரன்  - தைரிய ஸ்தானத்தில்  புதன், சூர்யன் - பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன்  - களத்திர ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ) - லாப ஸ்தானத்தில்  செவ்வாய் என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று பகல் 1.30 மணிக்கு சந்திர பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும், உற்சாகமும் காணப்படும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த  பிரச்சனைகள் தீரும். பிள்ளைகள் பற்றிய கவலைகள் நீங்கும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த பின்தங்கிய நிலை மாறும். எதிர்பார்த்த ஆர்டர்கள் வந்து சேரும். வியாபார போட்டிகள் தடை தாமதங்கள் நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

கிரகநிலை:

தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில்  புதன், சூர்யன் -சுக  ஸ்தானத்தில் சந்திரன்  - ரண, ருண ஸ்தானத்தில்  கேது, குரு (வ), சனி (வ) - தொழில் ஸ்தானத்தில்  செவ்வாய் - அயன, சயன, போக ஸ்தானத்தில்  ராஹூ, சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று பகல் 1.30 மணிக்கு சந்திர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்களை செய்து முடிப்பதில் திறமை வெளிப்படும். பணவரத்து கூடும். மாணவர்களுக்கு கல்வியில்  நினைத்ததை விட கூடுதல் பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். மனம் தளராது செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் மந்தமான  போக்கு காணப்பட்டாலும் பணவரத்து  குறைவு இருக்காதுதொழில்  கூட்டாளிகளுடன்  அனுசரித்து செல்வது நன்மைதரும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

கிரகநிலை:

ராசியில் புதன், சூர்யன் - தைரிய ஸ்தானத்தில் சந்திரன்  - பஞ்சம ஸ்தானத்தில்  கேது, குரு (வ), சனி (வ) - பாக்கிய ஸ்தானத்தில்  செவ்வாய் - லாப ஸ்தானத்தில்  ராஹூ, சுக்ரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று பகல் 1.30 மணிக்கு சந்திர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது. வீண் அலைச்சலும் கூடுதல் உழைப்பும் இருக்கும். குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு அதனால் நிம்மதி குறையலாம். வாழ்க்கை துணையின் பேச்சை கேட்டு  நடக்க வேண்டி இருக்கும். கவுரவம் அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த உதவிகள்  கிடைக்கும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது. சக ஊழியர்கள் நட்புடன் பழகுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

கிரகநிலை:

தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - சுக  ஸ்தானத்தில்  கேது, குரு (வ), சனி (வ) -  அஷ்டம ஸ்தானத்தில்  செவ்வாய் - தொழில்  ஸ்தானத்தில்  ராஹூ, சுக்ரன்  - விரைய ஸ்தானத்தில்  புதன், சூர்யன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று பகல் 1.30 மணிக்கு சந்திர பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று மன தைரியம் அதிகரிக்கும். எல்லா காரியங்களும் சாதகமாக நடந்து முடியும். எல்லா இடங்களிலும் மரியாதையும், கவுரவமும் அதிகரிக்கும். எல்லாதரப்பினரிடம் இருந்தும் ஆதரவு கிடைக்கும்நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் தலை நிமிர்ந்து நடப்பார்கள். மற்றவர்கள் செய்கைகளால்  மனவருத்தம் உண்டாகலாம். நீண்டநாள் இழுபறியாக இருந்து வந்த பிரச்சனை முடிவுக்கு வரும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

கிரகநிலை:

ராசியில்  சந்திரன் - தைரிய ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ) -  களத்திர ஸ்தானத்தில்  செவ்வாய் -  பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ, சுக்ரன்  - லாப ஸ்தானத்தில்  புதன், சூர்யன்   என கிரகங்கள் வலம் வருகின்றன. 

இன்று பகல் 1.30 மணிக்கு சந்திர பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று எதிர்பார்த்த பணவரத்து தாமதப்படலாம். மன நிம்மதியை குலையலாம். வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். எனவே கவனமாக எதிலும் ஈடுபடுவது நல்லது. தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். எந்த காரியத்தையும் ஆராய்ந்து பார்த்து செய்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு மேல் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவார்கள். பிடித்தமான இடத்திற்கு வேலை மாற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

கிரகநிலை:

தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில்  செவ்வாய் - அஷ்டம  ஸ்தானத்தில் ராஹு, சுக்ரன்  - தொழில் ஸ்தானத்தில்  புதன், சூர்யன் - விரைய ஸ்தானத்தில் சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று பகல் 1.30 மணிக்கு சந்திர பகவான் ராசிக்கு மாறுகிறார்.

பலன்:

இன்று தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சலும், பண விரயமும் இருக்கும்புதிய  ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகும். மனதில் வியாபாரம் பற்றிய கவலை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை கூடுதல் கவனமுடன்  செய்வது நல்லதுகுடும்பத்தில் நிம்மதி குறையும் படியான சூழ்நிலை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

கிரகநிலை:

ராசியில்  கேது, குரு (வ), சனி (வ) - பஞ்சம ஸ்தானத்தில்  செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில்  ராஹு, சுக்ரன்  - பாக்கிய ஸ்தானத்தில்  புதன், சூர்யன் - லாப ஸ்தானத்தில் சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று பகல் 1.30 மணிக்கு சந்திர பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று பிள்ளைகள் நலனில் அக்கறை காண்பீர்கள். உடல்களைப்பும், சோர்வும் உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது. பெண்களுக்கு எந்த காரியத்தில் ஈடுபடும் போதும் யோசித்து செயல்படுவது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம். செலவு கூடும். மாணவர்களுக்கு  விளையாட்டில் ஆர்வம் உண்டாகும். பாடங்களை கவனமாக படிப்பது முன்னேற்றத்துக்கு உதவும். கணவன், மனைவிக்கிடையில் அன்பு அதிகரிக்கும்

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

கிரகநிலை:

சுக ஸ்தானத்தில்  செவ்வாய் -  ரண, ருண  ஸ்தானத்தில்  ராஹூ, சுக்ரன்  - அஷ்டம ஸ்தானத்தில்  புதன், சூர்யன் - தொழில் ஸ்தானத்தில் சந்திரன்  - அயன, சயன,  போக ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ)   என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று பகல் 1.30 மணிக்கு சந்திர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று தொழில் வியாபாரம்  முன்னேற்றமடையும்போட்டிகள் குறையும்தொழில் தொடர்பான தகராறுகள் நீங்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்க பெறுவீர்கள். கடன் பிரச்சனை தீரும்உத்தியோகத்தில் இருப்பவர்கள்  நிர்வாகத் திறமை வெளிப்படும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எழுத்து தொழிலில் இருப்பவர்கள் முன்னேற்றம் அடைவார்கள். ஏதாவது ஒரு வகையில் அடுத்தவரிடம் வீண் பேச்சு கேட்க நேரலாம் கவனம் தேவை.  

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

கிரகநிலை:

தைரிய ஸ்தானத்தில்  செவ்வாய் -  பஞ்சம ஸ்தானத்தில்  ராஹூ, சுக்ரன்  - களத்திர ஸ்தானத்தில்  புதன், சூர்யன் - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன்  - லாப ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ)    என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று பகல் 1.30 மணிக்கு சந்திர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும்திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை சாதகமான பலன் தரும்கணவன், மனைவிக்கிடையே சந்தோஷம் நிலவும்பிள்ளைகளுக்காக  செய்யும் பணிகள் திருப்தி தரும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் இருந்த தகராறுகள் நீங்கும். பெண்கள் வீண் பேச்சுக்களை குறைத்து செயலில் கவனம் செலுத்துவது நல்லது. பணவரத்து திருப்தி தரும். கோபத்தை குறைப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

கிரகநிலை:

தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில்  செவ்வாய்  - சுக ஸ்தானத்தில்  ராஹூ, சுக்ரன்  - ரண ருண ரோக ஸ்தானத்தில்  புதன், சூர்யன் - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன்  - தொழில்  ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ) என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று பகல் 1.30 மணிக்கு சந்திர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று நீங்கள் செய்யும் காரியங்களுக்கு எல்லா தரப்பினரிடம் இருந்தும் ஆதரவு கிடைக்கும். நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள். பிள்ளைகளின் கல்வி தொடர்பான பிரச்சனைகள்  நீங்கும். அலுவலகத்தில் உங்கள் திறமை வெளிப்படும். சக ஊழியர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். மற்றவர்கள் ஆலோசனை கேட்டு உங்களை நாடி வருவார்கள். உங்களை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள்

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

Next Story
Share it