1. Home
  2. ஜோதிடம்

அக்டோபர் மாத பலன்கள் - 2021 கும்ப ராசியினரே இந்த மாதம் எதிலும் ஆதாயம் கிடைக்கும்.

அக்டோபர் மாத பலன்கள் - 2021 கும்ப ராசியினரே இந்த மாதம் எதிலும் ஆதாயம் கிடைக்கும்.

அக்டோபர் மாத பலன்கள் - 2021 கும்ப ராசியினரே இந்த மாதம் எதிலும் ஆதாயம் கிடைக்கும்.

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

கிரகநிலை:

தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராஹூ - ரண ருண ஸ்தானத்தில் புதன் (), செவ்வாய், சூர்யன் - களத்திர ஸ்தானத்தில் சுக்கிரன் - அஷ்டம ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சனி, குரு () என கிரகநிலை உள்ளது.

3ம் தேதி - ஞாயிற்றுக்கிழமை அன்று சுக்கிர பகவான் அஷ்டம ஆயுள் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

4ம் தேதி புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

14ம் தேதி குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

18ம் தேதி சூர்ய பகவான் சப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

23ம் தேதி செவ்வாய் பகவான் சப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

30ம் தேதி புதபகவான் சப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

31ம் தேதி சுக்கிர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்.

மேஷ ராசியினரே இந்த மாதம் எதையும் சாதிக்கும் திறமை அதிகமாகும். நினைத்த காரியத்தை நினைத்தபடி நடத்தி முடிக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். தேவையற்ற மனகவலை உண்டாகும்.

தொழில், வியாபாரம் சுமாராக நடக்கும் பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் இருக்கும். ஆர்டர்கள் பெறுவதில் தாமதம் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை செய்து முடித்து நன்மை பெறுவீர்கள்.

குடும்பத்தில் சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். உறவினர் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் தாமதம் ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் வருந்தும்படியான சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகள் நீங்கள் சொல்வதை காதில் வாங்காதவர்போல் இருப்பார்கள் எனவே எல்லோரையும் அனுசரித்து செல்வதால் நன்மை உண்டாகும்.

பெண்கள் நினைத்த காரியத்தை செய்து முடிக்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் மனக்கவலை உண்டாகும்.

மாணவர்கள் சோம்பேறிதனத்தை விட்டுவிட்டு பாடங்களை நன்கு படிப்பது வெற்றிக்கு வழிவகுக்கும்.

அசுபதி:

இந்த மாதம் தங்களது முழுத்திறமைகளையும் காட்டினால் மட்டுமே நீங்கள் எடுத்த காரியங்கள் முடியும். வெளியூர் பயணங்கள் வந்து சேரும். ஒரே நேரத்தில் பலவிதமான வாய்ப்புகள் வந்து சேரும்போது தகுந்த ஆலோசனைகளை மேற்கொண்டு முடிவுகளை எடுப்பது நல்லது.

பரணி:

இந்த மாதம் எதிர்பார்த்த காரியங்கள் திருப்திகரமாக நடக்கும். நெருக்கடியாக இருந்த பிரச்சனைகள் நீங்கும். பணவரத்து அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பயணங்களும் அவற்றால் நன்மைகளும் உண்டாகும். சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபடுவீர்கள்.

கார்த்திகை:

இந்த மாதம் மற்றவர்கள் மேல் இரக்கம் ஏற்படும். நீண்டநாட்களாக இருந்த பிரச்சனைகள் தீரும். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் பெருமை சேரும். உறவினர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் கூடும். வீடு கட்டும் வாய்ப்பு கூடி வரும்

பரிகாரம்:அறுகம்புல்லை விநாயகருக்கு அர்ப்பணிக்கவும்.

சந்திராஷ்டம தினங்கள்: 10, 11

அதிர்ஷ்ட தினங்கள்: 25, 26

அக்டோபர் மாத பலன்கள் - 2021 கும்ப ராசியினரே இந்த மாதம் எதிலும் ஆதாயம் கிடைக்கும்.

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)

கிரகநிலை:

ராசியில் ராஹூ - பஞ்சம ஸ்தானத்தில் புதன்(), செவ்வாய், சூர்யன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்கிரன் - களத்திர ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சனி, குரு () என கிரகநிலை உள்ளது.

3ம் தேதி - ஞாயிற்றுக்கிழமை அன்று சுக்கிர பகவான் சப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

4ம் தேதி புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

14ம் தேதி குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

18ம் தேதி சூர்ய பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

23ம் தேதி செவ்வாய் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

30ம் தேதி புதபகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

31ம் தேதி சுக்கிர பகவான் அஷ்டம ஆயுள் ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்.

ரிஷப ராசியினரே இந்த மாதம் அறிவுதிறன் அதிகரிக்கும். உங்களது பேச்சு மற்றவரை மயக்குவதுபோல் இருக்கும். ருசியான உணவை உண்டு மகிழ்வீர்கள். சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவீர்கள்.

தொழில் வியாபாரம் முன்னேற்றம் காணும். தொழில் வளர்ச்சிக்காக சில திட்டங்களை செயல்படுத்த முடிவெடுப்பீர்கள். பண வரத்து திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு செயல்திறமை கூடும். பயணங்களும் செல்ல நேரிடலாம்.

குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். சுற்றத்தினர் வருகை இருக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு கூடும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். குடும்ப வருமானம் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

பெண்களுக்கு அறிவு திறன் அதிகரிக்கும். இனிமையான வார்த்தைகளால் சிக்கலான காரியத்தை கூட எளிதாக செய்து முடிப்பீர்கள்.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சில திட்டங்களை ஆலோசிப்பீர்கள்.

கார்த்திகை:

இந்த மாதம் புதியதாக வீடு, வாகனம் வாங்கலாம். பழைய வீட்டைப் புதுப்பிப்பதற்கும் சிறந்த காலமாகும். பிறருடைய மனம் நோகும்படி வார்த்தைகளை வாங்கிக் குவிப்பீர். பொழுதுபோக்கான விழாக்களில் கலந்து கொள்வீர்கள். உங்களை விட்டுப் பிரிந்த நண்பர்கள் ஒன்று சேர்வார்கள்.

ரோகினி:

இந்த மாதம் தொழில் வியாபாரம் முன்னேற்றமாக நடக்கும். லாபம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கலாம். கூட்டுத்தொழிலில் லாபம் கிடைக்கும். நம்பிக்கை உகந்தவர்களாக பழகுவார்கள். வரவுக்குத் தகுந்த செலவை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். வரி செலுத்துவதில் முறைகளைப் பின்பற்றுங்கள். வேலையாட்கள் சில பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.

மிருகசீரிஷம்:

இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு குறைவால் மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் ஏற்படும். வேலை பார்த்து கொண்டே உபதொழில் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். இடமாற்றம் கிடைக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.

பரிகாரம்:வெள்ளிக்கிழமை தோறும் பெருமாள் கோவிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றவும்.

சந்திராஷ்டம தினங்கள்: 12, 13

அதிர்ஷ்ட தினங்கள்: 27, 28

அக்டோபர் மாத பலன்கள் - 2021 கும்ப ராசியினரே இந்த மாதம் எதிலும் ஆதாயம் கிடைக்கும்.

மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

கிரகநிலை:

சுகஸ்தானத்தில் புதன்(), செவ்வாய், சூர்யன் - பஞ்சம ஸ்தானத்தில் சுக்கிரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சனி, குரு () - அயனசயன போக ஸ்தானத்தில் ராஹூ என கிரகநிலை உள்ளது.

3ம் தேதி - ஞாயிற்றுக்கிழமை அன்று சுக்கிர பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

4ம் தேதி புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

14ம் தேதி குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

18ம் தேதி சூர்ய பகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

23ம் தேதி செவ்வாய் பகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

30ம் தேதி புதபகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

31ம் தேதி சுக்கிர பகவான் சப்தம ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்.

மிதுன ராசியினரே இந்த மாதம் எதிர்பார்த்த பணம் கிடைக்கலாம். காரிய வெற்றி உண்டாகும். வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். திடீர் செலவு ஏற்படும். சிலருக்கு மருத்துவ செலவு ஏற்படும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும்.

தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். கடன் விவகாரங்களில் கவனம் தேவை. தொழில் தொடர்பான காரியங்கள் தாமதமாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயந்து வேலை செய்ய வேண்டி இருக்கும். உழைப்பு அதிகரிக்கும்.

குடும்பத்தில் உறவினருடன் கருத்து வேறுபாடு உண்டாகலாம். வீட்டில் உள்ள பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. சொத்து விவகாரங்களில் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையில் இடைவெளி குறையும். பிள்ளைகள் நலனில் கவனம் செலுத்துவீர்கள்.

பெண்களுக்கு எதிர்பாராத செலவு உண்டாகும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும்.

மாணவர்களுக்கு கல்விக்கான பணிக ளில் தாமதம் உண்டாகும். உழைப்பு அதிகரிக்கும்.

மிருகசீரிஷம்:

இந்த மாதம் சற்று சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியிருக்கும். உங்கள் உழைப்புக்கு தகுந்த செல்வாக்கும் பணவரவும் கிடைக்கும். மேல அதிகாரிகளிடம் அனுசரனையாக நடந்து கொள்ளவும். திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடித்து மன நிம்மதி அடைவீர்கள். பணவரத்து அதிகரிக்கும். மற்றவர்கள் மேல் இரக்கம் உண்டாகும்.

திருவாதிரை:

இந்த மாதம் பின்தங்கிய நிலையில் இருந்து மீண்டு முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கப் போகிறீர்கள். தீயோர் சேர்க்கையால் அவதிப்பட்டவர்கள் அவர்கள் பிடியில் இருந்து விடுபடுவீர்கள். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். உங்களின் மீதான அவப்பெயர் மறைந்து செல்வாக்கு அதிகரித்து மிளிரும்.

புனர்பூசம்:

இந்த மாதம் சிறப்பான முன்னேற்றம் உண்டு. இசைத் துறைகளைச் சார்ந்தவர்களுக்கு பொன்னான வாய்ப்புகள் வந்து சேரும். வேலை நிமித்தமாக அடிக்கடி வெளியூருக்கும் வெள்நாட்டிற்கும் செல்ல வேண்டி வரும். உங்களது உடமைகளை கவனமுடன் பார்த்துக் கொள்ளவும். பணம் மற்றும் புதிய நண்பர்கள் சேர்க்கை கிடைக்கும்.

பரிகாரம்: புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் சிவன் ஆலயத்திற்கு செல்லுங்கள்.

சந்திராஷ்டம தினங்கள்: 14, 15

அதிர்ஷ்ட தினங்கள்: 29, 30, 31

அக்டோபர் மாத பலன்கள் - 2021 கும்ப ராசியினரே இந்த மாதம் எதிலும் ஆதாயம் கிடைக்கும்.

கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

கிரகநிலை:

தைரிய ஸ்தானத்தில் புதன்(), செவ்வாய், சூர்யன் - சுக ஸ்தானத்தில் சுக்கிரன் - பஞ்சம ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில் சனி, குரு () - லாப ஸ்தானத்தில் ராஹூ என கிரகநிலை உள்ளது.

3ம் தேதி - ஞாயிற்றுக்கிழமை அன்று சுக்கிர பகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

4ம் தேதி புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

14ம் தேதி குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

18ம் தேதி சூர்ய பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

23ம் தேதி செவ்வாய் பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

30ம் தேதி புதபகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

31ம் தேதி சுக்கிர பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்.

கடக ராசியினரே இந்த மாதம் பேச்சை கட்டுப்படுத்திக்கொள்வது நன்மை தரும். பொருள் சேர்க்கை உண்டாகும். சிற்றின்ப செலவுகள் அதிகரிக்கும். நண்பர்களுக்கு உதவிகள் செய்வீர்கள். பணவரத்து திருப்தி தரும். வீண்பழி ஏற்படலாம். நிதானமாக செயல்படுவது நல்லது.

தொழில் வியாபாரம் மெத்தனமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவது ஆறுதல் தரும். வியாபாரம் தொடர்பான காரியங்களில் கூடுதல் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே மனம்விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளை தட்டி கொடுத்து எதையும் செய்ய சொல்வது நல்லது.

பெண்களுக்கு பணவரத்து திருப்தி தரும். வீண்பேச்சை குறைப்பது நன்மை தரும்.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய அதிக கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது.

புனர்பூசம்:

இந்த மாதம் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் சற்று இழுபறிக்குப் பின்னே நடைபெறும். கொஞ்சம் சிரமம் எடுத்தால் மிக சிறப்பாக நடந்தேறும். முக்கிய முடிவுகளை குடும்பப் பெரியோர்களின் ஆலோசனைகளைக் கேட்டு எடுக்கவும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்த வளர்ச்சி பெறும் பழைய பாக்கிகள் வசூலாகும்.

பூசம்:

இந்த மாதம் மன மகிழ்ச்சி ஏற்படும் சம்பவங்கள் நிகழும். இழந்த சொத்து மீண்டும் கைக்கு வந்து சேரும். காரியத்தை கச்சிதமாக முடிக்கும் திறமை வந்து சேரும். தடைபட்ட காரியங்கள் தடைநீங்கி நன்றாக நடந்து முடியும். வாக்குவன்மையால் நன்மைகள் ஏற்படும். தெய்வ சிந்தனை அதிகரிக்கும். பண பிரச்சனை நீங்கும்.

ஆயில்யம்:

இந்த மாதம் நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே விட்டுக் கொடுக்கும் மனப் பான்மை அதிகரிக்கும். பிள்ளைகள் எதிர்காலத்திற்காக சில பணிகளை மேற்கொள்வீர்கள். தேவையான வசதி வாய்ப்புகள் வந்து சேரும்.

பரிகாரம் : பிரதோஷ நேரத்தில் சிவனுக்கு அபிஷேகம் செய்து வர குழப்பங்கள் அகலும். மனம் தெளிவடையும்

சந்திராஷ்டம தினங்கள்: 16, 17

அதிர்ஷ்ட தினங்கள்: 1, 2

அக்டோபர் மாத பலன்கள் - 2021 கும்ப ராசியினரே இந்த மாதம் எதிலும் ஆதாயம் கிடைக்கும்.

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

கிரகநிலை:

தனவாக்கு ஸ்தானத்தில் புதன்(), செவ்வாய், சூர்யன் - தைரிய ஸ்தானத்தில் சுக்கிரன் - சுக ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி, குரு () - தொழில் ஸ்தானத்தில் ராஹூ என கிரகநிலை உள்ளது.

3ம் தேதி - ஞாயிற்றுக்கிழமை அன்று சுக்கிர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

4ம் தேதி புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

14ம் தேதி குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

18ம் தேதி சூர்ய பகவான் தைரிய வீர்ய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

23ம் தேதி செவ்வாய் பகவான் தைரிய வீர்ய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

30ம் தேதி புதபகவான் தைரிய வீர்ய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

31ம் தேதி சுக்கிர பகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்.

சிம்ம ராசியினரே இந்த மாதம் பணவரத்து அதிகரிக்கும். மனதில் உற்சாகம் பிறக்கும். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கி சாதகமான பலன்தரும். எதிலும் தயக்கம் காட்டமாட்டீர்கள். கண்மூடித்தனமாக எதிலும் ஈடுபடாமல் யோசித்து செய்வது நல்லது.

தொழில் வியாபாரம் தொய்வு நீங்கி சூடுபிடிக்கும். வாடிக்கையாளர்களின் வரவு கண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். நிதி பிரச்சனை நீங்கும். உத்தியோகத்தில் இருப் பவர்கள் எதையும் குழப்பத்துட னேயே செய்ய நேரிடும். சக ஊழியர் களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி நிம்மதியும் சந்தோஷமும் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதி கரிக்கும். பிள்ளைகளின் செயல் சந்தோஷத்தை தரும். பயணங்கள் செல்லும் போது கவனம் தேவை. சகோதரர்களிடம் கருத்து வேற்றுமை உண்டாகலாம்.

பெண்களுக்கு எதிலும் தயக்கம் காட்டாமல் துணிச்சலாக காரியங்களை செய்து முடிப்பீர்கள்.

மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்க பாடுபட்டு படிப்பீர்கள்.

மகம்:

இந்த மாதம் உங்களின் குழந்தைகளால் உங்களுக்குப் பெருமை கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் பார்ட்னர் விவகாரங்களில் கவனம் தேவை. ஆர்டர்கள் கிடைப்பது திட்டமிட்டபடி இல்லாமல் தாமதமாகும். வேலையாட்களிடம் கவனமாக இருப்பது நல்லது. நல்ல முன்னேற்றம் காணலாம். வீண் அலைச்சல் மற்றும் வீண் விரையம் இனி ஏற்படாது.

பூரம்:

இந்த மாதம் நீண்ட நாட்களாக நடந்து முடியாத காரியம் ஒன்று நடக்கும். எதிலும் திட்டமிடல் அவசியம். பலன்கள் சற்று தாமதமாகி கிடைக்கும். மற்றவர்களின் பிரச்சனைகளில் வீண் தலையீடு வேண்டாம். நண்பர்களாக இருப்பவர்கள் கூட விரோதிகளாக மாறும் காலகட்டம் என்பதால் கவனம் தேவை.

உத்திரம்:

இந்த மாதம் கூட்டுத்தொழில் புரிபவர்கள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாக திறமை வெளிப்படும். மேல் அதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள் உயர்வு, மேல் அதிகாரிகளின் அனுசரனையும் கிடைக்கும். தனியார் ஊழியர்களுக்கு நல்ல நிலைமை வந்து சேரும்.

பரிகாரம் : ஞாயிற்றுக்கிழமைதோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்கு சென்று சந்தனாதி தைலத்தை அபிஷேகம் செய்து விளக்கு ஏற்றி வழிபடவும். அனைத்து காரியங்களும் தங்குதடையின்றி நடக்கும்.

சந்திராஷ்டம தினங்கள்: 18, 19, 20

அதிர்ஷ்ட தினங்கள்: 3, 4, 5

அக்டோபர் மாத பலன்கள் - 2021 கும்ப ராசியினரே இந்த மாதம் எதிலும் ஆதாயம் கிடைக்கும்.

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

கிரகநிலை:

ராசியில் புதன்(), செவ்வாய், சூர்யன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன் - தைரிய ஸ்தானத்தில் கேது - பஞ்சம ஸ்தானத்தில் சனி, குரு () - பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ என கிரகநிலை உள்ளது.

3ம் தேதி - ஞாயிற்றுக்கிழமை அன்று சுக்கிர பகவான் தைரிய வீர்ய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

4ம் தேதி புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

14ம் தேதி குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

18ம் தேதி சூர்ய பகவான் தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

23ம் தேதி செவ்வாய் பகவான் தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

30ம் தேதி புதபகவான் தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

31ம் தேதி சுக்கிர பகவான் சுக ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்.

கன்னி ராசியினரே இந்த மாதம் வீண் பிரச்சனையால் மனகுழப்பம் ஏற்படலாம். பயணங்களில் தடங்கல் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடைகள் ஏற்படலாம். எதையும் யோசித்து செய்வது நல்லது.

தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வேகம் இருக்காது. பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் உண்டாகும். போட்டிகள் உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணி சுமை உண்டாகும். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளிடம் பேசும் போது கவனம் தேவை.

குடும்பத்தில் நிம்மதி குறையும். பேசாமல் சென்றால் கூட வீண் பிரச்சனை களை சந்திக்க நேரலாம். கணவன் மனைவிக்கிடையே ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்துசெல்வது நல்லது. பிள்ளைகளிடம் கவனமாக இருப்பது நன்மை தரும்.

பெண்களுக்கு பயணங்களில் எதிர்பாராத தடங்கல் உண்டாகலாம். யோசித்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன்தரும்.

மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைப்பதில் தடை ஏற்படலாம். கவனமாக படிப்பது நல்லது.

உத்திரம்:

இந்த மாதம் வேலை இல்லாமல் காத்திருந்தவர்களுக்கு சரியான வேலை அமையும். புதிதாக பணியில் சேர்ந்தவர்களுக்கு சிறப்புடன் பணியாற்றுவதற்கு வாய்ப்பு கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் இருந்த சிக்கல்கள் தீரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். இழுபறியாக இருந்த காரியம் நன்கு நடந்து முடியும்.

ஹஸ்தம்:

இந்த மாதம் மற்றவர்களிடத்தில் மதிப்பு மரியாதை கிடைக்கும். பணத்தை இழக்க நேரிடலாம். நம்பிக்கையானவர்களிடம் மட்டும் பணத்தைக் கொடுப்பது நல்லது. உயர்பதவிகளை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு நல்ல நிலை வந்து சேரும். உடனிருப்பவர்களால் உங்கள் வாக்கைக் காப்பாற்ற முடியாமல் போகலாம்.

சித்திரை:

இந்த மாதம் வம்பு தும்புகள் வந்து சேரலாம். வீணான கோபமும் ஆத்திரமும் கொள்ள வேண்டாம். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். உடல்நலத்தைப் பொறுத்தவரையில் சுமாராக இருக்கும். வெளிநாட்டிற்கு செல்ல வாய்ப்புகள் கை கூடி வரும். அலுவலகத்தில் உங்கள் திறமை வெளிப்படும். மற்றவர் பாராட்டும் கிடைக்கும்.

பரிகாரம் : புதன்கிழமைதோறும் அருகிலிருக்கும் ஐயப்பன் கோவிலுக்கு சென்று நெய் விளக்கு ஏற்றி வழிபடவும். குடும்பத்தில் இருந்தவந்த பிரச்சனைகள் மாறும்.

சந்திராஷ்டம தினங்கள்: 21, 22

அதிர்ஷ்ட தினங்கள்: 6, 7

அக்டோபர் மாத பலன்கள் - 2021 கும்ப ராசியினரே இந்த மாதம் எதிலும் ஆதாயம் கிடைக்கும்.

துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)

கிரகநிலை:

ராசியில் சுக்ரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - சுக ஸ்தானத்தில் சனி, குரு () - அஷ்டம ஸ்தானத்தில் ராஹூ - விரைய ஸ்தானத்தில் புதன்(), செவ்வாய், சூர்யன் என கிரகநிலை உள்ளது.

3ம் தேதி - ஞாயிற்றுக்கிழமை அன்று சுக்கிர பகவான் தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

4ம் தேதி புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

14ம் தேதி குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

18ம் தேதி சூர்ய பகவான் ராசிக்கு மாறுகிறார்.

23ம் தேதி செவ்வாய் பகவான் ராசிக்கு மாறுகிறார்.

30ம் தேதி புதபகவான் ராசிக்கு மாறுகிறார்.

31ம் தேதி சுக்கிர பகவான் தைரிய வீர்ய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்.

துலா ராசியினரே இந்த மாதம் எதிலும் முன்னேற்றம் காணப்படும். விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர். முக்கிய நபரின் அறிமுகமும், உதவியும் கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். மரியாதை கூடும். திட்டமிட்ட காரியங்கள் நன்றாக நடந்து முடியும்.

தொழில் வியாபாரம் எதிர்பார்த்தபடி சிறப்பாக நடக்கும். பணவரத்தும் அதிகரிக்கும். பழைய கடன்களை திருப்பி செலுத்தக் கூடிய நிலை உருவாகும். உத்தியோகஸ்தர்கள் நிலை மேம்படும்.

குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். வேடிக்கை வினோத நிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் சென்று கலந்து கொள்ள நேரிடும். சிலருக்கு திருமணம் கைகூடும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும். பிள்ளைகளால் நன்மை கிடைக்கும்.

பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருளை வாங்கி மகிழ்வீர்கள்.

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றிபெற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும்.

சித்திரை:

இந்த மாதம் கடன் பிரச்சனை தீரும். பணவரத்து அதிகரிக்கும். எதையும் நிர்ணயிக்கும் திறன் குறையலாம். பணவரத்து தாமதப்படும். கையிருப்பு கரையும். மற்றவர்களுக்காக உதவி செய்யும் போது வீண்பழி சொல் கேட்க நேரலாம். கவனமாக இருப்பது நல்லது. உடல் சோர்வும் ஏற்படலாம்.

ஸ்வாதி:

இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவதன் மூலம் நன்மைகள் உண்டாகும். பிள்ளைகளிடம் அன்புடன் நடந்து கொள்வது நல்ல பலன் தரும். பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள மூன்றாம் நபர் தலையீடு வேண்டாம். திசைபுக்தி அனுகூலமிருந்தால் சுபநிகழ்ச்சிகள் இனிதே நடந்தேறும்.

விசாகம்:

இந்த மாதம் பரம்பரைச் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் மறையும். பெண் நண்பர்களிடம் மிகவும் எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் பழகுங்கள். அவர்களால் சில பிரச்சனைகள் எழலாம். தொழில் வியாபாரம் தொடர்பாக அலைச்சல் இருக்கும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் இழுபறியான நிலை காணப்படும்.

பரிகாரம் : வெள்ளிதோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று ஸ்ரீகருடனுக்கு நெய் விளக்கு ஏற்றி வணங்கி வரவும். உங்கள் துக்கங்கள் சந்தோஷமாக மாறும்.

சந்திராஷ்டம தினங்கள்: 23, 24, 25

அதிர்ஷ்ட தினங்கள்: 8, 9

அக்டோபர் மாத பலன்கள் - 2021 கும்ப ராசியினரே இந்த மாதம் எதிலும் ஆதாயம் கிடைக்கும்.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை)

கிரகநிலை:

ராசியில் கேது - தைரிய ஸ்தானத்தில் சனி, குரு () - களத்திர ஸ்தானத்தில் ராஹூ - லாப ஸ்தானத்தில் புதன்(), செவ்வாய், சூர்யன் - அயன சயன போக ஸ்தானத்தில் சுக்கிரன் என கிரகநிலை உள்ளது.

3ம் தேதி - ஞாயிற்றுக்கிழமை அன்று சுக்கிர பகவான் ராசிக்கு மாறுகிறார்.

4ம் தேதி புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

14ம் தேதி குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

18ம் தேதி சூர்ய பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

23ம் தேதி செவ்வாய் பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

30ம் தேதி புதபகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

31ம் தேதி சுக்கிர பகவான் தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்.

விருச்சிக ராசியினரே இந்த மாதம் எதிர்பார்த்த வசதிகள் கிடைக்கும். எதிலும் லாபம் கிடைக்கும். மனதெம்பு உண்டாகும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் கை கூடும் வாக்கு வன்மையால் காரியம் கைகூடும். ஆன்மிக எண்ணம் உண்டாகும்.

தொழில் வியாபாரம் நல்லநிலைக்கு உயரும். போட்டிகள் நீங்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தேவையான நிதியுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். நிலுவையில் உள்ள பணம் வந்து சேரும். நிர்வாக திறமை வெளிப்படும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். வீட்டில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும்.

பெண்களுக்கு மனோதைரியம் கூடும். சாமர்த்தியமான பேச்சால் எடுத்த காரியம் வெற்றிபெறும்.

மாணவர்களுக்கு கல்விநிலை உயரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

விசாகம்:

இந்த மாதம் உங்கள் மேல் முழு நம்பிக்கை கொண்டு உங்கள் வேலைகளை நீங்களே செய்யுங்கள். எவ்வளவுதான் கஷ்டம் வந்தாலும் நீங்கள் வேலையை விடுவது நன்மையில்லை. உப தொழில் செய்யும் விருப்பமுடையவர்கள் தாராளமாக இன்று ஆரம்பிக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீணாக உழைக்க நேரிடும்.

அனுஷம்:

இந்த மாதம் எடுத்த காரியத்தை செய்து முடிப்பதற்குள் பல தடைகளை சந்திக்க வேண்டி இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு உங்கள் தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ற சிறந்த வேலை கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களும் மேலதிகாரிகளும் உங்களுக்கு சில சங்கடங்களை ஏற்படுத்தினாலும் பொதுவில் நன்மையே நடக்கும்.

கேட்டை:

இந்த மாதம் எதிலும் நல்லது கெட்டதை நிர்ணயிக்கும் திறமை குறையும். அடுத்தவர் பிரச்சனை தீர்க்க உதவி செய்வதை தவிர்ப்பது நல்லது. நீங்கள் உழைத்த அளவுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் போகலாம். பொறுமையாக உங்கள் கடமைகளைச் சரியாக செய்யவும். உடன் பணிபுரிவோரால் மிகுந்த நன்மைகள் உண்டாகும்.

பரிகாரம் : செவ்வாய்தோறும் அருகிலிருக்கும் அம்மன் கோவிலுக்குச் சென்று வலம் வந்து வணங்கி வரவும்.

சந்திராஷ்டம தினங்கள்: 26, 27

அதிர்ஷ்ட தினங்கள்: 10, 11

அக்டோபர் மாத பலன்கள் - 2021 கும்ப ராசியினரே இந்த மாதம் எதிலும் ஆதாயம் கிடைக்கும்.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்)

கிரகநிலை:

தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி, குரு () - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராஹூ - தொழில் ஸ்தானத்தில் புதன்(), செவ்வாய், சூர்யன் - லாப ஸ்தானத்தில் சுக்கிரன் - அயனசயன போக ஸ்தானத்தில் கேது என கிரகநிலை உள்ளது.

3ம் தேதி - ஞாயிற்றுக்கிழமை அன்று சுக்கிர பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

4ம் தேதி புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

14ம் தேதி குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

18ம் தேதி சூர்ய பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

23ம் தேதி செவ்வாய் பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

30ம் தேதி புதபகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

31ம் தேதி சுக்கிர பகவான் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

தனுசு ராசியினரே இந்த மாதம் வெளியூர் பயணவாய்ப்புகள் உண்டாகலாம். சோம்பலும் சோர்வும் உண்டாகலாம். மனதில் தேவையற்ற எண்ணங்கள் ஏற்படும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். திடீர் செலவு உண்டாகலாம். காரியங்களில் தடைதாமதம் ஏற்படும்.

தொழில் வியாபாரம் எதிர்பார்த்தபடி நடக்காமல் சற்று மந்தமாக காணப்படும். பணவரத்து தாமதமாகும். யோசித்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உழைப்பு அதிகமாகும். முயற்சிகள் பயன்தராமல் போகலாம்.

குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் தொல்லைகள் ஏற்படலாம். உறவினர்களிடம் வீண் மனஸ்தாபம் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை வரலாம். பிள்ளைகள் மேல் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

பெண்களுக்கு வீண் மனக்கவலை உண்டாகலாம். காரியங்களில் தடை தாமதம், வீண் செலவு ஏற்படலாம்.

மாணவர்களுக்கு கல்வியில் மந்தமான நிலை மாற கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிப்பது நன்மை தரும்.

மூலம்:

இந்த மாதம் உங்களின் மனதிடம் அதிகரிக்கும். வேலைப்பளு அதிகரிக்கும். வாய்ப்புகள் வந்து குவியும். ஆரம்பரச் செலவை குறைக்கவும். அவ்வப்போது ஒருவித சோர்வு ஏற்படலாம். அதை தகுந்த நபர்களிடம் திட்டமிட்டு சரிசெய்யவும். எந்தப் பிரச்சனையானாலும் பொறுமையுடனும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடனும் செயல்படுங்கள்.

பூராடம்:

இந்த மாதம் அடுத்தவரை நம்பி காரியங்களை செய்வதை தவிர்ப்பது நன்மை தரும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். மனகவலை அகலும். யாருடைய அதிகாரத்துக்கும் கட்டுப்படாமல் தனித்தன்மையுடன் விளங்குவீர்கள். தடைபட்ட பணம் வந்து சேரும். பயணங்கள் உண்டாகும்.

உத்திராடம்:

இந்த மாதம் வழக்கு சம்பந்தமான விஷயங்களில் நன்மை ஏற்படும். உங்களது செயல்கள் மற்றவர்களை கவரும் விதத்தில் இருக்கும். ஆனால் மனதில் ஏதாவது கவலை இருந்து கொண்டிருக்கும். மற்றவர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள்.

பரிகாரம் : வியாழன்தோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று ஸ்ரீகுருபகவானை வணங்கி வரவும். உங்கள் பொருளாதார நிலைமை படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்.

சந்திராஷ்டம தினங்கள்: 1, 2, 28, 29, 30

அதிர்ஷ்ட தினங்கள்: 12, 13

அக்டோபர் மாத பலன்கள் - 2021 கும்ப ராசியினரே இந்த மாதம் எதிலும் ஆதாயம் கிடைக்கும்.

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

கிரகநிலை:

ராசியில் சனி, குரு () - பஞ்சம ஸ்தானத்தில் ராஹூ - பாக்கிய ஸ்தானத்தில் புதன்(), செவ்வாய், சூர்யன் - தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன் - லாப ஸ்தானத்தில் கேது என கிரகநிலை உள்ளது.

3ம் தேதி - ஞாயிற்றுக்கிழமை அன்று சுக்கிர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

4ம் தேதி புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

14ம் தேதி குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

18ம் தேதி சூர்ய பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

23ம் தேதி செவ்வாய் பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

30ம் தேதி புதபகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

31ம் தேதி சுக்கிர பகவான் விரைய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்.

மகர ராசியினரே இந்த மாதம் பலவகையிலும் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். எதிர்பாராத துன்பமும், தொல்லையும் உண்டாகும். அதிகமான சுகபோகத்தால் உடல் ஆரோக்கியம் கெடலாம்.

வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. ராசிக்கு 7ல் சூரியன் கேதுவுடன் சேர்ந்து சஞ்சாரம் செய்த புதன் இனி ராசிக்கு எட்டில் ராசியாதிபதி சனியுடன் சேர்ந்து சஞ்சாரம் செய்வதால் அரசாங்க காரியங்களில் இருந்த தடை நீங்கும். புத்தி சாதூரியம் அதிகரிக்கும்.

தொழில் வியாபாரத்தில் உயர்வுகள் உண்டாகும். பணியாளர்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். அனுபவ பூர்வ மான அறிவு கைகொடுக்கும். உத்தியோ கத்தில் இருப்பவர்கள் எளிதாக பணி களை செய்து முடிப்பார்கள். செயல் திறன் அதிகரிக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது குறை சொல்லியபடி இருப்பார்கள். வீட்டிற்கு தேவையான பொருட்கள் சேரும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவது நன்மையை தரும். பிள்ளைகள் எதிர்காலம் குறித்து தேவையான பணிகளை கவனிப்பீர்கள்.

பெண்களுக்கு புத்திசாதூரியம் அதிகரிக்கும். பயணங்களின் போது கவனம் தேவை.

மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கும். திறமை வெளிப்படும்.

உத்திராடம்:

இந்த மாதம் குடும்பத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் உங்களது சொல்படி நடப்பது மனதுக்கு இதம் அளிக்கும். செயல்திறன் அதிகரிக்கும். சில நேரங்களில் உங்கள் வார்த்தைகளால் பிரச்சனை வரலாம்.

திருவோணம்:

இந்த மாதம் எந்த சூழ்நிலையிலும் பிறர் மனம் நோகும்படியான வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள். யாருக்காவது ஏதேனும் வாக்குறுதிகள் கொடுத்திருந்தால் அவைகளை உடனடியாக நிறைவேற்றுங்கள். திருமணத்திற்கு நல்ல வரனாக அமையும். தொழில் வியாபாரம் சுறுசுறுப்படையும்.

அவிட்டம்:

இந்த மாதம் உங்கள் வியாபார விரிவாக்கம் செய்வது பற்றி ஆலோசனை மேற்கொள்வீர்கள். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். முதலீடு செய்வதற்குண்டான பணவசதி வந்து சேரும். கடன் தொல்லை கொஞ்ச கொஞ்சமாக குறையும். கூட்டுத்தொழில் செய்பவர்கள் தங்கள் பங்காளிகளிடம் பரிவுடன் நடந்து கொள்ளவும்.

பரிகாரம் : சனிதோறும் ஸ்ரீநடராஜரை வணங்கி வரவும். முடிந்தால் தேங்காய் விளக்கு போடவும். மாற்றங்கள் வரும்.

சந்திராஷ்டம தினங்கள்: 3, 4, 31

அதிர்ஷ்ட தினங்கள்: 14, 15

அக்டோபர் மாத பலன்கள் - 2021 கும்ப ராசியினரே இந்த மாதம் எதிலும் ஆதாயம் கிடைக்கும்.

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்)

கிரகநிலை:

சுக ஸ்தானத்தில் ராஹூ - அஷ்டம ஸ்தானத்தில் புதன்(), செவ்வாய், சூர்யன் - பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன் - தொழில் ஸ்தானத்தில் கேது - அயனசயன போக ஸ்தானத்தில் சனி, குரு () என கிரகநிலை உள்ளது.

3ம் தேதி - ஞாயிற்றுக்கிழமை அன்று சுக்கிர பகவான் தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

4ம் தேதி புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

14ம் தேதி குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

18ம் தேதி சூர்ய பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

23ம் தேதி செவ்வாய் பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

30ம் தேதி புதபகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

31ம் தேதி சுக்கிர பகவான் லாப ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்.

கும்ப ராசியினரே இந்த மாதம் எதிலும் ஆதாயம் கிடைக்கும். பேச்சு திறமை அதிகரிக்கும். எதிர் பாலினத்தவரிடம் பழகும்போது கவனம் தேவை. நண்பர்கள் மூலம் வீண் அலைச்சல் குறையும். நேரம் தவறி உணவு உண்ண வேண்டி இருக்கும். வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னர்களை அனு சரித்து செல்வது நல்லது. வியாபாரம் தொடர்பாக செய்து முடிக்க நினைக்கும் காரியங்கள் தள்ளிபோகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வேலை பளு இருக்கும்.

குடும்பத்தில் அமைதி இருக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் மனம் மகிழும் காரியங்கள் நடக்கும். உறவினர்கள் வருகை இருக்கும்.

பெண்கள் பேச்சு திறமையால் காரியங்களை சாதகமாக செய்து முடிப்பீர்கள். அலைச்சல் குறையும்.

மாணவர்கள் தேவையற்ற எண்ணங்களை விட்டுவிட்டு மனதை ஒருமுகப்படுத்தி பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும்.

அவிட்டம்:

இந்த மாதம் எந்த சூழ்நிலையிலும் பதட்டம் அடையவே கூடாது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் காரிய அனுகூலம் கிடைக்க பெறுவார்கள். புத்திசாதூரியத்தால் காரிய நன்மை பெறுவார்கள். பணம் கொடுத்து உதவி செய்வதற்கு முன் தகுந்த ஆலோசனை வாழ்க்கைத்துணையுடன் செய்யுங்கள். அரசாங்கம் சம்பந்தப்பட்ட கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக் கொள்ளவும்.

சதயம்:

இந்த மாதம் வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். மேலிடத்தில் உங்களது கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். உங்களது செயல்களுக்கு மற்றவர்களிடம் இருந்து பாராட்டு கிடைக்கும். பயணங்கள் மூலம் சாதகமான பலன்கள் உண்டாகும். சுயநலம் பார்க்காமல் உழைக்க வேண்யதிருக்கும்.

பூரட்டாதி:

இந்த மாதம் உழைப்பிற்கு ஏற்ற பலன்கள் வந்து சேரும். பதவியையோ, பணத்தையோ எதிர்பாராமல் உங்களால் முடிந்த அளவிற்கு பிறருக்கு நன்மை செய்யுங்கள். நீங்கள் எடுக்கும் காரியங்களில் அவ்வப்போது தடைகள் வந்தாலும் கவலை கொள்ளாதீர்கள். எல்லாம் தாமதமானாலும் நல்லபடியாகவே நடக்கும்.

பரிகாரம் : சனிக்கிழமைதோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று 9 முறை வலம் வரவும். உங்கள் பொருளாதார நிலைமை படிப்படியாக மூன்னேற்றம் ஏற்படும்.

சந்திராஷ்டம தினங்கள்: 5, 6, 7

அதிர்ஷ்ட தினங்கள்: 15, 16

அக்டோபர் மாத பலன்கள் - 2021 கும்ப ராசியினரே இந்த மாதம் எதிலும் ஆதாயம் கிடைக்கும்.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

கிரகநிலை:

தைரிய ஸ்தானத்தில் ராஹூ - சப்தம ஸ்தானத்தில் புதன்(), செவ்வாய், சூர்யன் - அஷ்டம ஸ்தானத்தில் சுக்கிரன் - பாக்கிய ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சனி, குரு () என கிரகநிலை உள்ளது.

3ம் தேதி - ஞாயிற்றுக்கிழமை அன்று சுக்கிர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

4ம் தேதி புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

14ம் தேதி குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

18ம் தேதி சூர்ய பகவான் அஷ்டம ஆயுள் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

23ம் தேதி செவ்வாய் பகவான் அஷ்டம ஆயுள் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

30ம் தேதி புதபகவான் அஷ்டம ஆயுள் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

31ம் தேதி சுக்கிர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்.

மீன ராசியினரே இந்த மாதம் காரிய அனுகூலம் உண்டாகும். எல்லாவித வசதிகளும் உண்டாகும். தேடி போனதும் தானாகவே வந்து சேரும். அறிவு திறன் அதிகரிக்கும். நெருக்க மானவர்களுடன் இனிமையாக பேசி பொழுதை கழிப்பீர்கள். மனோ தைரியம் கூடும். மதிப்பு கூடும்.

தொழில் வியாபாரம் சிறப்பான முன்னேற்றம் பெறும். வாடிக்கையாளர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பாக பணிபுரிந்து பாராட்டு பெறுவார்கள். சிலருக்கு உத்தியோகம் கிடைக்கலாம்.

குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். பிள்ளைகளின் கல்வியில் கூடுதல் கவனம் தேவை.

பெண்கள் நீண்ட நாட்களாக செய்ய நினைத்த ஒரு காரியத்தை செய்து முடிப்பீர்கள். மதிப்பும், மரியாதையும் வடும்.

மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும்.

பூரட்டாதி:

இந்த மாதம் வேலை விஷயமாக பயணம் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். வாய்ப்புகள் வந்து குவியும். எந்த ஒரு வாய்ப்பையும் நிராகரிக்க வேண்டாம். பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். உத்தியோகத்தில் உங்கள் திறமை வெளிப்படும். மேலிடத்திடம் இருந்து பாராட்டு பெறுவீர்கள். சக ஊழியர் மத்தியில் மதிப்பு கூடும்.

உத்திரட்டாதி:

இந்த மாதம் எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள். உடல் ஆரோக்கியம் பெறும். வீண் அலைச்சல் ஏற்படலாம். சில நேரங்களில் நிர்பந்தத்தின் பேரில் விருப்பமில்லாத வேலை செய்ய நேரலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் திடீர் மனஸ்தாபங்கள் உண்டாகும். பிள்ளைகளிடம் அனுசரித்து செல்வது நல்லது.

ரேவதி:

இந்த மாதம் எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நன்மை தரும். நல்ல விஷயங்கள் நிகழும். நீண்ட நாட்களாக இருந்து வந்த கடன் தொல்லை ஒழியும். தம்பதிகளிடையே அன்பு மலரும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை சேர்ப்பீர்கள். தடைபட்ட திருமணம் கைகூடி வரும். மனப்பிரச்சனைகள் விலகும்.

பரிகாரம் : வியாழகிழமைதோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று நவக்கிரகங்களை 9 முறை வலம் வரவும். உங்கள் தடைகளெல்லாம் விலகி நன்மைகள் ஏற்படும்.

சந்திராஷ்டம தினங்கள்: 8, 9

அதிர்ஷ்ட தினங்கள்: 17, 18

Trending News

Latest News

You May Like