1. Home
  2. ஜோதிடம்

ஐப்பசி மாத பலன்கள் - 2021 : மீன ராசி அன்பர்களே நீங்கள் மற்றவர்கள் மனது அறிந்து செயல்பட்டால் காரிய வெற்றி கிடைக்கும்..!!

ஐப்பசி மாத பலன்கள் - 2021 : மீன ராசி அன்பர்களே நீங்கள் மற்றவர்கள் மனது அறிந்து செயல்பட்டால் காரிய வெற்றி கிடைக்கும்..!!

ஐப்பசி மாத பலன்கள் - 2021 : மீன ராசி அன்பர்களே நீங்கள் மற்றவர்கள் மனது அறிந்து செயல்பட்டால் காரிய வெற்றி கிடைக்கும்..!!

கிரகநிலை:

தன ஸ்தானத்தில் ராஹூ - ரண் ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், புதன் - களத்திர ஸ்தானத்தில் சூர்யன் - அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன், கேது - தொழில் ஸ்தானத்தில் குரு, சனி என கிரக நிலவரம் உள்ளது.

கிரகமாற்றங்கள்:

23-10-2021 அன்று செவ்வாய் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

30-10-2021 அன்று புதன் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

31-10-2021 அன்று சுக்ர பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

13-11-2021 அன்று குரு பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

அடக்கத்தோடும், அன்புடனும் பழகும் மேஷ ராசியினரே உங்களிடம் வேகம் இருக்கும். இந்த மாதம் நன்மைகள் நிறைந்து இருக்கும். தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். சகோதரர்கள் மூலம் நன்மை உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். வாகனங்களை ஓட்டி செல்லும் போது கவனம் தேவை.

தொழில், வியாபாரம் தொடர்பான விவகாரங்களில் இருந்த தடைகள் அகலும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதற்கு எடுத்த முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி மாற்றம் ஆகியவை கிடைக்கும்.

குடும்பத்தில் இருந்து வந்த மனஸ்தாபம் நீங்கும். கணவன் மனைவிக்கிடையே சுமூக உறவு நீடிக்கும். பிள்ளைகள் கல்வியில் அக்கறை காட்டுவீர்கள். நண்பர்கள் உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

பெண்களுக்கு மனத்துணிவு அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும். காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.

மாணவர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தி பாடங்களை படிப்பது நல்லது. விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் போது கவனம் தேவை.

பரிகாரம்: தேவி கருமாரியம்மனை வணங்கி வர எல்லா பிரச்சனைகளிலும் நல்ல தீர்வு கிடைக்கும். கஷ்டங்கள் நீங்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: நவ 6, 7

அதிர்ஷ்ட தினங்கள்: நவ 1

ஐப்பசி மாத பலன்கள் - 2021 : மீன ராசி அன்பர்களே நீங்கள் மற்றவர்கள் மனது அறிந்து செயல்பட்டால் காரிய வெற்றி கிடைக்கும்..!!

கிரகநிலை:

ராசியில் ராஹூ - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய், புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன் - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன், கேது - பாக்கிய ஸ்தானத்தில் குரு, சனி என கிரக நிலவரம் உள்ளது.

கிரகமாற்றங்கள்:

23-10-2021 அன்று செவ்வாய் பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

30-10-2021 அன்று புதன் பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

31-10-2021 அன்று சுக்ர பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

13-11-2021 அன்று குரு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

நூதனமான காரியங்களில் ஈடுபாடு உடைய ரிஷப ராசி அன்பர்களே நீங்கள் அனைவரையும் கவர்ந்து இழுப்பதில் திறமையானவர். இந்த மாதம் எந்த காரியத்தையும் செய்து முடிப்பதில் வேகம் எடுக்கும். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். புதிய நண்பர்களுடன் பழகும்போது கவனம் தேவை.

தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். ஆனாலும் அலைச்சலுக்கு ஏற்ற லாபம் கிடைக்கும். அலுவலக பணிகள் மூலம் டென்ஷன் உண்டாகும்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் இருந்து வந்த மோதல்கள் அகலும். கணவன், மனைவிக்கிடையில் வாக்குவாதங்கள் நீங்கும். உறவினர்கள் நண்பர்களுடன் இருந்து வந்த சுணக்க நிலை மாறும்.

பெண்களுக்கு அடுத்தவர்களின் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. தெய்வபக்தி அதிகரிக்கும்.

மாணவர்களுக்கு ராசியை புதன் பார்ப்பதால் கல்வியை பற்றி டென்ஷன் ஏற்பட்டு நீங்கும். பாடங்களை ஒருமுறைக்கு இருமுறை படித்து புரிந்து கொள்வது நல்லது. கல்வியில் இருந்து வந்த தடைகள் நீங்கும். மேற்படிப்பிற்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும்.

பரிகாரம்: அஷ்டலட்சுமிகளையும் வணங்கி வர மனோதைரியம் கூடும். பணகஷ்டம் குறையும். குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: நவ 8, 9

அதிர்ஷ்ட தினங்கள்: நவ 2, 3

ஐப்பசி மாத பலன்கள் - 2021 : மீன ராசி அன்பர்களே நீங்கள் மற்றவர்கள் மனது அறிந்து செயல்பட்டால் காரிய வெற்றி கிடைக்கும்..!!

கிரகநிலை:

சுக ஸ்தானத்தில் செவ்வாய், புதன் - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன் - ரண் ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன், கேது - அஷ்டம ஸ்தானத்தில் குரு, சனி - அயன சயன போக ஸ்தானத்தில் ராஹூ என கிரக நிலவரம் உள்ளது.

கிரகமாற்றங்கள்:

23-10-2021 அன்று செவ்வாய் பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

30-10-2021 அன்று புதன் பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

31-10-2021 அன்று சுக்ர பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

13-11-2021 அன்று குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

எந்த இக்கட்டான நிலையையும் நிதானமாக சமாளிக்கும் திறமை உடைய மிதுன ராசி அன்பர்களே இந்த ஆக்கப்பூர்வமான யோசனைகள் தோன்றினாலும் அதை செயல்படுத்துவதில் தாமதம் உண்டாகும். பேச்சை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. மற்றவர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது. ராசியை குரு பார்ப்பதால் சுபநிகழ்ச்சிகளில் இருந்த தடைகள் அகலும்.

தொழில் வியாபாரம் மந்தமாக காணப்பட்டாலும் பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். ஆர்டர் தொடர்பான காரியங்களில் தாமதம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வேலைபளு இருக்கும். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து போவது நன்மை தரும். பிள்ளைகளின் நலனில் அக்கறை தேவை.

பெண்களுக்கு வீண் பேச்சை குறைப்பது நல்லது. எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகலாம்.

மாணவர்களுக்கு அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் கவனம் தேவை. பாடங்களை படிப்பதில் தீவிரம் காட்டுவீர்கள்.

பரிகாரம்: ஸ்ரீரங்கநாதரை வணங்கி வர முன்ஜென்ம பாவம் நீங்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி

சந்திராஷ்டம தினங்கள்: நவ 10, 11, 12

அதிர்ஷ்ட தினங்கள்: நவ 4, 5

ஐப்பசி மாத பலன்கள் - 2021 : மீன ராசி அன்பர்களே நீங்கள் மற்றவர்கள் மனது அறிந்து செயல்பட்டால் காரிய வெற்றி கிடைக்கும்..!!

கிரகநிலை:

தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய், புதன் - சுக ஸ்தானத்தில் சூர்யன் - பஞ்சம ஸ்தானத்தில் சுக்ரன், கேது - களத்திர ஸ்தானத்தில் குரு, சனி - லாப ஸ்தானத்தில் ராஹூ என கிரக நிலவரம் உள்ளது.

கிரகமாற்றங்கள்:

23-10-2021 அன்று செவ்வாய் பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

30-10-2021 அன்று புதன் பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

31-10-2021 அன்று சுக்ர பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

13-11-2021 அன்று குரு பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

பார்வையாலேயே மற்றவர்களை பணிய வைக்கும் திறமை உடைய கடக ராசி அன்பர்களே நீங்கள் எறும்பு போன்று சுறுசுறுப்பானவர். இந்த மாதம் நல்ல பலன்கள் வரும். எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி தருவதாக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது அவசியம். தனிமையாக இருக்க நினைப்பீர்கள்.

தொழில் வியாபாரம் நன்றாக நடக்கும். ஆர்டர்கள் கிடைப்பது - சரக்குகள் அனுப்பதில் இர்நுத சிரமங்கள் நீங்கும். பழைய பாக்கிகள் வசூல் ஆகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சொன்ன வாக்கை காப்பாற்ற முடியும். பதவி உயர்வு, நிலுவையில் உள்ள பணம் வருவது வேகப்படும்.

குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் அகலும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை வந்து நீங்கும். உறவினர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. பிள்ளைகளை அனுசரித்து செல்வது நன்மை தரும்.

பெண்களுக்கு எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. பயணங்களின் போது உடமைகளை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது.

மாணவர்களுக்கு சக மாணவர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். பாடங்கள் படிப்பதில் இருந்த தடைகள் நீங்கி ஆர்வமாக படிப்பீர்கள்.

பரிகாரம்: பிரத்தியங்கரா தேவியை அர்ச்சனை செய்து வணங்கிவர எல்லா கஷ்டமும் நீங்கும். எதிர்ப்புகள் அகலும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன்

சந்திராஷ்டம தினங்கள்: நவ 13, 14

அதிர்ஷ்ட தினங்கள்: நவ 6, 7

ஐப்பசி மாத பலன்கள் - 2021 : மீன ராசி அன்பர்களே நீங்கள் மற்றவர்கள் மனது அறிந்து செயல்பட்டால் காரிய வெற்றி கிடைக்கும்..!!

கிரகநிலை:

தன ஸ்தானத்தில் செவ்வாய், புதன் - தைரிய ஸ்தானத்தில் சூர்யன் - சுக ஸ்தானத்தில் சுக்ரன், கேது - ரண் ருண ரோக ஸ்தானத்தில் குரு, சனி - தொழில் ஸ்தானத்தில் ராஹூ என கிரக நிலவரம் உள்ளது.

கிரகமாற்றங்கள்:

23-10-2021 அன்று செவ்வாய் பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

30-10-2021 அன்று புதன் பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

31-10-2021 அன்று சுக்ர பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

13-11-2021 அன்று குரு பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

அஞ்சா நெஞ்சமும், கம்பீரமான பேச்சும் உடைய சிம்ம ராசி அன்பர்களே நீங்கள் எதற்கும் கலங்காதவர். இந்த மாதம் பல விதமான யோகங்களை தரும். கடும் பணிச்சுமையால் வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும். களைப்பு, பித்தநோய் உண்டாகலாம். மற்றவர்கள் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. வெளி வட்டார தொடர்புகளில் கவனம் தேவை.

தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். எடுத்த வேலையை செய்து முடிப்பதற்குள் பல தடங்கல்கள் உண்டாகும்.

குடும்பத்தில் இருப்பவர்களால் டென்ஷன் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையில் கருத்து வேற்றுமை வராமல் இருக்க மனம்விட்டு பேசுவது நல்லது. பிள்ளைகள் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிலும் திருப்தி இல்லாதது போல் தோன்றும்.

பெண்களுக்கு எடுத்த காரியத்தை செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை.

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் சரபேஸ்வரரை வணங்க காரிய தடை நீங்கும். மன அமைதி கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: அக் 18, 19, 20; நவ 15, 16

அதிர்ஷ்ட தினங்கள்: நவ 8, 9

ஐப்பசி மாத பலன்கள் - 2021 : மீன ராசி அன்பர்களே நீங்கள் மற்றவர்கள் மனது அறிந்து செயல்பட்டால் காரிய வெற்றி கிடைக்கும்..!!

கிரகநிலை:

ராசியில் செவ்வாய், புதன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்ரன், கேது - பஞ்சம ஸ்தானத்தில் குரு, சனி - பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ என கிரக நிலவரம் உள்ளது.

கிரகமாற்றங்கள்:

23-10-2021 அன்று செவ்வாய் பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

30-10-2021 அன்று புதன் பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

31-10-2021 அன்று சுக்ர பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

13-11-2021 அன்று குரு பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

அமைதியும், கருணையும் கொண்ட கன்னி ராசி அன்பர்களே நீங்கள் அனைவரிடமும் நேசமுடன் பழகுவீர்கள். இந்த மாதம் சுபச் செலவுகள் உண்டாகும். மற்றவர்களால் இருந்து வந்த மனகஷ்டம் மாறும். அடுத்தவர்கள் கடனுக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது. எந்த ஒரு காரியத்திலும் இருந்து வந்த மந்த நிலை மாறும். எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டி இருக்கும்.

தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் வரும். புதிய ஆர்டர்கள் வந்து சேரும். தொழில் தொடர்பான விரிவாக்க செலவு கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறிய வேலைக்கும் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. அவர்களின் நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையில் திடீர் இடைவெளி ஏற்படலாம். பிள்ளைகள் அறிவுத் திறன் கண்டு ஆனந்தப்படுவீர்கள். அவர்களுக்காக செலவு செய்யவும் நேரிடும்.

பெண்களுக்கு எதிர்பாராத செலவுகள் உண்டாகும். காரியதாமதம் ஏற்படும். வீண்கவலை இருக்கும்.

மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் பெற மிகவும் கவனமாக படிக்க வேண்டி இருக்கும்.

பரிகாரம்: ஐயப்பனை தரிசித்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கூடும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன்,சனி

சந்திராஷ்டம தினங்கள்: அக் 21, 22

அதிர்ஷ்ட தினங்கள்: நவ 10, 11, 12

ஐப்பசி மாத பலன்கள் - 2021 : மீன ராசி அன்பர்களே நீங்கள் மற்றவர்கள் மனது அறிந்து செயல்பட்டால் காரிய வெற்றி கிடைக்கும்..!!

கிரகநிலை:

ராசியில் சூரியன் - தன ஸ்தானத்தில் சுக்ரன், கேது - சுக ஸ்தானத்தில் குரு, சனி - அஷ்டம ஸ்தானத்தில் ராஹூ - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய், புதன் என கிரக நிலவரம் உள்ளது.

கிரகமாற்றங்கள்:

23-10-2021 அன்று செவ்வாய் பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.

30-10-2021 அன்று புதன் பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.

31-10-2021 அன்று சுக்ர பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

13-11-2021 அன்று குரு பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

எதை எப்படி செய்ய வேண்டும் என்பதை நன்கு உணர்ந்த துலா ராசி அன்பர்களே நீங்கள் மனஉறுதி அதிகம் உடையவர். இந்த மாதம் பணவரவு அதிகமாகும். அதே நேரத்தில் சுபச் செலவு உண்டாகும். சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அதை செய்ய முடியாத சூழ்நிலை வரும். எதிலும் ஈடுபடாமல் ஒதுங்கி சென்றாலும் மற்றவர்கள் விடாமல் வம்புக்கு இழுப்பார்கள். எனவே கவனமாக இருப்பது நல்லது. நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த சில காரியங்கள் நடந்து முடியும்.

தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். புதிய ஆர்டர்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். வாக்கு வன்மையால் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக தள்ளிப் போன பதவி உயர்வு வர வேண்டிய பணம் வந்து சேரலாம்.

குடும்பத்தில் எதிர்பார்த்த சுமுகமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவி இருவரும் சேர்ந்து எடுக்கும் முடிவுகள் நல்ல பலன் தருவதாக இருக்கும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும்.

பெண்களுக்கு பணவரத்து திருப்தி தரும் விதத்தில் இருக்கும். இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும்.

மாணவர்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் மற்றவர் மனதில் இடம் பிடிப்பீர்கள்.

பரிகாரம்: நவகிரகத்தில் சுக்கிரனுக்கு வெள்ளிக்கிழமையில் தீபம் ஏற்றி வணங்க குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். மனமகிழ்ச்சி ஏற்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன்,சனி

சந்திராஷ்டம தினங்கள்: அக் 23, 24, 25

அதிர்ஷ்ட தினங்கள்: நவ 13, 14

ஐப்பசி மாத பலன்கள் - 2021 : மீன ராசி அன்பர்களே நீங்கள் மற்றவர்கள் மனது அறிந்து செயல்பட்டால் காரிய வெற்றி கிடைக்கும்..!!

கிரகநிலை:

ராசியில் சுக்ரன், கேது - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு, சனி - களத்திர ஸ்தானத்தில் ராஹூ - லாப ஸ்தானத்தில் செவ்வாய், புதன் - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன் என கிரக நிலவரம் உள்ளது.

கிரகமாற்றங்கள்:

23-10-2021 அன்று செவ்வாய் பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

30-10-2021 அன்று புதன் பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

31-10-2021 அன்று சுக்ர பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

13-11-2021 அன்று குரு பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

பார்த்தால் பசு பாய்ந்தால் புலி என்பதற்கேற்ப சாதுவாக காணப்பட்டாலும் முன்கோபம் அதிகமாக இருக்கும் விருச்சிக ராசி அன்பர்களே இந்த மாதம் எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் இழுபறியான நிலை காணப்படும். சாதாரணமாக பேசினாலும் மற்றவர்கள் அதில் குறை காண்பார்கள். வாகனங்களில் செல்லும் போதும், ஆயுதங்களை கையாளும் போதும் கவனம் அவசியம். திட்டமிடாமல் செய்யும் காரியங்கள் தடங்கலை உண்டாக்கும். பணவரத்து கூடும்.

தொழில், வியாபாரத்தில் இருந்த சிக்கல்களை நீக்குவார். புதிய ஆர்டர் பிடிக்க அதிகம் அலையவேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே இடைவெளி குறைய மனம் விட்டு பேசுவது நல்லது. பிள்ளைகள் எதிர்கால நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும்.

பெண்களுக்கு உங்களது செயல்களில் மற்றவர்குறை காண நேரலாம். தெய்வ பக்தி அதிகரிக்கும். பயணம் செல்ல நேரலாம்.

மாணவர்களுக்கு செயல் திறமை அதிகரிக்கும். கல்வியில் வெற்றி பெறுவதை குறிக்கோளாக கொண்டு செயல்படுவீர்கள்.

பரிகாரம்: மாரியம்மனை தீபம் ஏற்றி வணங்க எல்லா பிரச்சனைகளும் தீரும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். காரிய தடங்கல் நீங்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: அக் 26, 27

அதிர்ஷ்ட தினங்கள்: அக் 18, 19, 20; நவ 15, 16

ஐப்பசி மாத பலன்கள் - 2021 : மீன ராசி அன்பர்களே நீங்கள் மற்றவர்கள் மனது அறிந்து செயல்பட்டால் காரிய வெற்றி கிடைக்கும்..!!

கிரகநிலை:

தன ஸ்தானத்தில் குரு, சனி - ரண் ருண ரோக ஸ்தானத்தில் ராஹூ - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், புதன் - லாப ஸ்தானத்தில் சூர்யன் - அயன சயன போக ஸ்தானத்தில் சுக்ரன், கேது என கிரக நிலவரம் உள்ளது.

கிரகமாற்றங்கள்:

23-10-2021 அன்று செவ்வாய் பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

30-10-2021 அன்று புதன் பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

31-10-2021 அன்று சுக்ர பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.

13-11-2021 அன்று குரு பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

அதிகார தோரணையும், கம்பீரமான தோற்றமும் உடைய தனுசு ராசி அன்பர்களே நீங்கள் எளிதாக பழகக் கூடியவர். இந்த மாதம் பணவரத்து திருப்தி தரும். எதிர்பாராத திருப்பம் உண்டாகும். சிந்தித்து செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். ராசிக்கு எட்டில் ராகு சஞ்சாரம் இருப்பதால் பயணங்களின் போதும் வாகனங்களை ஓட்டி செல்லும் போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அவர்களிடம் கவனமாக பழகுவது நல்லது.

தொழில் வியாபாரம் மந்தமாக காணப்பட்டாலும் வருமானம் வழக்கம் போல் இருக்கும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து நிதானமாக நடந்து கொள்வது வியாபாரம் நன்கு நடக்க உதவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டு செய்யும் காரியங்கள் நல்ல பலன் தரும்.

குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். உறவினர்களுடன் அனுசரித்து செல்வதும், வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது நல்லது.

பெண்களுக்கு எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

மாணவர்களுக்கு சக மாணவர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. கவனத்தை சிதறவிடாமல் படிப்பது அவசியம்.

பரிகாரம்: தேவாரம், திருவாசகம் படிப்பது நன்மையை தரும். தடைபட்ட காரியம் தடைநீங்கி நடக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், சனி

சந்திராஷ்டம தினங்கள்: அக் 28, 29, 30

அதிர்ஷ்ட தினங்கள்: அக் 21, 22

ஐப்பசி மாத பலன்கள் - 2021 : மீன ராசி அன்பர்களே நீங்கள் மற்றவர்கள் மனது அறிந்து செயல்பட்டால் காரிய வெற்றி கிடைக்கும்..!!

கிரகநிலை:

ராசியில் குரு, சனி - பஞ்சம ஸ்தானத்தில் ராஹூ - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், புதன் - தொழில் ஸ்தானத்தில் சூர்யன் - லாப ஸ்தானத்தில் சுக்ரன், கேது என கிரக நிலவரம் உள்ளது.

கிரகமாற்றங்கள்:

23-10-2021 அன்று செவ்வாய் பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

30-10-2021 அன்று புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

31-10-2021 அன்று சுக்ர பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

13-11-2021 அன்று குரு பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

விருந்தினரை உபசரிப்பதில் மகிழ்ச்சியடையும் மகர ராசி அன்பர்களே நீங்கள் வைராக்கியம் மிக்கவர். இந்த மாதம் வீண் செலவுகள் ஏற்படும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும். மற்றவர்களின் பிரச்சனைகளுக்கு வலிய சென்று உதவிகள் செய்வதை தவிர்ப்பது நல்லது. ராசியில் கேது சஞ்சாரம் செய்வதால் விருப்பம் இல்லாத இடமாற்றம் உண்டாகலாம்.

தொழில் வியாபாரம் முன்னேற்றம் காண மிகவும் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். பார்ட்னர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்தபடி பணிகள் முடியாமல் மனசங்கடத்திற்கு ஆளாக நேரிடும்.

குடும்பத்தில் இருப்பவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய பாடுபடுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே வெளியில் சொல்ல முடியாத மனக்குறைகள் வரலாம். பிள்ளைகள் கல்வி மற்றும் அவர்கள் எதிர்காலம் பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும்.

பெண்களுக்கு விருப்பம் இல்லாமல் பயணம் செல்ல நேரிடலாம். வீண் மனசங்கடத்திற்கு ஆளாகலாம். எதிலும் கவனம் தேவை.

மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். பாடங்கள் எளிமையாக தோன்றினாலும் கவனமாக படிப்பது அவசியம்.

பரிகாரம்: சனிக்கிழமையில் சனிபகவானுக்கு எள் சாதம் நைவேதியம் செய்து காகத்திற்கு வைக்க பிணிகள் நீங்கும். காரிய தடை, எதிர்ப்புகள் அகலும். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், சனி.

சந்திராஷ்டம தினங்கள்: அக் 31; நவ 1

அதிர்ஷ்ட தினங்கள்: அக் 23, 24, 25

ஐப்பசி மாத பலன்கள் - 2021 : மீன ராசி அன்பர்களே நீங்கள் மற்றவர்கள் மனது அறிந்து செயல்பட்டால் காரிய வெற்றி கிடைக்கும்..!!

கிரகநிலை:

சுக ஸ்தானத்தில் ராஹூ - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், புதன் - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன் - தொழில் ஸ்தானத்தில் சுக்ரன், கேது - அயன சயன போக ஸ்தானத்தில் குரு, சனி என கிரக நிலவரம் உள்ளது.

கிரகமாற்றங்கள்:

23-10-2021 அன்று செவ்வாய் பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

30-10-2021 அன்று புதன் பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

31-10-2021 அன்று சுக்ர பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

13-11-2021 அன்று குரு பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.

பலன்:

மற்றவர்களிடம் இருந்து தகவல்களை தெரிந்து கொள்ளும் திறமை உடைய கும்ப ராசி அன்பர்களே நீங்கள் ரகசியம் காப்பதில் வல்லவர். இந்த மாதம் குறிக்கோளற்ற பயணங்கள் அதன் மூலம் அலைச்சல், உடல்நலக் கேடு போன்றவை ஏற்படலாம். திட்டமிட்டு எதையும் செய்வது நல்லது. மனதில் வீண் கவலைகள் உண்டாகக் கூடும். அடுத்தவரை நம்பி எதையும் ஒப்படைப்பதை தவிர்ப்பது நல்லது. சுபசெலவுகள் ஏற்படும். வழக்குகளில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும்.

தொழில் வியாபாரம் திட்டமிட்டபடி நடந்தாலும் சற்று நிதானமாக இருக்கும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்படலாம். போட்டிகள் தலைதூக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலான வேலை பளுவால் உடல் சோர்வடைவார்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். மேலிடத்துடன் இருந்து வந்த மந்த நிலை மாறும்.

குடும்பத்தில் இறுக்கமான சூழ்நிலை காணப்படும். மனதில் இருப்பதை வெளியில் சொல்லாமல் செய்கையில் காட்டுவார்கள். கணவன், மனைவிக்கிடையில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும்.

பெண்களுக்கு வீண்கவலைகள், எதிர்பாராத அலைச்சல் ஏற்படலாம். எதையும் திட்டமிட்டு செய்வது நன்மை தரும்.

மாணவர்களுக்கு கல்வி பற்றிய பயம் ஏற்பட்டு நீங்கும். தெளிவாக பாடங்களை படிப்பது நல்லது.

பரிகாரம்: விநாயக பெருமானை தேங்காய் உடைத்து தீபம் ஏற்றி வணங்கி வர வீண் அலைச்சல் குறையும். காரிய தடை நீங்கும். கல்வி அறிவு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி.

சந்திராஷ்டம தினங்கள்: நவ 2, 3

அதிர்ஷ்ட தினங்கள்: அக் 26, 27

ஐப்பசி மாத பலன்கள் - 2021 : மீன ராசி அன்பர்களே நீங்கள் மற்றவர்கள் மனது அறிந்து செயல்பட்டால் காரிய வெற்றி கிடைக்கும்..!!

கிரகநிலை:

தைரிய வீரிய ஸ்தானத்தில் ராஹூ - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், புதன் - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன் - பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன், கேது - லாப ஸ்தானத்தில் குரு, சனி என கிரக நிலவரம் உள்ளது.

கிரகமாற்றங்கள்:

23-10-2021 அன்று செவ்வாய் பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

30-10-2021 அன்று புதன் பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

31-10-2021 அன்று சுக்ர பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

13-11-2021 அன்று குரு பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

வேகமாக செயல்படும் குணம் கொண்ட மீன ராசி அன்பர்களே நீங்கள் மற்றவர்கள் மனது அறிந்து செயல்பட்டால் காரிய வெற்றி கிடைக்கும். இந்த மாதம் நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும். நீண்ட நாட்களாக வாங்க திட்டமிட்ட வாகனம் சொத்து மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பயணங்கள் சாதகமான பலன் தருவதாக இருக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டமும் கிடைக்கலாம். உடல் ஆரோக்யம் உண்டாகும். தெய்வ பக்தி அதிகரிக்கும்.

தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிகள் மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு குறைந்து மன மகிழ்ச்சியடைவார்கள். மேல் அதிகாரிகளின் உதவியும், ஆலோசனையும் கிடைக்கும். புதிய வேலைக்கான முயற்சிகளில் சாதகமான போக்கு காணப்படும்.

குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் வருகை அதனால் நன்மையும் இருக்கும். கணவன், மனைவிக் கிடையில் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் அறிவுதிறன் அதிகரிக்கும். ஆனால் அவர்களது உடல்நலத்தில் கவனம் தேவை.

பெண்களுக்கு பயணங்களின் மூலம் நன்மை உண்டாகும். முயற்சிகள் நல்ல பலன் தரும். பணவரத்து திருப்தி தரும்.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். கஷ்டமாக தோன்றிய பாடங்களை எளிதாக படித்து முடிப்பீர்கள்.

பரிகாரம்: முருகனை வணங்கிவர எல்லா நன்மைகளும் உண்டாகும். தேவையான நேரத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்

சந்திராஷ்டம தினங்கள்: நவ 4, 5

அதிர்ஷ்ட தினங்கள்: அக் 28, 29, 30

Trending News

Latest News

You May Like