3-8-2018 தினப்பலன் - மேஷம், சிம்மத்துக்கு பண புழக்கம் அதிகரிக்கும்!

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் கணித்த தினப்பலன் மற்றும் பஞ்சாங்கம்!

3-8-2018 தினப்பலன் - மேஷம், சிம்மத்துக்கு பண புழக்கம் அதிகரிக்கும்!
X

daily-free-astrology-3-8-2018

3-8-2018 தினப்பலன் - மேஷம், சிம்மத்துக்கு பண புழக்கம் அதிகரிக்கும்!

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

இன்றைய பஞ்சாங்கம்!

விளம்பி வருஷம் I தக்ஷிணாயணம் I க்ரீஷ்மருது I ஆடி 18 I இங்கிலீஷ்: 03 August 2018 I வெள்ளிக்கிழமை

ஷஷ்டி காலை 8.43 மணி வரை. பின் ஸப்தமி I ரேவதி பகல் 11.50 மணி வரை. பின் அசுபதி

த்ருதி நாமயோகம் I வணிஜை கரணம் I அமிர்த யோகம் I தியாஜ்ஜியம்: - I அகசு: 31.07 I நேத்ரம்: 2

ஜீவன்: 1/2 I கடக லக்ன இருப்பு: 7.07 I சூர்ய உதயம்: 6.05 I ராகு காலம்: காலை 10.30 - 12.00

எமகண்டம்: மதியம் 3.00 - 4.30 I குளிகை: காலை 7.30 - 9.00 I சூலம்: மேற்கு I பரிகாரம்: வெல்லம்

குறிப்பு: இன்று சமநோக்கு நாள் I திருவி டைமருதூர் ஸ்ரீபிரகத்குசாம்பிகை புறப்பாடு. I ஆடிப்பெருக்கு விழா.

இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் உற்ஸவாரம்பம் I திதி: ஸப்தமி I சந்திராஷ்டமம்: ஹஸ்தம், சித்திரை

ஆகஸ்டு மாத ராசி பலன்களை படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்...

மேஷம்  கிரகநிலை: சுக ஸ்தானத்தில் சூர்யன்,புதன், ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ) - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்கள்: இன்று மற்றவர்களின் உதவியால் காரிய அனுகூலம் உண்டாகும். பகைகளில் வெற்றி கிடைக்கும். பணவரத்து தாராளமாக இருக்கும். கையிருப்பு கூடும். இதுவரை இருந்த தொல்லைகள் நீங்கும். நீண்ட தூரப் பயணங்களால் லாபம் உண்டாகும்.  அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, வெளிர் மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7, 9 எந்த திதியில் எந்த வேலை செய்யலாம்?ரிஷபம்  கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன்,புதன், ராகு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்ரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சனி (வ) - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது - லாப ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்கள்: இன்று மனதில் தைரியம் பிறக்கும். வாக்குவன்மையால் ஆதாயத்தை பெற்று தரும். உயர்மட்ட பதவியில் உள்ளவர்களின் உதவி கிடைக்கும். தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். வாடிக்கையாளர்கள் மத்தியில் மதிப்பு கூடும். உங்களது உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பிரவுண் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9 யோகாவின் பலன்கள்மிதுனம்  கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன்,புதன், ராகு - சுக ஸ்தானத்தில் சுக்ரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு - களத்திர ஸ்தானத்தில் சனி (வ) - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது - தொழில் ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்கள்: இன்று தொழில் போட்டிகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கக் கூடும். மறைமுகமாக இருந்த எதிர்ப்புகள் விலகி மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்க பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9 சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2018கடகம்  கிரகநிலை: ராசியில் சூர்யன்,புதன், ராகு - தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்ரன் - சுக ஸ்தானத்தில் குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ) - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்கள்: இன்று குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கி அமைதி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி காணப்படும். பிள்ளைகள் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். வாகனங்கள், சொத்துக்கள் வாங்க ஆர்வம் காட்டுவீர்கள்.  அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9சிம்மம்  கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன்,புதன், ராகு என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்கள்: இன்று மற்றவர்களால் இருந்து வந்த பிரச்னைகள் குறையும். குடும்பத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பணவரத்து திருப்திதரும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கும். கிளைகளை விரிவுபடுத்த முழுகவனம் செலுத்துவீர்கள். மன அமைதி கிடைக்கும். காரிய அனுகூலம் உண்டாகும்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 5, 6 உங்கள் நட்சத்திரத்தை சொல்லுங்கள்... நீங்கள் யார் என்று சொல்கிறோம்!  அஸ்தம் முதல் ரேவதி வரை...கன்னி  கிரகநிலை: ராசியில் சுக்ரன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு - சுக ஸ்தானத்தில் சனி (வ) - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது - களத்திர ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில் சூர்யன்,புதன், ராகு என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்கள்: இன்று எதை பற்றியாவது சிந்தித்துக் கொண்டே இருக்கும் மனநிலை இருக்கும். உங்கள் மீது மற்றவர்கள் கோபப்படமுடியாத அளவு நடந்து கொள்வீர்கள். மனக்கவலை குறையும். பணவரவு இருக்கும். பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7துலாம்  கிரகநிலை: ராசியில் குரு - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ) - சுக ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் தொழில் ஸ்தானத்தில் சூர்யன்,புதன், ராகு - அயன சயன போக ஸ்தானத்தில் சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்கள்: இன்று கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். வீண்பழி நீங்கும். சில்லறை சண்டைகள் சரியாகும். தொழில் வியாபாரம் சற்று மந்தமாக காணப்பட்டாலும் பணம் வருவது தடைபடாது. பார்ட்னர்கள் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு இருந்தாலும் சக ஊழியர்கள் ஒத்துழைப்பால் அது குறையும். அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, பச்ச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9விருச்சிகம்  கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன்,புதன், ராகு - லாப ஸ்தானத்தில் சுக்ரன் - அயன சயன போக ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்கள்: இன்று குடும்பத்தில் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த ஊடல் நீங்கும். பிள்ளைகள் எதிர்காலம் பற்றி சிந்தனை மேலோங்கும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 6, 9தனுசு  கிரகநிலை: ராசியில் சனி (வ) - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது - சுக ஸ்தானத்தில் சந்திரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சூர்யன்,புதன், ராகு - தொழில் ஸ்தானத்தில் சுக்ரன் - லாப ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் வலம் வருகின்றன.   பலன்கள்: இன்று அக்கம்பக்கத்தினருடன் இருந்து வந்த மனவருத்தம் நீங்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். பணவரவு திருப்தி தரும். வீடு மனை பற்றிய கவலை குறையும். குடும்ப பிரச்னை தீரும். கடன் கட்டுக்குள் இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 5, 7மகரம்  கிரகநிலை: ராசியில் செவ்வாய் (வ), கேது - தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் சூர்யன்,புதன், ராகு - பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் குரு - அயன சயன போக ஸ்தானத்தில் சனி (வ) என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்கள்: இன்று பயணம் செல்ல நேரிடலாம். காரிய அனுகூலம் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவ முன்வருவீர்கள். வாழ்க்கை துணை மூலம் லாபம் கிடைக்கும். மனதில் இருந்த சஞ்சலம் நீங்கி மகிழ்ச்சியும், நிம்மதியும் கிடைக்க பெறுவீர்கள்.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7கும்பம்  கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன்,புதன், ராகு - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் சனி (வ) - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்கள்: இன்று உங்கள் மீது குற்றம் சொல்ல நினைப் பவர்கள் அதனை விட்டுவிடுவார்கள். தொழில் வியாபாரத்தில் சுமாரான முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த கடன்வசதி கிடைப்பதில் சாதகமான பலன் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சற்று கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 1, 3 இரு துருவங்கள் - பகுதி 2 | எம்.ஜி.ஆர். Vs சிவாஜி கணேசன் சரித்திரம்...மீனம்  கிரகநிலை: ராசியில் சந்திரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூர்யன்,புதன், ராகு - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் குரு - தொழில் ஸ்தானத்தில் சனி (வ) - லாப ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்கள்: இன்று குடும்பத்தில் நிம்மதியும், சுகமும் உண்டாகும். மனவருத்ததில் விட்டு சென்ற உறவினர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். கணவன், மனைவிக் கிடையில் சுமுகமான உறவு இருக்கும். பிள்ளைகள், கல்வியில் மேன்மை அடைய தீவிரமாக செயல்படுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9

newstm.in

Tags:
Next Story
Share it