1. Home
  2. ஜோதிடம்

31-7-2018 தினப்பலன் - இந்த ராசிக்காரர்களுக்கு இன்று வீண் அலைச்சல் உண்டாம்!

31-7-2018 தினப்பலன் - இந்த ராசிக்காரர்களுக்கு இன்று வீண் அலைச்சல் உண்டாம்!

daily-free-astrology-31-7-2018

31-7-2018 தினப்பலன் - இந்த ராசிக்காரர்களுக்கு இன்று வீண் அலைச்சல் உண்டாம்!

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

இன்றைய பஞ்சாங்கம்!

விளம்பி வருஷம் I தக்ஷிணாயணம் I க்ரீஷ்மருது I ஆடி 15 I இங்கிலீஷ்: 31 July 2018 I செவ்வாய்க்கிழமை

திரிதியை காலை 7.26 மணி வ ரை. பின் சதுர்த்தி I சதயம் காலை 8.37 மணி வரை. பின் பூரட்டாதி

ஷோபனம் நாமயோகம் I பத்ரை கரணம் I மரண யோகம்

தியாஜ்ஜியம்: 23.23 I அகசு: 31.11 I நேத்ரம்: 2 I ஜீவன்: 1 I கடக லக்ன இருப்பு: 7.19 I சூர்ய உதயம்: 6.05

ராகு காலம்: மதியம் 3.00 - 4.30 I எமகண்டம்: காலை 9.00 - 10.30 I குளிகை: மதியம் 12.00 - 1.30 I சூலம்: வடக்கு I பரிகாரம்: பால்

குறிப்பு: இன்று மேல் நோ க்கு நாள்

சங்கர ஹர சதுர்த்தி. சுவாமி மலை ஸ்ரீ முருகப்பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.

திதி: சதுர்த்தி I சந்திராஷ் டமம்: மகம்

நாளை பிறக்கிறது ஆகஸ்டு... ராசி பலன்கள் - பரிகாரங்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்!

மேஷம்: கிரகநிலை: சுக ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ) - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - லாப ஸ்தானத்தில் சந்திரன் - என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆர்டர் கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். பழைய பாக்கிகள் வசூலாவது மனதிருப்தியை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணிசுமையால் டென்ஷனுடன் காணப்படுவார்கள்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 5 இந்த வார ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்களை தெரிந்துகொள்ள கிளிக் செய்யுங்கள்...ரிஷபம்: கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - சுக ஸ்தானத்தில் சுக்ரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சனி (வ) - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - தொழில் ஸ்தானத்தில் சந்திரன் - என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று நிலுவையில் உள்ள தொகைகள் வந்து சேரலாம். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே சின்ன சின்ன கருத்து வேற்றுமைகள் வரும். பிள்ளைகளின் செயல்பாடுகள் ஆறுதலை தரும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6மிதுனம்: கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்ரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு - களத்திர ஸ்தானத்தில் சனி (வ) - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் - என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று அடுத்தவர்களின் செயல்களால் கோபம் உண்டாகலாம். கொடுத்த கடனை திரும்ப பெறுவதில் முழுமூச்சுடன் செயல்படுவீர்கள். மாணவர்கள் கவனத்தை சிதற விடாமல் வகுப்பை கவனிப்பது அவசியம். கூடுதலாக பாடங்களை படிக்க வேண்டி இருக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்: 4, 6கடகம்: கிரகநிலை: ராசியில் ராகு, புதன்( வ), சூர்யன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன் - சுக ஸ்தானத்தில் குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ) - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சந்திரன் - என கிரகங்கள் வலம் வருகின்றன பலன்: இன்று வீண் அலைச்சல், காரிய தாமதம் ஏற்படலாம். புதிய முயற்சிகளை தள்ளிபோடுவது நல்லது. மனகலக்கம் உண்டாகும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் மற்றவர்களின் விமர்சனத்திற்கு ஆளாக வேண்டி வரும். இருப்பினும், இந்த வாரம் மிக அனுகூலமான பலன்களை அடையப் போகிறீர்கள். எல்லா வகையிலும் நல்ல பலன் உண்டாகும். எனவே, நிம்மதியாக இருங்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 9சிம்மம்: கிரகநிலை: ராசியில் சுக்ரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - களத்திர ஸ்தானத்தில் சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று எதிர்த்து செயல்பட்டவர்கள் அடங்கி விடுவார்கள். பண வரத்தும், எதிர்பார்த்தபடி இருக்கும். எதிர்பாலினத்தாரின் நட்பும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரிடலாம். மனதில் சிறு சஞ்சலம் ஏற்பட்டு மறையும். தன்னம்பிக்கையை அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 9, 3கன்னி: கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு - சுக ஸ்தானத்தில் சனி (வ) - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - அயன சயன போக ஸ்தானத்தில் சுக்ரன் - என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று வீண் செலவு உடல்நல பாதிப்பு ஏற்படலாம். கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் காண கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களின் ஆதரவு நீடிக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 4, 6துலாம்: கிரகநிலை: ராசியில் குரு - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ) - சுக ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - லாப ஸ்தானத்தில் சுக்ரன் - என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று தொழில் விரிவாக்கம் பற்றிய எண்ணம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பதவி அல்லது கூடுதல் பொறுப்புகள் கிடைக்க பெறுவார்கள். குடும்பத்தில் இருப்பவர்களின் நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6விருச்சிகம்: கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - சுக ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - தொழில் ஸ்தானத்தில் சுக்ரன் - அயன சயன போக ஸ்தானத்தில் குரு - என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். அவர்கள் உங்களை மதிப்பது மனதுக்கு இதமளிக்கும். மனதில் வீண்குழப்பம் உண்டாகும்.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 7தனுசு: கிரகநிலை: ராசியில் சனி (வ) - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் - லாப ஸ்தானத்தில் குரு - என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று உங்களிடம் ஆலோசனை கேட்டு உங்களை நாடி சிலர் வரக்கூடும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் நல்ல பலன் தரும். சக மாணவர்களின் நட்பும் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை அதிர்ஷ்ட எண்: 1, 7மகரம்: கிரகநிலை: ராசியில் செவ்வாய் ( வ), கேது - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் குரு - அயன சயன போக ஸ்தானத்தில் சனி (வ) - என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று எதிலும் கூடுதல் கவனம் தேவை. காரிய அனுகூலம் ஏற்படும். மற்றவர்களின் நலனுக்காக தன் நலனை பாராமல் உழைப்பீர்கள். எதிர்பார்த்த படி காரியங்கள் நடந்து முடியாமல் காரிய தாமதம் உண்டாகலாம்.  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 4, 5கும்பம்: கிரகநிலை: ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் சனி (வ) - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - ராசியில் சந்திரன் - என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். வீண் வாக்குவாதத்தால் பகை உண்டாகலாம். பயணத்தில் தடங்கல், வீண் செலவு போன்றவை ஏற்படும். நன்மைகள் உண்டாகும். பணவரத்து இருக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்: 5மீனம்: கிரகநிலை: பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் குரு - தொழில் ஸ்தானத்தில் சனி (வ) - லாப ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன் - என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று நன்மைகள் உண்டாகும். பணவரத்து இருக்கும். வாகன யோகம் உண்டாகும். பெரியோர்களின் உதவி கிடைக்கும். மனதில் தைரியம் உண்டாகும். எதிலும் தயக்கமோ, பயமோ ஏற்படாது. அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 3

newstm.in

Trending News

Latest News

You May Like