29-03-2020 - தினப்பலன்: இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப்போகிறது!

29-03-2020 - தினப்பலன்: இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப்போகிறது!

29-03-2020 - தினப்பலன்: இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப்போகிறது!
X

கிரகநிலை:

குடும்ப ஸ்தானத்தில் சந்திரன்,  சுக்ரன் -  தைரிய ஸ்தானத்தில் ராஹூ -  பாக்கிய ஸ்தானத்தில்  கேது -  தொழில் ஸ்தானத்தில் சனி , செவ்வாய்,  குரு (அதி. சா) - லாப ஸ்தானத்தில்  புதன் - அயன, சயன, போக ஸ்தானத்தில்  சூர்யன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. 

பலன்:

இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது குறை சொல்லியபடி இருப்பார்கள். வீட்டிற்கு தேவையான பொருட்கள் சேரும்.  கணவன், மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவது  நன்மையை தரும்.  பிள்ளைகள் எதிர்காலம் குறித்து தேவையான பணிகளை கவனிப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்: 5

கிரகநிலை:

ராசியில்  சந்திரன்,  சுக்ரன் - குடும்ப ஸ்தானத்தில்  ராஹூ -   அஷ்டம ஸ்தானத்தில்  கேது  - பாக்கிய ஸ்தானத்தில் சனி ,செவ்வாய்,  குரு (அதி. சா) -  தொழில் ஸ்தானத்தில்  புதன்  - லாப ஸ்தானத்தில் சூர்யன்   என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று புத்திசாதூரியம் அதிகரிக்கும். பயணங்களின் போது கவனம் தேவை. பேச்சு திறமை அதிகரிக்கச் செய்யும்.  எதிர் பாலினத்தவரிடம் பழகும்போது கவனம் தேவை. நண்பர்கள் மூலம் வீண் அலைச்சல் குறையும்.  நேரம்  தவறி உணவு  உண்ண வேண்டி இருக்கும். வாழ்க்கை துணையின் உடல் ஆரோக் கியத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 5, 6

கிரகநிலை:

ராசியில்  ராஹூ -  களத்திர ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில்  சனி , செவ்வாய், குரு (அதி. சா) - பாக்கிய ஸ்தானத்தில்  புதன் -  தொழில் ஸ்தானத்தில்  சூர்யன்  - அயன, சயன, போக ஸ்தானத்தில்  சந்திரன், சுக்ரன்   என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னர்களை அனுசரித்துச்  செல்வது நல்லது.  வியாபாரம் தொடர்பாக செய்து முடிக்க  நினைக்கும் காரியங்கள் தள்ளிப்போகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வேலை பளு இருக்கும். குடும்பத்தில்  அமைதி இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 1,2

கிரகநிலை:

ரண, ருண ஸ்தானத்தில்  கேது -  களத்திர ஸ்தானத்தில் சனி , செவ்வாய், குரு (அதி. சா)  - அஷ்டம ஸ்தானத்தில்  புதன்  -  பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன் -  லாப ஸ்தானத்தில்  சந்திரன்,  சுக்ரன் -  அயன, சயன, போக ஸ்தானத்தில்  ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் மனம் மகிழும் காரியங்கள் நடக்கும். உறவினர்கள்  வருகை இருக்கும்.  பேச்சு திறமையால் காரியங்களை  சாதகமாக செய்து முடிப்பீர்கள். அலைச்சல் குறையும்.

தேவையற்ற எண்ணங்களை  விட்டுவிட்டு மனதை ஒருமுகப்படுத்துவது வெற்றிக்கு உதவும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 5, 6

கிரகநிலை:

பஞ்சம ஸ்தானத்தில்  கேது -  ரண, ருண ஸ்தானத்தில் சனி ,செவ்வாய், குரு (அதி. சா) - களத்திர ஸ்தானத்தில்  புதன் -  அஷ்டம ஸ்தானத்தில்  சூர்யன் - தொழில் ஸ்தானத்தில்  சந்திரன்,  சுக்ரன்  -  லாப ஸ்தானத்தில்  ராஹூ  என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று காரிய அனுகூலம் உண்டாகும். எல்லாவித வசதிகளும் உண்டாகும். தேடிப்போனதும் தானாகவே வந்து சேரும். அறிவுத்திறன் அதிகரிக்கும். நெருக்கமானவர்களுடன் இனிமையாக பேசி பொழுதை கழிப்பீர்கள். மனோ தைரியம் கூடும். மதிப்பு கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 4, 5

கிரகநிலை:

சுக  ஸ்தானத்தில்  கேது - பஞ்சம ஸ்தானத்தில் சனி ,செவ்வாய், குரு (அதி. சா)  - ரண, ருண ஸ்தானத்தில் புதன்  -  களத்திர ஸ்தானத்தில்  சூர்யன் -   பாக்கிய  ஸ்தானத்தில்  சந்திரன்,  சுக்ரன் -  தொழில்  ஸ்தானத்தில்  ராஹூ  என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று தொழில் வியாபாரம் சிறப்பான முன்னேற்றம் பெறும். வாடிக்கையாளர்கள்  மத்தியில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பாக பணிபுரிந்து பாராட்டு பெறுவார்கள். சிலருக்கு உத்தியோகம் கிடைக்கலாம். குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான  பொருள்களை  வாங்குவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 9, 3

கிரகநிலை:

தைரிய ஸ்தானத்தில்  கேது - சுக  ஸ்தானத்தில்  சனி , செவ்வாய், குரு (அதி. சா) - பஞ்சம ஸ்தானத்தில்  புதன்  -  ரண, ருண ஸ்தானத்தில்  சூர்யன் -  அஷ்டம  ஸ்தானத்தில் சந்திரன்,  சுக்ரன் -  பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ  என கிரகங்கள் வலம் வருகின்றன. 

பலன்:

இன்று கணவன், மனைவிக்கிடையே  மகிழ்ச்சி கூடும்.  பிள்ளைகளின்  கல்வியில் கூடுதல் கவனம் தேவை. நீண்ட நாட்களாக செய்ய நினைத்த ஒரு காரியத்தை செய்து முடிப்பீர்கள். மதிப்பும், மரியாதையும் வடும்.  புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 2, 9

கிரகநிலை:

தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் கேது  -   தைரிய ஸ்தானத்தில்  சனி ,செவ்வாய், குரு (அதி. சா) -  சுக  ஸ்தானத்தில்  புதன் - பஞ்சம ஸ்தானத்தில்  சூர்யன் -  களத்திர ஸ்தானத்தில்  சந்திரன்,  சுக்ரன் -  அஷ்டம  ஸ்தானத்தில்   ராஹு  என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று கடன்சுமை குறையும். தொழில் முன்னேற்றம் உண்டாகும்.  எதையும் சாதிக்கும் திறமை அதிகமாகும்.  நினைத்த காரியத்தை நினைத்தபடி நடத்தி முடிக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 4, 6

கிரகநிலை:

ராசியில்  கேது - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சனி,செவ்வாய், குரு (அதி. சா) - தைரிய ஸ்தானத்தில்  புதன் -   சுக  ஸ்தானத்தில் சந்திரன், சூர்யன் -  ரண, ருண  ஸ்தானத்தில் சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில்    ராஹு என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று தொழில், வியாபாரம் சுமாராக நடக்கும் பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் இருக்கும். ஆர்டர்கள் பெறுவதில் தாமதம் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகள் கொடுத்த வேலையை செய்து முடித்து நன்மை பெறுவீர்கள். குடும்பத்தில் சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 5, 6

கிரகநிலை:

ராசியில் சனி, செவ்வாய், குரு (அதி. சா) - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  புதன் -  தைரிய ஸ்தானத்தில்  சூர்யன் - பஞ்சம  ஸ்தானத்தில்  சந்திரன்,  சுக்ரன் -  ரண, ருண  ஸ்தானத்தில் ராஹூ -  அயன, சயன,  போக ஸ்தானத்தில்  கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று  உறவினர் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் தாமதம் ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே  மனம் வருந்தும்படியான சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகள் நீங்கள் சொல்வதை காதில் வாங்காதவர் போல் இருப்பார்கள். எனவே எல்லோரையும் அனுசரித்து செல்வதால் நன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 1,2

கிரகநிலை:

ராசியில் புதன் -  தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  சூர்யன்  - சுக  ஸ்தானத்தில்  சந்திரன்,  சுக்ரன் -  பஞ்சம ஸ்தானத்தில்  ராஹூ  -  லாப ஸ்தானத்தில்  கேது - அயன, சயன, போக ஸ்தானத்தில் சனி, செவ்வாய், குரு (அதி. சா)  என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று நினைத்த காரியத்தை செய்து முடிக்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் மனக்கவலை உண்டாகும். அறிவுதிறன் அதிகரிக்கும். உங்களது பேச்சு மற்றவரை மயக்குவதுபோல் இருக்கும். ருசியான உணவை உண்டு மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்  

அதிர்ஷ்ட எண்: 2, 3

கிரகநிலை:

ராசியில்  சூர்யன் -  தைரிய ஸ்தானத்தில் சந்திரன்,  சுக்ரன் -  சுக ஸ்தானத்தில்  ராஹூ -  தொழில்  ஸ்தானத்தில்  கேது - லாப ஸ்தானத்தில்  சனி, செவ்வாய், குரு (அதி. சா) - அயன, சயன,  போக ஸ்தானத்தில்  புதன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று தொழில் வியாபாரம் முன்னேற்றம் காணும். தொழில் வளர்ச்சிக்காக சில திட்டங்களை செயல்படுத்த முடிவெடுப்பீர்கள். பணவரத்து திருப்தி தரும்.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு செயல்திறமை கூடும். பயணங்களும் செல்ல நேரிடலாம். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். சுற்றத்தினர் வருகை இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 2, 3

Next Story
Share it