1. Home
  2. ஜோதிடம்

26-12-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு வேலையில் இடமாற்றம், பதவிஉயர்வு ஏற்படும்.

26-12-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு வேலையில் இடமாற்றம், பதவிஉயர்வு ஏற்படும்.

26-12-2019-newstm-dwstm-daily-astrology

26-12-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு வேலையில் இடமாற்றம், பதவிஉயர்வு ஏற்படும்.

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

விகாரி வருஷம்
தக்ஷிணாயணம்
ஹேமந்தருது
மார்கழி - 10
வியாழக்கிழமை

அமாவாசை பகல் 11.26 மணி வரை. பின் பிரதமை
மூலம் மாலை 5.55 மணி வரை பின் பூராடம்
சித்த யோகம்
நாமயோகம்: வ்ருத்தி
கரணம்: நாகவம்

அகஸ்: 28.26
த்யாஜ்ஜியம்: 53.08
நேத்ரம்: 0
ஜீவன்: 0
தனுசு லக்ன இருப்பு (நா.வி): 3.41
சூரிய உதயம்: 6.32

ராகு காலம்: மதியம் 1.30 - 3.00
எமகண்டம்: காலை 6.00 - 7.30
குளிகை: காலை 9.00 - 10.30
சூலம்: தெற்கு
பரிகாரம்: நல்லெண்ணெய்


குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்
புஷ்கல யோகம்.
மதுரை ஸ்ரீகூடலழகர் சன்னதியில் பெரியாழ்வார் வென்ற கிளி விலாசம் எழுந்தருளி பரத்துவ நிர்ணயம் செய்தருளல்.
பெருஞ்சேரி வாகீஸ்வரர் பவனி.

திதி: பிரதமை
சந்திராஷ்டமம்: ரோகிணி, மிருகசீரிஷம்


சூரியன் மூலம் 3ம் பாதம் - நட்பு
சந்திரன் தனுசு - நட்பு
செவ்வாய் விசாகம் 3ம் பாதம் - நட்பு
புதன் மூலம் 3ம் பாதம் - நட்பு
குரு மூலம் 4ம் பாதம் - ஆட்சி
சுக்ரன் திருவோணம் 1ம் பாதம் - நட்பு
சனி பூராடம் 3ம் பாதம் - நட்பு
ராகு திருவாதிரை 2ம் பாதம் - நட்பு
கேது மூலம் 4ம் பாதம் - நட்பு

கிரகநிலை: தைரிய ஸ்தானத்தில்  ராஹூ -   களத்திர ஸ்தானத்தில்  செவ்வாய் -   பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன், சூர்யன், புதன், குரு, சனி , கேது - தொழில் ஸ்தானத்தில் சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.   பலன்: இன்று புதிதாக வீடு, மனை வாங்க வேண்டும் என்று யோசனை செய்தவர்களின் எண்ணம் ஈடேறும். மிகவும் விரும்பிய நண்பர்களை விட்டுப் பிரிய வேண்டிய நிலை வரலாம். உங்களின் பொருட்களை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ளவும். தூக்கம் இல்லாமல் தவிக்கும் நிலையில் உள்ளவர்களுக்கு யோகா போன்ற பயிற்சிகளை செய்வது நன்மையைத் தரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்: 5  கிரகநிலை: குடும்ப ஸ்தானத்தில் ராஹூ   -   ரண, ருண ஸ்தானத்தில்  செவ்வாய்  -  அஷ்டம ஸ்தானத்தில்  சந்திரன், சூர்யன், புதன்,  குரு, சனி, கேது  - பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று எந்த பிரச்சனைகளையும் முறியடிக்கும் வல்லமைகளும் பெறலாம். குடும்பத்தில் வசதிகள் தொடரும். ஆடம்பர பொருட்கள் சேரும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் இனிதே நிறைவேறும். சற்று சிரத்தை எடுத்தால் சாதனைகள் செய்யலாம். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 3  கிரகநிலை: ராசியில்  ராஹூ -   பஞ்சம ஸ்தானத்தில்  செவ்வாய் -  களத்திர ஸ்தானத்தில்  சந்திரன், சூர்யன், புதன், குரு, சனி , கேது - அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று குடும்பத்தில் சிற்சில பிரச்சனைகள் வந்தாலும் மகிழ்ச்சியான சூழ்நிலையே நிலவும். பல்வேறு நன்மைகள் நிகழும். உங்கள் முயற்சியில் அனுகூலம் கிடைக்கும். அதே வேளையில் பொருள் விரையமும், வேலையில் பிந்தங்கும் சூழ்நிலையும் ஏற்படலாம். ஆனாலும் அவையனைத்தும் சுபவிரையமும் என கொள்ளுங்கள். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9  கிரகநிலை: சுக ஸ்தானத்தில்  செவ்வாய் -  ரண, ருண ஸ்தானத்தில்  சந்திரன், சூர்யன், புதன்,  குரு, சனி , கேது - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன் -   அயன, சயன, போக ஸ்தானத்தில்  ராஹூ  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று வீண் வாக்குவாதம் வேண்டாம். நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். தேவையற்ற வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம். தந்தையார் உடல்நிலை முன்னேற்றம் ஏற்படும். தந்தையுடன் கருத்து பரிமாற்றம் செய்யும் போது கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7  கிரகநிலை: தைரிய ஸ்தானத்தில்  செவ்வாய்  -  பஞ்சம ஸ்தானத்தில்  சந்திரன், சூர்யன், புதன்,  குரு, சனி , கேது  - ரண, ருண ஸ்தானத்தில் சுக்ரன் -   லாப ஸ்தானத்தில்  ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று வாழ்க்கைத்துணை பெயரில் சிலர் வீடு வாங்குவீர்கள். பொருட்களை களவு கொடுக்க நேரிடலாம். உங்களின் உடமைகள் மீது கண்ணும், கருத்துமாக இருக்க வேண்டும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அறிமுகம் இல்லாதவர்களின் வீட்டில் எதையும் உட்கொள்ள வேண்டாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9  கிரகநிலை: தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  செவ்வாய் - சுக  ஸ்தானத்தில்  சந்திரன், சூர்யன், புதன்,  குரு, சனி , கேது - பஞ்சம ஸ்தானத்தில்  சுக்ரன் - தொழில்  ஸ்தானத்தில்   ராஹூ   என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று பணப்புழக்கம் சரியாக இருக்கும். ஆனால் சுபநிகழ்ச்சிகளுக்காக செலவு செய்ய வேண்டி வரும். தூங்கும் போது கவனம் தேவை. பொருட்களை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளவும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்துப் போட கூடாது. அப்படி போட்டால் பிரச்சனைகள் வரலாம். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9  கிரகநிலை: ராசியில் செவ்வாய் -   தைரிய ஸ்தானத்தில்   சந்திரன், சூர்யன், புதன், குரு, சனி , கேது -  சுக  ஸ்தானத்தில் சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ   என கிரகங்கள் வலம் வருகின்றன.   பலன்: இன்று பொருட்களை களவு கொடுக்க நேரிடலாம். உங்களின் உடமைகள் மீது கண்ணும், கருத்துமாக இருக்க வேண்டும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அறிமுகம் இல்லாதவர்களின் வீட்டில் எதையும் உட்கொள்ள வேண்டாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9  கிரகநிலை: தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  சந்திரன், சூர்யன், புதன், குரு, சனி , கேது  - தைரிய ஸ்தானத்தில் சுக்ரன் -   அஷ்டம  ஸ்தானத்தில்  ராஹு -  அயன, சயன, போக ஸ்தானத்தில் செவ்வாய்  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று கணவன் - மனைவிக்குள் எந்த பிரச்சனையானாலும் மனம் விட்டு பேசி உங்கள் பிரச்சனைகளை நீங்களே முற்றுப்புள்ளி வையுங்கள். மூன்றாம் மனிதரின் தலையீடு வேண்டாம். பிள்ளைகளின் உணர்வுகளுக்கும் இடம் கொடுங்கள். உணவு விஷயத்தில் கவனம் தேவை. உடல்நிலையிலும் அக்கறை செலுத்தவும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9கிரகநிலை: ராசியில்  சந்திரன், சூர்யன், புதன், குரு, சனி , கேது -  தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன்  - களத்திர ஸ்தானத்தில்  ராஹு -  லாப ஸ்தானத்தில்  செவ்வாய்  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று மனைவி வழியில் உள்ள உறவினர்களுடன் கருத்து பரிமாற்றங்கள் செய்யும் போது மிகுந்த எச்சரிக்கை தேவை. முயற்சிகளில் தடைகள் வந்தாலும் அதையெல்லாம் முறியடித்து வெற்றிப் பாதையில் பயணீப்பீர்கள். தாய் வழி உறவினர்களுடன் சின்ன கருத்து மோதல்கள் வரலாம். நீங்கள் சொன்ன வாக்கைக் காப்பாற்ற சிறிது போராட வேண்டி வரலாம். மேலும் வீண் அலைச்சலும் ஏற்படலாம். தேவையில்லாத பணவிரையம் ஆகலாம். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6  கிரகநிலை: ராசியில் சுக்ரன் - ரண, ருண  ஸ்தானத்தில்  ராஹூ - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் -  அயன, சயன,  போக ஸ்தானத்தில்  சந்திரன்,  சூர்யன், புதன், குரு,  சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சனைகளில் தலையிடுவதும் கருத்து சொல்வதையும் தவிர்த்தல் நலம். முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். செலவுகளை திட்டமிட்டு செய்வது நல்லது. புதிய காரியங்களை செய்ய துவங்குவதற்கு முன் நல்ல நேரம் காலம் பார்த்து செய்வது நல்லது. வேலையில் இருந்த பளு கொஞ்ச கொஞ்சமாகக் குறையும். அதில் இருந்து வந்த சுணக்க நிலையும் மாறும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9  கிரகநிலை: பஞ்சம ஸ்தானத்தில்  ராஹூ -  பாக்கிய ஸ்தானத்தில்  செவ்வாய் -  லாப ஸ்தானத்தில்  சந்திரன், சூர்யன், புதன், குரு, சனி , கேது  - அயன, சயன,  போக ஸ்தானத்தில் சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று உங்களது யோசனைகளை அலுவலகத்திலும், குடும்பத்திலும் மதித்து நடப்பார்கள். உங்களது மேலான யோசனைகளை சொல்ல தயாராகுங்கள். சொன்ன வாக்கை காப்பாற்ற முடியாமல் தவித்த நிலையும் மாறப் போகிறது. இனியாவது வாக்கு கொடுப்பதற்கு முன் யோசித்து கொடுக்கவும். தைரியம் பிரகாசிக்கும் நேரமிது. அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7  கிரகநிலை: சுக ஸ்தானத்தில் ராஹூ -  அஷ்டம ஸ்தானத்தில்  செவ்வாய் -  தொழில்  ஸ்தானத்தில்  சந்திரன், சூர்யன், புதன், குரு, சனி , கேது - லாப ஸ்தானத்தில் சுக்ரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். இருந்தாலும் விட்டு கொடுத்து போவது நல்லது. திருமணத்தடை நீங்கி திருமணம் இனிதே நடைபெறும். நண்பர்கள் உதவிகள் செய்வர். தந்தையார் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வேலைசார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு வெளிநாட்டு பயணங்கள் கிடைக்க கூடும். வேலை இடமாற்றம், பதவிஉயர்வு ஏற்படும். சம்பள உயர்வும் கிடைக்கும். லாபகரமான முதலீடுகள் செய்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9   

newstm.in

Trending News

Latest News

You May Like