26-03-2020 - தினப்பலன்: இந்த ராசிகளுக்கு அமோகமாக இருக்கும்!!

26-03-2020 - தினப்பலன்: இந்த ராசிகளுக்கு அமோகமாக இருக்கும்!!

26-03-2020 - தினப்பலன்: இந்த ராசிகளுக்கு அமோகமாக இருக்கும்!!
X

கிரகநிலை:

ராசியில்  சுக்ரன் -  தைரிய ஸ்தானத்தில் ராஹூ -  பாக்கிய ஸ்தானத்தில்  குரு, சனி , கேது -  தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில்  புதன் - அயன, சயன, போக ஸ்தானத்தில்  சந்திரன், சூர்யன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. 

இன்று காலை 7.08 மணிக்கு சந்திர  பகவான் ராசிக்கு மாறுகிறார்.

பலன்:

இன்று கிரகசூழ்நிலை அருமையாக உள்ளது. நீங்கள் விரும்பிய இடமாற்றம் உண்டாகும். எதை செய்தாலும் ஒரு குறிக்கோளுடன் செய்வீர்கள். செலவும் அதிகரிக்கும். அதே வேளையில் பணவரவும் உண்டாகும். சகோதரர்கள் மூலம் நன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

கிரகநிலை:

குடும்ப ஸ்தானத்தில்  ராஹூ -   அஷ்டம ஸ்தானத்தில்  குரு, சனி, கேது  - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் -  தொழில் ஸ்தானத்தில்  புதன்  - லாப ஸ்தானத்தில் சந்திரன், சூர்யன் -  அயன, சயன, போக ஸ்தானத்தில்  சுக்ரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று காலை 7.08 மணிக்கு சந்திர  பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று மனோதைரியம் கூடும். புதிய நட்பு கிடைக்கும். எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நன்மைதரும். தொழில், வியாபாரத்தில்  எதிர்பாராத தடங்கல்கள் வரலாம். பணவரத்து இருந்தாலும் தேவை அதிகரிக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்க பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

கிரகநிலை:

ராசியில்  ராஹூ -  களத்திர ஸ்தானத்தில்  குரு, சனி , கேது - அஷ்டம ஸ்தானத்தில்   செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில்  புதன் -  தொழில் ஸ்தானத்தில் சந்திரன்,  சூர்யன்  - லாப  ஸ்தானத்தில்  சுக்ரன்   என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று காலை 7.08 மணிக்கு சந்திர  பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று சரக்குகளை சரியான நேரத்தில் கொண்டு சேர்ப்பீர்கள். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வோர் மிகுந்த லாபம் பெறுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற வேகத்தில் பணிபுரிவார்கள்.  சிலருக்கு புதிய பதவி அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்க பெறுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

கிரகநிலை:

ரண, ருண ஸ்தானத்தில்  குரு, சனி , கேது -  களத்திர ஸ்தானத்தில்  செவ்வாய்  - அஷ்டம ஸ்தானத்தில்  புதன்  -  பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன்,  சூர்யன் -  தொழில்  ஸ்தானத்தில் சுக்ரன் -  அயன, சயன, போக ஸ்தானத்தில்  ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று காலை 7.08 மணிக்கு சந்திர  பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று குடும்பத்தை விட்டு வெளியே சென்று தங்க நேரிடலாம். மேலிடத்தின் கனிவான பார்வை உங்கள் மீது விழும். மேல்பதவி செல்வதற்கு எழுதிய தேர்வில் தேர்ச்சி பெறுவீர்கள். இடமாற்றம் உறுதிபடுத்தப்படும். நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறும்.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 4, 6

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பிரவுண்

கிரகநிலை:

பஞ்சம ஸ்தானத்தில்  குரு, சனி , கேது -  ரண, ருண ஸ்தானத்தில் செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில்  புதன் -  அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன்,  சூர்யன் -  பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன்  -  லாப ஸ்தானத்தில்  ராஹூ  என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று காலை 7.08 மணிக்கு சந்திர  பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் சிறப்பான முறையில் நடந்தேறும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும். விருந்தினர்கள் வருகை இருக்கும்.  வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.  திருமண முயற்சிகள் சாதகமான பலன் தரும். பிள்ளைகளுடன் சந்தோஷமாக பொழுதை கழிப்பீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

அதிர்ஷ்ட நிறம்: பிரவுண், வெள்ளை

கிரகநிலை:

சுக  ஸ்தானத்தில்  குரு, சனி , கேது - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய்  - ரண, ருண ஸ்தானத்தில் புதன்  -  களத்திர ஸ்தானத்தில் சந்திரன்,  சூர்யன் -  அஷ்டம  ஸ்தானத்தில் சுக்ரன் -  தொழில்  ஸ்தானத்தில்  ராஹூ  என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று காலை 7.08 மணிக்கு சந்திர  பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று குடும்பத்தில் அனுகூலமான சூழ்நிலையைக் காண்பீர்கள். உங்கள் உடல் ஆரோக்யம் சிறப்பாக இருக்கும். உற்றார், உறவினர்கள் பாசத்தோடு பழகுவார்கள். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 8, 9

அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெள்ளை

கிரகநிலை:

தைரிய ஸ்தானத்தில்  குரு, சனி , கேது - சுக  ஸ்தானத்தில்  செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில்  புதன்  -  ரண, ருண ஸ்தானத்தில் சந்திரன்,  சூர்யன் -  களத்திர  ஸ்தானத்தில்  சுக்ரன் -  பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ  என கிரகங்கள் வலம் வருகின்றன. 

இன்று காலை 7.08 மணிக்கு சந்திர  பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று பெரியோரின் ஆலோசனைப்படி நடந்துகொண்டு, குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டாலும் தப்பித்துக்கொள்வீர்கள். குழந்தைகள் உங்கள் சொற்படி கேட்பார்கள். புதிய ஒப்பந்தங்களைப் பெறுவதற்குத் தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை

கிரகநிலை:

தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  குரு, சனி , கேது  -   தைரிய ஸ்தானத்தில்   செவ்வாய் -  சுக  ஸ்தானத்தில்  புதன் - பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன் , சூர்யன் -   ரண, ருண ஸ்தானத்தில்  சுக்ரன் -  அஷ்டம  ஸ்தானத்தில்   ராஹு  என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று காலை 7.08 மணிக்கு சந்திர  பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று உங்கள் சுய கௌரவத்துக்குப் பங்கம் ஏற்படாது. சக ஊழியர்களின் உதவியால் உங்களின் திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். பணியின் நிமித்தமாக வெளிநாட்டிற்கு பயணம் செய்வீர்கள். டெக்னிக்கல் சார்ந்த கலைஞர்களுக்கு வாய்ப்புகள் வந்து குவியும்.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 8

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

கிரகநிலை:

ராசியில்  குரு, சனி , கேது - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - தைரிய ஸ்தானத்தில்  புதன் -   சுக  ஸ்தானத்தில் சந்திரன், சூர்யன் - பஞ்சம  ஸ்தானத்தில் சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில்    ராஹு என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று காலை 7.08 மணிக்கு சந்திர  பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று புதிய பதவிகள் வரும். செய்கின்ற காரியங்களில் சிறு தடைகள் ஏற்பட்டாலும் முடிவு சாதகமாகவே அமையும். பொதுநலனோடு இயைந்த சமுதாய நலன் சார்ந்த எண்ணங்களைச் செயல்படுத்த முனைவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் அகலும்.  மேலிடத்திடம் இருந்து வந்த மனக்கசப்புகள் அகலும்.

அதிர்ஷ்ட எண்கள்: நீலம், சிவப்பு

அதிர்ஷ்ட நிறம்: 3, 4, 5

கிரகநிலை:

ராசியில் செவ்வாய் - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  புதன் -  தைரிய ஸ்தானத்தில் சந்திரன்,  சூர்யன் - சுக  ஸ்தானத்தில்  சுக்ரன் -  ரண, ருண  ஸ்தானத்தில் ராஹூ -  அயன, சயன,  போக ஸ்தானத்தில் குரு,  சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று காலை 7.08 மணிக்கு சந்திர  பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று திடீரென்று கோபம் வரும். ஏதாவது ஒருவகையில் அடுத்தவரிடம் வீண்பேச்சு கேட்க நேரலாம் கவனம் தேவை. மற்றவர்கள் செய்கைகளால்  மனவருத்தம் உண்டாகலாம். அதேவேளையில் நீண்டநாள் இழுபறியாக இருந்து வந்த பிரச்சனை முடிவுக்கு வரும்.

அதிர்ஷ்ட எண்கள்: 2,8

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், வெண்பச்சை

கிரகநிலை:

ராசியில் புதன் -  தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்   சந்திரன், சூர்யன்  - தைரிய ஸ்தானத்தில்  சுக்ரன் -  பஞ்சம ஸ்தானத்தில்  ராஹூ  -  லாப ஸ்தானத்தில்  குரு, சனி , கேது - அயன, சயன, போக ஸ்தானத்தில் செவ்வாய்  என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று காலை 7.08 மணிக்கு சந்திர  பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த  பின்தங்கிய நிலை மாறும். எதிர்பார்த்த ஆர்டர்கள் வந்து சேரும். வியாபார போட்டிகள் தடை தாமதங்கள் நீங்கும். எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு உண்டாகும். மனதில் அமைதி நிலவும். நிம்மதியாக உறங்குவீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்: 3, 8, 9

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, ஆரஞ்சு

கிரகநிலை:

ராசியில் சந்திரன்,  சூர்யன் -  தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன் -  சுக ஸ்தானத்தில்  ராஹூ -  தொழில்  ஸ்தானத்தில்  குரு, சனி , கேது - லாப ஸ்தானத்தில்  செவ்வாய் - அயன, சயன,  போக ஸ்தானத்தில்  புதன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று காலை 7.08 மணிக்கு சந்திர பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று வெளியூரிலிருந்து மகிழ்ச்சிகரமான செய்திகள் வந்து சேரும். உங்கள் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். அனைத்து விஷயங்களையும் நல்ல கண்ணோட்டத்துடன் காண்பீர்கள். பங்கு வர்த்தகத்தில் லாபம் குவியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு மேல் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவார்கள்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 7, 9

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

Next Story
Share it