1. Home
  2. ஜோதிடம்

22-11-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு எதையும் சமாளிக்கும் துணிச்சல் வரும்

22-11-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு எதையும் சமாளிக்கும் துணிச்சல் வரும்

22-11-2019-newstm-dwstm-daily-astrology

22-11-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு எதையும் சமாளிக்கும் துணிச்சல் வரும்

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

விகாரி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
கார்த்திகை - 06
வெள்ளிக்கிழமை

தசமி காலை 7.15 மணி வரை. பின் ஏகாதசி. ஏகாதசி மறு நாள் காலை 4.55 மணி வரை. பின்னர் துவாதசி.
உத்ரம் மாலை 3.38 மணி வரை பின் ஹஸ்தம்
சித்த யோகம்
நாமயோகம்: விஷ்கம்பம்
கரணம்: பத்ரம்

அகஸ்: 28.41
த்யாஜ்ஜியம்: 43.05
நேத்ரம்: 1
ஜீவன்: 1/2
விருச்சிக லக்ன இருப்பு (நா.வி): 4.36
சூரிய உதயம்: 6.14


ராகு காலம்: காலை 10.30 - 12.00
எமகண்டம்: மதியம் 3.00 - 4.30
குளிகை: காலை 7.30 - 9.00
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்.
ஸ்மார்த்த ஏகாதசி.
சங்கரன் கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.
திருவிடைமருதூர் ஸ்ரீபிரகத்குசாம்பிகை புறப்பாடு.
சுபமுகூர்த்த தினம்.

திதி: ஏகாதசி
சந்திராஷ்டமம்: சதயம், பூரட்டாதி

சூரியன் அனுஷம் 1ம் பாதம் - பகை
சந்திரன் கன்னி - நட்பு
செவ்வாய் சித்திரை 4ம் பாதம் - நட்பு
புதன் சுவாதி 3ம் பாதம் - நட்பு
குரு மூலம் 2ம் பாதம் - ஆட்சி
சுக்ரன் கேட்டை 4ம் பாதம் - நட்பு
சனி பூராடம் 2ம் பாதம் - நட்பு
ராகு திருவாதிரை 3ம் பாதம் - நட்பு
கேது பூராடம் 1ம் பாதம் - நட்பு

கிரகநிலை: தைரிய ஸ்தானத்தில்  ராஹூ - ரண, ருண ஸ்தானத்தில் சந்திரன் -  களத்திர ஸ்தானத்தில்   புதன், செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன்,  சுக்ரன்  - பாக்கிய ஸ்தானத்தில்   குரு, சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன.   இன்று இரவு 11.56 மணிக்கு  சுக்கிர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று எதிர்பார்த்த தகவல் சாதகமாக வரும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான  முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். மாணவர்கள் யாருக்கும் உத்திரவாதம் அளிக்காமல் இருப்பது நல்லது. கல்வியில் கூடுதல் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை                                அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5  கிரகநிலை: குடும்ப ஸ்தானத்தில்  ராஹூ -   பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன் -   ரண, ருண ஸ்தானத்தில்  புதன்,   செவ்வாய்   -  களத்திர ஸ்தானத்தில்  சூர்யன், சுக்ரன்  - அஷ்டம ஸ்தானத்தில்   குரு, சனி, கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று இரவு 11.56 மணிக்கு  சுக்கிர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனம் தேவை. உடல்நிலையைப் பொறுத்தவரை இருந்து வந்த மருத்துவ செலவுகள் குறையும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னர்களை அனுசரித்து செல்வது வியாபார வளர்ச்சிக்கு உதவும். அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம                                        அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9கிரகநிலை: ராசியில்  ராஹூ -  சுக  ஸ்தானத்தில்  சந்திரன் -   பஞ்சம ஸ்தானத்தில் புதன், செவ்வாய் -  ரண, ருண ஸ்தானத்தில்  சூர்யன், சுக்ரன்  -   களத்திர ஸ்தானத்தில்  குரு, சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று இரவு 11.56 மணிக்கு  சுக்கிர பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கும் துணிச்சல் வரும். பணவரத்து திருப்தி தரும். எதிர்ப்புகள் குறையும். சோம்பல் அதிகமாகலாம். தேவையான உதவிகள் கிடைக்கும்.  பணவரத்து அதிகரிக்கும். உழைப்பு அதிகரிக்கும். பயணங்களால் வீண் செலவு உண்டாகும். பொருட்களை பாதுகாப்பாக வைப்பது அவசியம். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9கிரகநிலை: தைரிய ஸ்தானத்தில் சந்திரன் - சுக ஸ்தானத்தில் புதன், செவ்வாய் -   பஞ்சம ஸ்தானத்தில்  சூர்யன், சுக்ரன் - ரண, ருண ஸ்தானத்தில்  குரு, சனி , கேது   -   அயன, சயன, போக ஸ்தானத்தில்  ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று இரவு 11.56 மணிக்கு  சுக்கிர பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று குடும்பத்தில் அமைதி குறையலாம். நிதானமாக பேசி பழகுவது நல்லது. கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நன்மை தரும். பிள்ளைகள் மீது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள்  திறமையான  பேச்சால் வெற்றி பெறுவார்கள். வாகன  யோகம் உண்டாகும் அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9கிரகநிலை: குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - தைரிய ஸ்தானத்தில்  புதன், செவ்வாய் -  சுக  ஸ்தானத்தில்  சூர்யன்,  சுக்ரன்  -   பஞ்சம ஸ்தானத்தில்  குரு, சனி , கேது   -  லாப ஸ்தானத்தில்  ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று இரவு 11.56 மணிக்கு  சுக்கிர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று தொழில் வியாபாரத்தில் திடீர் தடைகள் ஏற்பட்டு நீங்கும். வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பங்குதாரர்களுடன் இருந்து வந்த நீண்ட நாள் பிரச்சனைகள் ஒரு சுமூக முடிவிற்கு வரும். எந்த ஒரு காரியத்திலும் சரியான முடிவுக்கு வர முடியாமல் தடுமாற்றம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9    கிரகநிலை: ராசியில் சந்திரன் - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  புதன், செவ்வாய் -  தைரிய, வீர்ய ஸ்தானத்தில்  சூர்யன், சுக்ரன்  -  சுக  ஸ்தானத்தில்   குரு, சனி , கேது  -  தொழில்  ஸ்தானத்தில்   ராஹூ   என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று இரவு 11.56 மணிக்கு  சுக்கிர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று உங்கள் வியாபாரத்தை விருத்தி செய்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. பணி நிமித்தமாக வெளியூர் சென்று தங்க வேண்டி வரலாம். பிள்ளைகள்  வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். வராது என்று நினைத்த பொருள் வந்து சேரலாம். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9கிரகநிலை: ராசியில்  செவ்வாய்,  புதன் - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  சூர்யன்,  சுக்ரன் -  தைரிய ஸ்தானத்தில்  குரு, சனி , கேது -  பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ -   அயன, சயன, போக ஸ்தானத்தில் சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று இரவு 11.56 மணிக்கு  சுக்கிர பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று தொழில் விரிவாக்கம் தொடர்பான திட்டங்கள் செயல்படுத்த முயற்சி மேற்கொள்வீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். மேலிடத்திலிருந்து உங்களுக்கு பொறுப்புகளை அதிகரிக்கலாம். பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. சேமிப்புகள் செய்யும் முன் தகுந்த ஆலோசனை பெறவும்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7  கிரகநிலை: ராசியில்  சூர்யன், சுக்ரன்  - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  குரு, சனி , கேது  - அஷ்டம  ஸ்தானத்தில்  ராஹு-  லாப ஸ்தானத்தில் சந்திரன் - அயன, சயன, போக ஸ்தானத்தில் -   புதன், செவ்வாய்  என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று இரவு 11.56 மணிக்கு  சுக்கிர பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று சகோதரர்களால் நன்மை உண்டாகும். துணிச்சலாக எதிலும் ஈடுபடுவீர்கள்  மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனம் தேவை. பிரதிபலன் எதையும் எதிர்பார்க்காமல் எடுத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். பெற்றோர் சொல்படி கேட்டு நடப்பீர்கள். தொழில் வியாபாரம் லாபகரமாக  நடக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 5  கிரகநிலை: ராசியில் குரு, சனி , கேது -  களத்திர ஸ்தானத்தில்  ராஹு - தொழில் ஸ்தானத்தில் சந்திரன் -  லாப ஸ்தானத்தில்  செவ்வாய்,  புதன் -  அயன, சயன, போக ஸ்தானத்தில்   சூர்யன், சுக்ரன்   என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று இரவு 11.56 மணிக்கு  சுக்கிர பகவான் ராசிக்கு மாறுகிறார். பலன்: இன்று எதிலும் லாபம் கிடைக்கும். காரியங்கள் வெற்றிகரமாக நடக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். வீண்கவலை நீங்கும். ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும். எல்லா நன்மைகளும் உண்டாகும். பயணம் மூலம் நன்மை கிடைக்கும். செய்யும் காரியங்களால் பெருமை ஏற்படும். புத்தி சாதூரியம் கூடும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9கிரகநிலை: ரண, ருண , ஸ்தானத்தில்  ராஹூ -  பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் -  தொழில் ஸ்தானத்தில்  செவ்வாய்,  புதன் -  லாப ஸ்தானத்தில்  சூர்யன், சுக்ரன்  -   அயன, சயன,  போக ஸ்தானத்தில்   குரு,  சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று இரவு 11.56 மணிக்கு  சுக்கிர பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று பொன், பொருள் சேரும். வாகன யோகம் உண்டாகும். விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் கிடைக்கும். புதிய தொடர்புகள் ஏற்படும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்க பெறுவீர்கள். அவர்களது கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.  தொழில் தொடர்பான அலைச்சல் உண்டாகலாம். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 4, 6  கிரகநிலை: பஞ்சம ஸ்தானத்தில்  ராஹூ  - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் -  பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய்,  புதன் -  தொழில் ஸ்தானத்தில்  சூர்யன்,  சுக்ரன்  -  லாப ஸ்தானத்தில் குரு, சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று இரவு 11.56 மணிக்கு  சுக்கிர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த கருத்து மோதல்கள் மறையும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை காணப்படும். வியாபார நிமித்தமாக  பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். போட்டிகள் குறையும். பெரியோர்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். பெரும் புள்ளிகளின் அறிமுகம் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5  கிரகநிலை: சுக ஸ்தானத்தில் ராஹூ  -   களத்திர ஸ்தானத்தில் சந்திரன்  - அஷ்டம ஸ்தானத்தில்  செவ்வாய்,  புதன் - பாக்கிய ஸ்தானத்தில்  சூர்யன்,  சுக்ரன் - தொழில்  ஸ்தானத்தில் குரு, சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று இரவு 11.56 மணிக்கு  சுக்கிர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று எந்த வேலையை முதலில் கவனிப்பது என்று குழப்பம் வரும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் தடுமாற்றம் உண்டாகும். வாகன  யோகம் உண்டாகும். பணவரத்து திருப்தி தரும். எதிர்ப்புகள் குறையும். குடும்ப விஷயத்தில் அந்நிய நபர்களின் தலையீட்டை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து செல்வது மன அமைதியை தரும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6  

newstm.in

Trending News

Latest News

You May Like