1. Home
  2. ஜோதிடம்

21-09-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும்.

21-09-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும்.

21-09-2019-newstm-daily-astrology

21-09-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும்.

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

21-Sep-19
விகாரி வருஷம்
தக்ஷிணாயணம்
வர்ஷருது
புரட்டாசி - 04
சனிக்கிழமை

ஸப்தமி மாலை 4.18 மணி வரை. பின் அஷ்டமி
ரோகிணி காலை 8.38 மணி வரை பின் மிருக சீரிஷம்
அமிர்த யோகம்
நாமயோகம்: ஸித்தி
கரணம்: பவம்

அகஸ்: 30.03
த்யாஜ்ஜியம்: 20.18
நேத்ரம்: 2
ஜீவன்: 1/2
கன்னி லக்ன இருப்பு (நா.வி): 4.26
சூரிய உதயம்: 6.05


ராகு காலம்: காலை 9.00 - 10.30
எமகண்டம்: மதியம் 1.30 - 3.00
குளிகை: காலை 6.00 - 7.30
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்

குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்.
திருநள்ளார் ஸ்ரீசனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.
இன்று கெருட தரிசனம்.
விஷ்ணுவாலய வழிபாடு.
பிரயாணத்திற்கு போகினி பின்புறமிருக்க காரியானுகூலமாகும்.

திதி: ஸப்தமி
சந்திராஷ்டமம்: கேட்டை
சூரியன்
உத்திரம் 3ம் பாதம் - பகை
சந்திரன்
ரிஷபம் - உச்சம்
செவ்வாய்
உத்திரம் 1ம் பாதம் - பகை
புதன்
ஹஸ்தம் 4ம் பாதம் - ஆட்சி - உச்சம்
குரு
கேட்டை 3ம் பாதம் - பகை
சுக்ரன்
ஹஸ்தம் 1ம் பாதம் - நீசம்
சனி
மூலம் 4ம் பாதம் - நட்பு
ராகு
திருவாதிரை 4ம் பாதம் - நட்பு
கேது
பூராடம் 2ம் பாதம் - நட்பு

மேஷம்: கிரகநிலை: தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - தைரிய ஸ்தானத்தில்  ராஹூ - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய் -  ரண, ருண ஸ்தானத்தில் சூர்யன், புதன், சுக்ரன் -  அஷ்டம ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன.   இன்று இரவு 08:35 மணிக்கு சந்திர பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று தொழில் வியாபாரம் மந்தநிலை மாறும். சாதூரியமான பேச்சின் மூலம் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். விலகி சென்ற வாடிக்கையாளர்கள்  மீண்டும் வருவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமான செயல்கள் மூலம் காரிய வெற்றி காண்பார்கள். குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். திருமண முயற்சிகள்  சாதகமான பலன் தரும். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7ரிஷபம்: கிரகநிலை: ராசியில் சந்திரன் - குடும்ப ஸ்தானத்தில்  ராஹூ - சுக ஸ்தானத்தில்  செவ்வாய் -  பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், புதன்,  சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஸ்தானத்தில் சனி, கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று இரவு 08:35 மணிக்கு சந்திர பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். மனவருத்தத்துடன் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள்.  கவனமாக செயல்படுவது நல்லது. கணவன் மனைவிக்கிடையே சந்தோஷம் நீடிக்கும். வியாபார போட்டிகள் குறையும். எல்லா துறைகளிலும் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதை பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுவார்கள்.   அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 9    மிதுனம்: கிரகநிலை: ராசியில் ராஹூ - தைரிய ஸ்தானத்தில் செவ்வாய் - சுக ஸ்தானத்தில் சூர்யன், புதன்,  சுக்ரன் - ரண, ருண ஸ்தானத்தில் குரு  - களத்திர ஸ்தானத்தில் சனி , கேது -  அயன, சயன,போக ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று இரவு 08:35 மணிக்கு சந்திர பகவான் ராசிக்கு மாறுகிறார். பலன்: இன்று பிள்ளைகளுக்கு தேவையான  ஆடை அணிகலன்களை  வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். எடுத்த காரியங்களில் சாதகமான போக்கு காணப்படும். மங்கள நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரிடும். வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும். வேலை பார்க்கும் இடத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவி ஒருவரது பேச்சை மற்றவர் கேட்பதன் மூலம் நன்மை உண்டாகும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 9, 3கடகம்: கிரகநிலை: குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - தைரிய, வீர்ய ஸ்தானத்தில் சூர்யன், புதன்,  சுக்ரன் -  பஞ்சம ஸ்தானத்தில் குரு - ரண, ருண ஸ்தானத்தில் சனி , கேது - லாப ஸ்தானத்தில் சந்திரன் - அயன, சயன, போக ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று இரவு 08:35 மணிக்கு சந்திர பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று பிரிந்து சென்ற நண்பர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற பாடுபடுவீர்கள். மன அமைதி கிடைக்கும். காரிய தடைகள் விலகும். கடமை உணர்வுடன் திட்டமிட்டு செயலாற்றுவீர்கள். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள்.  அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்:  4, 6சிம்மம்: கிரகநிலை: ராசியில்  செவ்வாய் -  குடும்ப ஸ்தானத்தில் சூர்யன்,புதன்,  சுக்ரன்- சுக  ஸ்தானத்தில்  குரு -  பஞ்சம ஸ்தானத்தில்  சனி , கேது - தொழில் ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில்  ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று இரவு 08:35 மணிக்கு சந்திர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று விருப்பங்கள் கைகூடும். மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும். பயன்தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்கள் மூலம் நன்மை உண்டாகும். மனகுழப்பம் நீங்கி தெளிவு பெறுவீர்கள். விடுமுறையில் மகிழ்ச்சியான பொழுது போக்கில் ஈடுபடுவீர்கள். தடைகள் விலகும். பணவரத்து திருப்திதரும். மாணவர்களுக்கு  கல்வி பற்றிய கவலை விலகும்.   அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6கன்னி: கிரகநிலை: ராசியில் சூர்யன், புதன்,  சுக்ரன் - தைரிய ஸ்தானத்தில்  குரு -  சுக  ஸ்தானத்தில்  சனி , கேது - பாக்கிய  ஸ்தானத்தில் சந்திரன் - தொழில் ஸ்தானத்தில்   ராஹூ - அயன, சயன, போக ஸ்தானத்தில் செவ்வாய்  என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று இரவு 08:35 மணிக்கு சந்திர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று எதிர்பாலினரால் காரிய அனுகூலம் ஏற்படும். எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள்  சாதகமாக நடந்து முடியும். புதிய ஆர்டர்கள் வந்து சேரும். பழைய பாக்கிகள்  வசூலிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். விளையாட்டு போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும்.    அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 7துலாம்: கிரகநிலை: தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  குரு - தைரிய ஸ்தானத்தில்  சனி , கேது- அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் -  பாக்கிய ஸ்தானத்தில்  ராஹூ - லாப ஸ்தானத்தில் செவ்வாய் -  அயன, சயன, போக ஸ்தானத்தில் சூர்யன், புதன்,  சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று இரவு 08:35 மணிக்கு சந்திர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.   பலன்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளுடன் அனுசரித்து செல்வது நன்மையை தரும். புதியவேலை தேடுபவர்களுக்கு அலைச்சல் இருக்கும். குடும்பத்தில் அமைதி காணப்படும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். பலவகைகளிலும் நன்மை உண்டாகும். இழுபறியாக இருந்த சில வேலைகள் சாதகமாக நடந்து முடியும். பணவரத்து அதிகரிக்கும்.   அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 9விருச்சிகம்: கிரகநிலை: ராசியில்  குரு - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  சனி , கேது - களத்திர ஸ்தானத்தில் சந்திரன் -  அஷ்டம  ஸ்தானத்தில் ராஹு- தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் சூர்யன்,புதன்,  சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று இரவு 08:35 மணிக்கு சந்திர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று கணவன், மனைவிக்கிடையே சகஜநிலை இருக்கும். பிள்ளைகள் கல்வி தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. உறவினர்கள் வருகை இருக்கும்.தெளிவான முடிவு எடுப்பதன் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். அரசாங்கம் தொடர்பான விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும். மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும்.       அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 9, 3தனுசு: கிரகநிலை: ராசியில்  சனி , கேது - ரண, ருண, ஸ்தானத்தில் சந்திரன் -  களத்திர ஸ்தானத்தில் ராஹு- பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் -  தொழில் ஸ்தானத்தில் சூர்யன், புதன்,  சுக்ரன் - அயன, சயன, போக ஸ்தானத்தில் குரு  என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று இரவு 08:35 மணிக்கு சந்திர பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று உங்களது ஆலோசனையை கேட்டு சிலர் வரலாம். உங்களது செயல்கள்  மூலம் மதிப்பு கூடும். பணவரத்து திருப்திதரும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கூடுதல் கவனம் செலுத்தி பாடங்களை படிப்பது நன்மை தரும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.கடினமான முயற்சிகள் கூட எளிமையாக செய்ய முடியும். தொழில் வியாபாரத்தில் இருந்த பண தட்டுப்பாடு நீங்கும்.   அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்:  4, 6மகரம்: கிரகநிலை: பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன் - ரண, ருண ஸ்தானத்தில் ராஹூ - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், புதன்,  சுக்ரன்-  லாப ஸ்தானத்தில்  குரு- அயன, சயன, போக ஸ்தானத்தில் சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று இரவு 08:35 மணிக்கு சந்திர பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று வீண் அலைச்சல் குறையும். காரிய தடைகள் நீங்கும். எல்லாவகையிலும் நற்பலனே ஏற்படும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். ஆன்மிக  எண்ணங்கள் அதிகரிக்கும். உங்களது செயல்கள் மூலம் புகழ் கிடைக்கும்.வசூலாக வேண்டிய கடன்பாக்கிகள் வசூலாகும்.  வியாபாரம் தொடர்பான பயணங்களினால் லாபம் கிடைக்க பெறுவீர்கள்  அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6கும்பம்: கிரகநிலை: சுக ஸ்தானத்தில் சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில்  ராஹூ - களத்திர ஸ்தானத்தில்  செவ்வாய் -  அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன்,புதன்,  சுக்ரன்- தொழில் ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் சனி , கேது   என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று இரவு 08:35 மணிக்கு சந்திர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று எதிர்பாராமல் நடக்கும் திருப்பங்களால் சாதகமான பலன் கிடைக்கும். உல்லாச பயணங்களும்  செல்ல நேரலாம். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களுக்காக அலைய வேண்டி இருக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை குறையும். வர வேண்டிய பணம் வந்து சேரும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 7மீனம்: கிரகநிலை: தைரிய ஸ்தானத்தில் சந்திரன் - சுக ஸ்தானத்தில் ராஹூ - ரண, ருண ஸ்தானத்தில்  செவ்வாய்  -  களத்திர ஸ்தானத்தில் சூர்யன்,புதன்,  சுக்ரன்-   பாக்கிய ஸ்தானத்தில் குரு - தொழில்  ஸ்தானத்தில் சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன.    இன்று இரவு 08:35 மணிக்கு சந்திர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற வாய்ப்புகள் வரும். புதிய வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கலாம். குடும்பத்தில் எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்களால் இழுபறியாக இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். கவுரவம் உயரும். மற்றவர்களிடம் நன்மதிப்பு உண்டாகும்.  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை அதிர்ஷ்ட எண்: 1, 7

newstm.in

Trending News

Latest News

You May Like