1. Home
  2. ஜோதிடம்

(18-07-2020) இந்தநாள் உங்களுக்கு எப்படி?

(18-07-2020) இந்தநாள் உங்களுக்கு எப்படி?

(18-07-2020) இந்தநாள் உங்களுக்கு எப்படி?

கிரகநிலை:

தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன், சந்திரன்  - தைரிய ஸ்தானத்தில் ராஹூ, புதன் - சுகஸ்தானத்தில் சூர்யன்  -  பாக்கிய ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ)  - விரைய ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகங்கள் வலம் வருகின்றன. 

இன்று காலை 9.13 மணிக்கு சந்திர பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று  உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து காணப்படும். நிலுவையில் இருந்த பணம் கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்து அவர்களது நன்மதிப்பை பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

கிரகநிலை:

ராசியில் சுக்ரன், சந்திரன்  - குடும்ப ஸ்தானத்தில்  ராஹூ, புதன் - தைரிய ஸ்தானத்தில் சூர்யன்  -   அஷ்டம ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ)  - லாப ஸ்தானத்தில் செவ்வாய்   என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று காலை 9.13 மணிக்கு சந்திர பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் ஆதரவுடன் எதிலும் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பெண்களுக்கு இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 1, 5

கிரகநிலை:

ராசியில்  ராஹூ, புதன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில்  சூர்யன்  -  களத்திர ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ)  - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் - விரைய ஸ்தானத்தில் சுக்ரன், சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று காலை 9.13 மணிக்கு சந்திர பகவான் ராசிக்கு மாறுகிறார்.

பலன்:

இன்று வரவேண்டிய பணம் வந்து சேரும். செயல் திறமை அதிகரிக்கும். விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும். உன்னதமான செயல்களில் ஈடுபடுவீர்கள். மனம் அமைதியில் லயிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 5, 6

கிரகநிலை:

ராசியில் சூரியன் - ரண, ருண ஸ்தானத்தில்  கேது, குரு (வ), சனி (வ)  -  பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் சுக்ரன், சந்திரன்  - அயன, சயன, போக ஸ்தானத்தில்  ராஹூ, புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று காலை 9.13 மணிக்கு சந்திர பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று அடுத்தவரின் தராதரம் அறிந்து உதவிகள் செய்யக்கூடும். மாதம் எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. சுலபமாக முடிந்துவிடும் என்று நினைக்கும் காரியம் கூட சற்று தாமதமாகலாம். மனதில் இருந்த கவலை நீங்கி நிம்மதி பிறக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

கிரகநிலை:

பஞ்சம ஸ்தானத்தில்  கேது, குரு (வ), சனி (வ)  -  அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் சுக்ரன், சந்திரன்  -  லாப ஸ்தானத்தில்  ராஹூ, புதன் - விரைய ஸ்தானத்தில் சூர்யன்   என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று காலை 9.13 மணிக்கு சந்திர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். வெளியூர் பயணம் மூலம் அலைச்சல் உண்டாகலாம். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் அலைச்சலுக்கு பின் நடந்து முடியும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 2, 9  

கிரகநிலை:

சுக  ஸ்தானத்தில்  கேது, குரு (வ), சனி (வ)  - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன், சந்திரன்  - தொழில்  ஸ்தானத்தில்  ராஹூ, புதன் - லாப ஸ்தானத்தில்  சூர்யன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று காலை 9.13 மணிக்கு சந்திர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று தேவையான பண உதவி சற்று தாமதமாக கிடைக்கலாம். தொழில் தொடர்பாக எதிர்பார்க்கும் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். அவர்களை அனுசரித்து செல்வது நன்மையைத் தரும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 9, 3

கிரகநிலை:

தைரிய ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ)  - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன், சந்திரன்  - பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ, புதன் - தொழில் ஸ்தானத்தில் சூர்யன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. 

இன்று காலை 9.13 மணிக்கு சந்திர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்வதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் ஏற்படலாம். . உதவிகள் செய்யும்போது ஆலோசித்து செய்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்:  4, 6

கிரகநிலை:

தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ)   -  பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன், சந்திரன்   - அஷ்டம  ஸ்தானத்தில் ராஹு, புதன் - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று காலை 9.13 மணிக்கு சந்திர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று பெண்களுக்கு எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. . இஷ்டத்திற்கு விரோதமாக காரியங்கள் நடந்தாலும் முடிவு சாதகமாக இருக்கும். வீண் ஆசைகள் மனதில் தோன்றும். கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 5, 6

கிரகநிலை:

ராசியில்  கேது, குரு (வ), சனி (வ)  -  சுக ஸ்தானத்தில் செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன், சந்திரன்  -  களத்திர ஸ்தானத்தில்  ராஹு, புதன் - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று காலை 9.13 மணிக்கு சந்திர பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதும் நன்மை தரும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர் தடை ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 3, 7

கிரகநிலை:

தைரிய ஸ்தானத்தில் செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் சுக்ரன், சந்திரன்  - ரண, ருண  ஸ்தானத்தில்  ராஹூ, புதன் - களத்திர ஸ்தானத்தில் சூர்யன்   -  அயன, சயன,  போக ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ)   என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று காலை 9.13 மணிக்கு சந்திர பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று திட்டமிட்டு செய்வதன்மூலம் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத அலைச்சல் ஏற்படலாம். நேரத்திற்கு உணவு உண்ணுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

கிரகநிலை:

தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - சுக ஸ்தானத்தில் சுக்ரன், சந்திரன்  - பஞ்சம ஸ்தானத்தில்  ராஹூ, புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன்   - லாப ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ)   என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று காலை 9.13 மணிக்கு சந்திர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று குடும்பம் பற்றிய கவலைகள் ஏற்பட்டாலும் அவை நீங்குவதுடன் உடல் ஆரோக்கியமும் அடையும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. மனதில் பக்தி உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

கிரகநிலை:

ராசியில் செவ்வாய் - தைரிய ஸ்தானத்தில் சுக்ரன், சந்திரன்   -  சுக ஸ்தானத்தில்  ராஹூ, புதன் - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன்  -  தொழில்  ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ)  என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று காலை 9.13 மணிக்கு சந்திர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று சகோதரர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசும்போதும் கவனம் தேவை. பெண்களுக்கு எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவதும் நன்மை தரும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

Trending News

Latest News

You May Like