1. Home
  2. ஜோதிடம்

17-3-2020 - தினப்பலன்: இந்த ராசிகளுக்கு இன்று மகிழ்ச்சியான நாள்!

17-3-2020 - தினப்பலன்: இந்த ராசிகளுக்கு இன்று மகிழ்ச்சியான நாள்!

17-3-2020 - தினப்பலன்: இந்த ராசிகளுக்கு இன்று மகிழ்ச்சியான நாள்!

கிரகநிலை:

ராசியில்  சுக்ரன் -  தைரிய ஸ்தானத்தில் ராஹூ - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன்  - பாக்கிய ஸ்தானத்தில்  செவ்வாய்,  குரு, சனி , கேது -   லாப ஸ்தானத்தில்  புதன் - அயன, சயன, போக ஸ்தானத்தில்  சூர்யன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. 

இன்று மாலை 5.05 மணிக்கு சந்திர  பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று திருப்திகரமான பலனை எதிர்பார்க்கலாம். அலைச்சலும், பளுவும் இருக்கத்தான் செய்யும். அரசு உதவி கிடைக்கும். உடன் பணிபுரிவோரால் பாராட்டும், அங்கீகாரமும் கிடைக்கும். இரவு நீண்ட நேரம் முழிக்க வேண்டியதிருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, வெளிர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6

கிரகநிலை:

குடும்ப ஸ்தானத்தில்  ராஹூ -   களத்திர  ஸ்தானத்தில் சந்திரன்  - அஷ்டம ஸ்தானத்தில்  செவ்வாய்,  குரு, சனி, கேது  - தொழில் ஸ்தானத்தில்  புதன்  - லாப ஸ்தானத்தில் சூர்யன் -   அயன, சயன, போக ஸ்தானத்தில்  சுக்ரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று மாலை 5.05 மணிக்கு சந்திர  பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று சீரான பலனை காண்பீர்கள். பதவிகள் வந்து சேரும்.   விடாமுயற்சியுடன் உழைப்பது நல்லது. அதிகமாக தூரம் செல்ல வேண்டியதிருக்கும். உடல் நலம் சிறப்பாக இருக்கும்.  தொடர்ந்து நற்பலனை பெறலாம். கெட்ட சகவாசத்தில் சற்று எச்சரிக்கை தேவை.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, பிரவுண்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

கிரகநிலை:

ராசியில்  ராஹூ -  ரண, ருண  ஸ்தானத்தில்  சந்திரன் -  களத்திர ஸ்தானத்தில்  செவ்வாய்,  குரு, சனி , கேது -   பாக்கிய ஸ்தானத்தில்  புதன் -  தொழில் ஸ்தானத்தில் சூர்யன்  - லாப  ஸ்தானத்தில்  சுக்ரன்   என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று மாலை 5.05 மணிக்கு சந்திர  பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று அதிகமாக சிரத்தை எடுத்து மேலிடத்திற்கு விஷயங்களை சொல்ல வேண்டியதிருக்கும். முன்னேற்றத்திற்கு வழி காண்பீர்கள். வீண் முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. எதையும் ஆராய்ந்து முடிவுகளை எடுப்பது நல்லது. வேகத்தை குறைத்து விவேகமுடன் செயல்படுவது நன்மை தரும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

கிரகநிலை:

பஞ்சம   ஸ்தானத்தில்  சந்திரன் - ரண, ருண ஸ்தானத்தில்  செவ்வாய்,  குரு, சனி , கேது - அஷ்டம ஸ்தானத்தில்  புதன்  -  பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன் -  தொழில்  ஸ்தானத்தில் சுக்ரன் -  அயன, சயன, போக ஸ்தானத்தில்  ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று மாலை 5.05 மணிக்கு சந்திர  பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று பணவரத்து தாமதப்படும். பெரியோர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் தாமதப்படும். பழைய பாக்கிகள் வசூலாவதில் மெத்தனம் காணப்படும். எந்த ஒரு வேலையையும் அலைந்து செய்து முடிக்க வேண்டி இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

கிரகநிலை:

சுக  ஸ்தானத்தில் சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில்  செவ்வாய்,  குரு, சனி , கேது  -  களத்திர ஸ்தானத்தில்  புதன் -  அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன் -  பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன்  -  லாப ஸ்தானத்தில்  ராஹூ  என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று மாலை 5.05 மணிக்கு சந்திர  பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று பங்குதாரர்களிடம் யதார்த்த நிலையை கடைபிடிக்கவும். எந்தவொரு விஷயத்திலும் ஆராய்ந்து முடிவெடுக்கவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமுடன் பணியாற்றுவது நல்லது.  புதிய வேலைக்கு செய்யும் முயற்சிகள் பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். மிக கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெண்மை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

கிரகநிலை:

தைரிய  ஸ்தானத்தில் சந்திரன் - சுக  ஸ்தானத்தில் செவ்வாய்,  குரு, சனி , கேது -   ரண, ருண ஸ்தானத்தில் புதன்  -  களத்திர ஸ்தானத்தில் சூர்யன் -  அஷ்டம  ஸ்தானத்தில் சுக்ரன் -   தொழில்  ஸ்தானத்தில்  ராஹூ  என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று மாலை 5.05 மணிக்கு சந்திர  பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று இரவு நீண்ட நேரம் விழித்திருக்க வேண்டிய நிலை ஏற்படலாம். குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலை வரலாம். வெளியூர் சென்று தங்கியிருந்து வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை இருந்து வரும். கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் குறையும். குழந்தைகளின் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

கிரகநிலை:

குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - தைரிய ஸ்தானத்தில்  செவ்வாய்,  குரு, சனி , கேது -  பஞ்சம ஸ்தானத்தில்  புதன்  -  ரண, ருண ஸ்தானத்தில் சூர்யன் -  களத்திர  ஸ்தானத்தில்  சுக்ரன் -  பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ  என கிரகங்கள் வலம் வருகின்றன. 

இன்று மாலை 5.05 மணிக்கு சந்திர  பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று பணம் சம்பாதிக்கும் திறமை அதிகமாகும். தடைபட்டு வந்த காரியங்கள் அனைத்தும் சாதகமாக நடந்து முடியும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

கிரகநிலை:

ராசியில் சந்திரன் - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய்,  குரு, சனி , கேது  -   சுக  ஸ்தானத்தில்  புதன் - பஞ்சம ஸ்தானத்தில்  சூர்யன் -   ரண, ருண ஸ்தானத்தில்  சுக்ரன் -  அஷ்டம  ஸ்தானத்தில்   ராஹு  என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று மாலை 5.05 மணிக்கு சந்திர  பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று தொழில் வியாபாரத்தில் கூட்டுத் தொழில் செய்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஆவணங்கள் அனைத்தையும் ஒரு முறைக்கு இருமுறை வாசித்து வைத்துக் கொள்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6

கிரகநிலை:

ராசியில் செவ்வாய்,  குரு, சனி , கேது -  தைரிய ஸ்தானத்தில்  புதன் -   சுக  ஸ்தானத்தில் சூர்யன் - பஞ்சம  ஸ்தானத்தில் சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில்    ராஹு -    அயன, சயன, போக ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று மாலை 5.05 மணிக்கு சந்திர  பகவான் ராசிக்கு மாறுகிறார்.

பலன்:

இன்று தொழிலில் போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். பணியாட்கள் மூலம் நன்மை ஏற்படும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களிடம் நன் மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நேர்மையாக சிறப்பாக பணிகளை செய்து மேல் அதிகாரிகளிடம் பாராட்டுக்கள் கிடைக்க பெறுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ப்ரவுண்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9

கிரகநிலை:

தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்   புதன் -  தைரிய ஸ்தானத்தில் சூர்யன் - சுக  ஸ்தானத்தில்  சுக்ரன் -  ரண, ருண  ஸ்தானத்தில் ராஹூ - லாப   ஸ்தானத்தில்  சந்திரன் -  அயன, சயன,  போக ஸ்தானத்தில் செவ்வாய்,  குரு,  சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று மாலை 5.05 மணிக்கு சந்திர  பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று உயர் பதவிகள் கிடைக்க கூடும். இருப்பினும் அதிக முயற்சிகள் எடுக்க வேண்டியதிருக்கும். அதீத உழைப்பு செய்ய வேண்டியதிருக்கும். சக ஊழியர்களுடன் கருத்து வேற்றுமை வரலாம். எதிலும் கருத்து சொல்லும் முன் யோசித்து சொல்வது சிறப்பு.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7

கிரகநிலை:

ராசியில் புதன் -  தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  சூர்யன்  - தைரிய ஸ்தானத்தில்  சுக்ரன் -  பஞ்சம ஸ்தானத்தில்  ராஹூ  -  தொழில்   ஸ்தானத்தில் சந்திரன் -  லாப ஸ்தானத்தில்  செவ்வாய், குரு, சனி , கேது   என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று மாலை 5.05 மணிக்கு சந்திர  பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்க வழிவகை நடக்கும். எல்லா வகையிலும் நன்மை ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 9

கிரகநிலை:

ராசியில் சூர்யன் -  தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன் -  சுக ஸ்தானத்தில்  ராஹூ -  பாக்கிய ஸ்தானத்தில்  சந்திரன் - தொழில்  ஸ்தானத்தில்  செவ்வாய்,  குரு, சனி , கேது - அயன, சயன,  போக ஸ்தானத்தில்   புதன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று மாலை 5.05 மணிக்கு சந்திர  பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். .

பலன்:

இன்று பிள்ளைகள் நீங்கள் கூறியதை கேட்டு அதன்படி நடப்பது ஆறுதலை தரும். உறவினர்கள் நண்பர்கள் வருகை என இருக்கும்.  குல தெய்வ வழிபாடு செய்வீர்கள். தேவையான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் சாதகமாக முடியும். பணவரத்து அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

Trending News

Latest News

You May Like