17-01-2022 - தினப்பலன்: இன்று இந்த ராசிக்கு சந்தோஷமான செய்தி வந்து சேரும்..!!

17-01-2022 - தினப்பலன்: இன்று இந்த ராசிக்கு சந்தோஷமான செய்தி வந்து சேரும்..!!

17-01-2022 - தினப்பலன்: இன்று இந்த ராசிக்கு சந்தோஷமான செய்தி வந்து சேரும்..!!
X

1

இன்று பணவரவுகளில் இருந்து வந்த தடைகள்விலகி மேன்மையான பலன்கள் ஏற்படும். கடன்கள் சற்றுக் குறையும். கணவன்- மனைவி யிடையே ஒற்றுமை நிலவும். எந்தவொரு காரியத்திலும் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறிவிடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஏற்கனவே செய்த வேலைகளுக்கு இப்போது பாராட்டும் பண உதவியும் கிடைக்க பெறலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

2

இன்று கொடுக்கல்-வாங்கலில் நிதானமாக செயல்பட்டால் எதிர்பார்த்த லாபத்தைப் பெறமுடியும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியும். வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பாராத பெரிய ஆர்டர்கள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த டென்ஷன் குறைந்து சந்தோஷமான நிலை காணப்படும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

3

இன்று அபிவிருத்தியும் பெருகும். கூட்டாளிகள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். லாபம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சியான உறவு நிலவும். பிள்ளைகளின் நடத்தை மனதுக்கு நிம்மதியை தரும். மாணவர்கள் கல்வியில் படிப்படியான முன்னேற்றத்தைப் பெறுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

4

இன்று தேவையற்ற பொழுதுபோக்குகளையும் நண்பர்களின் சகவாசத்தையும் தவிர்ப்பதன்மூலம் நற்பலனைப் பெற முடியும். ஓரளவுக்கு சேமிப்பு பெருகும். பிள்ளைகள் விஷயத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள். அக்கம்பக்கத்தினரிடம் அனுசரித்து செல்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

5

இன்று குடும்பத்தில் ஒற்றுமையும், சுபிட்சமும் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். கணவன்-மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பணம் பலவழிகளில் வந்து குவியும். குடும்பத்தில் இருப்பவர்கள் எதையும் வெளிக்காட்டாமல் உங்களுடன் இன்முகம் கொடுத்து பேசுவார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த வருத்தங்கள் நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 1, 5

6

இன்று வீடு, மனை, வண்டி, வாகனம் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். சிலருக்கு நினைத்தவரையே கைப்பிடிக்கும் யோகம் அமையும். புத்திரவழியில் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்களும் நடைபெறும். எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவல்களாக வந்து சேரும். டென்ஷன் குறையும். மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் பற்றி இருந்த டென்ஷன் நீங்கும். புதிய நட்புகள் மூலம் உதவி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 5, 6

7

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெற்று குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வார்கள். நல்ல பலன்கள் உண்டு. திறமையான பேச்சின் மூலம் காரியங்களை சாதிப்பீர்கள். எதிர்த்து செயல்பட்டவர்கள் விலகிச் சென்று விடுவார்கள் உடன்பணிபுரிபவர்களின் ஆதரவும், அதிகாரிகளின் ஒத்துழைப்பும் மனமகிழ்ச்சியினை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

8

இன்று அரசியல்வாதிகள் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றி மக்களின் ஆதரவைப் பெறுவார்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையில் அமையும். பிறருக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியும். தெய்வ பிரார்த்தனை மனதுக்கு நிம்மதியையும், ஆறுதலையும் தரும். பணவரத்து கூடும். அரசாங்க காரியங்கள் சாதகமாக பலன் தரும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 2, 9

9

இன்று தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக நடக்காவிட்டாலும் லாபம் குறையாமல் இருக்கும். சிலருக்கு வாய்ப்புகள் வந்து குவிவதால் பொருளாதாரநிலையும் உயரும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பும் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 9, 3

10

இன்று புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதப்படும். பங்குதாரர்களுடன் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். எதிர்பாராத வீண்விரயங்கள், தேவையற்ற செலவுகள் உண்டாகும். பணவிஷயத்தில் மட்டும் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்கவும். குடும்பத்தில் ஒற்றுமை குறையக்கூடிய சம்பவங்கள் நடைபெறும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 4, 6

11

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் தடங்கல்கள், கூடுதல் உழைப்பு ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். மனநிம்மதி குறையும். எதிர்பாராத வீண்பிரச்சினைகளாலும் மனக்குழப்பம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 5, 6

12

இன்று பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. பணி நிமித்தமாக பயணம் செல்ல வேண்டி வரலாம். உற்றார்-உறவினர்களிடையே வீண் கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டு பிரிந்துசெல்ல நேரிடும். எதிர்பார்க்கும் உதவிகளும் தாமதப்படும். திருமண சுபகாரிய முயற்சிகளுக்கான பேச்சு வார்த்தைகளைத் தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 3, 7

Next Story
Share it