15-11-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு எளிதில் காரியங்கள் கைகூடும்

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் கணிப்பில் இன்றைய ராசிபலன்

15-11-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு எளிதில் காரியங்கள் கைகூடும்
X

15-11-2019-newstm-dwstm-daily-astrology

15-11-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு எளிதில் காரியங்கள் கைகூடும்

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

விகாரி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
ஐப்பசி - 29
வெள்ளிக்கிழமை

திரிதியை இரவு 8.04 மணி வரை. பின் சதுர்த்தி
மிருக சீரிஷம் இரவு 12.01 மணி வரை பின் திருவாதிரை
சித்த யோகம்
நாமயோகம்: சிவம்
கரணம்: வணிஜை

அகஸ்: 28.46
த்யாஜ்ஜியம்: -
நேத்ரம்: 2
ஜீவன்: 1
துலா லக்ன இருப்பு (நா.வி): 0.17
சூரிய உதயம்: 6.12


ராகு காலம்: காலை 10.30 - 12.00
எமகண்டம்: மதியம் 3.00 - 4.30
குளிகை: காலை 7.30 - 9.00
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:
இன்று சம நோக்கு நாள்.
சங்கடஹர சதுர்த்தி.
மாயவரம் கௌரிமாயூரநாதர் ரதோற்ஸவம்.
திருஇந்துளூர் ஸ்ரீபரிமள ரெங்கராஜர் வெண்ணெய்த் தாழி ஸேவை.
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் சிறப்பு அபிஷேகம்.
சுபமுகூர்த்தம்.

திதி: திரிதியை
சந்திராஷ்டமம்: அனுஷம், கேட்டை

சூரியன் விசாகம் 3ம் பாதம் - நீசம்
சந்திரன் மிதுனம் - நட்பு
செவ்வாய் சித்திரை 3ம் பாதம் - நட்பு
புதன் சுவாதி 2ம் பாதம் - நட்பு
குரு மூலம் 1ம் பாதம் - ஆட்சி
சுக்ரன் கேட்டை 2ம் பாதம் - நட்பு
சனி பூராடம் 1ம் பாதம் - நட்பு
ராகு திருவாதிரை 3ம் பாதம் - நட்பு
கேது பூராடம் 1ம் பாதம் - நட்பு

கிரகநிலை: தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  சந்திரன் - தைரிய ஸ்தானத்தில்  ராஹூ -  களத்திர ஸ்தானத்தில்  சூர்யன், புதன், செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில்  சுக்ரன்  - பாக்கிய ஸ்தானத்தில்   குரு, சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன.   இன்று பகல் 12.03 மணிக்கு சந்திர பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய  முடிவுகள் எடுக்க நேரிடும்.  பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள்  நிர்வாக திறமை வெளிப்படும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9  கிரகநிலை: ராசியில் சந்திரன் - குடும்ப ஸ்தானத்தில் ராஹூ -   ரண, ருண ஸ்தானத்தில்  சூர்யன், புதன்,   செவ்வாய்   -  களத்திர ஸ்தானத்தில்  சுக்ரன்  - அஷ்டம ஸ்தானத்தில்   குரு, சனி, கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று பகல் 12.03 மணிக்கு சந்திர பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று தன்னம்பிக்கையுடன் பாடங்களை படித்து கூடுதல் மதிப்பெண் பெற முயற்சி மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9  கிரகநிலை: ராசியில்   ராஹூ -    பஞ்சம ஸ்தானத்தில்  சூர்யன், புதன், செவ்வாய் -  ரண, ருண ஸ்தானத்தில்  சுக்ரன்  -   களத்திர ஸ்தானத்தில்  குரு, சனி , கேது -  அயன, சயன, போக  ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று பகல் 12.03 மணிக்கு சந்திர பகவான் ராசிக்கு மாறுகிறார். பலன்: இன்று குடும்பத்தில் திடீர் பிரச்சனை தலை தூக்கும். மிகவும் கவனமாக கையாண்டால் அது தீரும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். மெத்தனப் போக்கை கைவிடுங்கள். பெண்களுக்கு அடுத்தவர்களின் செயல்களால் கோபம் உண்டாகலாம். கொடுத்த கடனை திரும்ப பெறுவதில் முழுமூச்சுடன் செயல்படுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6  கிரகநிலை: சுக ஸ்தானத்தில்  சூர்யன்,  புதன், செவ்வாய் -   பஞ்சம ஸ்தானத்தில் சுக்ரன் - ரண, ருண ஸ்தானத்தில்  குரு, சனி , கேது  - லாப ஸ்தானத்தில் சந்திரன் -   அயன, சயன, போக ஸ்தானத்தில்   ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று பகல் 12.03 மணிக்கு சந்திர பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று உறவினர்கள், நண்பர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. தேவையான உதவிகள் கிடைக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். பிள்ளைகள் உங்கள் ஆலோசனையை கேட்காமல் தன்னிச்சையாக முடிவு எடுக்கலாம்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9  கிரகநிலை: தைரிய ஸ்தானத்தில்  சூர்யன்,  புதன், செவ்வாய் -  சுக  ஸ்தானத்தில்   சுக்ரன்  -   பஞ்சம ஸ்தானத்தில்  குரு, சனி , கேது   -  தொழில்  ஸ்தானத்தில்  சந்திரன் - லாப ஸ்தானத்தில்    ராஹூ   என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று பகல் 12.03 மணிக்கு சந்திர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று வியாபார நிமித்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரலாம். பெண்களுக்கு அனுபவபூர்வமான அறிவைக்கொண்டு எதையும் சாதிப்பீர்கள். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை தரும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். திறமை வெளிப்படும். சக மாணவர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7   கிரகநிலை: தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்   சூர்யன், புதன், செவ்வாய் -  தைரிய, வீர்ய ஸ்தானத்தில்  சுக்ரன்   -  சுக  ஸ்தானத்தில்   குரு, சனி , கேது -  பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் -  தொழில்  ஸ்தானத்தில்  ராஹூ   என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று பகல் 12.03 மணிக்கு சந்திர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று பிரச்சினைகள் அற்ற நாள். விவேகத்துடன் நடந்து கொள்வீர்கள். சிலரது காரியங்கள் உங்களுக்கு வெறுப்பை உண்டாக்கலாம். எந்த விசயங்களையும் தீர விசாரித்து பேசுவது நன்மை அளிக்கும். குடும்பத்தில் உற்சாகம் இருக்கும். மற்றவர்கள்  உங்களை அனுசரித்து செல்வார்கள். கணவன், மனைவிக் கிடையே மகிழ்ச்சியான நிலை காணப்படும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9  கிரகநிலை: ராசியில்  செவ்வாய்,  புதன் , சூர்யன் - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  சுக்ரன் -  தைரிய ஸ்தானத்தில்  குரு, சனி , கேது - அஷ்டம  ஸ்தானத்தில்  சந்திரன்  - பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ  என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று பகல் 12.03 மணிக்கு சந்திர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று அன்பு அதிகரிக்கும். மருத்துவ செலவு ஏற்படலாம். பேச்சின் இனிமை சாதூரியத்தால் எளிதில் காரியங்கள் கைகூடும். காரிய வெற்றி உண்டாகும். மனமகிழ்ச்சி கூடும். வழக்கு விவகாரங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். பொருளாதாரம் உயரும். நினைத்த காரியத்தை  வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9  கிரகநிலை: ராசியில் சுக்ரன்  - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  குரு, சனி , கேது  - களத்திர ஸ்தானத்தில்  சந்திரன்  - அஷ்டம  ஸ்தானத்தில்  ராஹு-  அயன, சயன, போக ஸ்தானத்தில் -  சூர்யன்,  புதன், செவ்வாய்  என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று பகல் 12.03 மணிக்கு சந்திர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று வீண்கவலை விலகும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னருடன் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களின் நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9   கிரகநிலை: ராசியில் குரு, சனி , கேது - ரண, ருண, ஸ்தானத்தில்  சந்திரன் -   களத்திர ஸ்தானத்தில்   ராஹு -  லாப ஸ்தானத்தில்  செவ்வாய், சூர்யன்,  புதன் -  அயன, சயன, போக ஸ்தானத்தில்  சுக்ரன்   என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று பகல் 12.03 மணிக்கு சந்திர பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று வெற்றி என்ற இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். மனக்கவலை நீங்கி எதிலும் தெளிவான முடிவு எடுப்பீர்கள். பணவரத்து கூடும். வியாபார போட்டிகள் குறையும். எல்லா துறைகளிலும் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதை பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுவார்கள். வேலை பார்க்கும் இடத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9  கிரகநிலை: பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன்  - ரண, ருண , ஸ்தானத்தில்   ராஹூ -   தொழில் ஸ்தானத்தில்  செவ்வாய், சூர்யன்,   புதன் -  லாப ஸ்தானத்தில் சுக்ரன்  -   அயன, சயன,  போக ஸ்தானத்தில்   குரு,  சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று பகல் 12.03 மணிக்கு சந்திர பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று எதிர்பார்த்த உதவிகள்  மற்றவர்கள் மூலம் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் லாபம் தருவதாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். திருமண முயற்சிகள் சாதகமான பலன் தரும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. . தடைகள் விலகும். பணவரத்து திருப்தி தரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9  கிரகநிலை: சுக  ஸ்தானத்தில் சந்திரன் -   பஞ்சம ஸ்தானத்தில்   ராஹூ  -  பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய்,  சூர்யன், புதன் -  தொழில் ஸ்தானத்தில்  சுக்ரன்  -  லாப ஸ்தானத்தில்  , குரு, சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று பகல் 12.03 மணிக்கு சந்திர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று காரிய தாமதம் உண்டாகலாம். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். எனினும் நன்மைகள் உண்டாகும். பணவரத்து இருக்கும். கவுரவம், அந்தஸ்து உயரும். பொருளாதாரம் உயரும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வாய்க்கு ருசியான உணவு உண்பீர்கள். கணவன் மனைவி ஒருவரது பேச்சை மற்றவர் கேட்பதன் மூலம் நன்மை உண்டாகும்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5  கிரகநிலை: தைரிய, வீர்ய ஸ்தானத்தில் சந்திரன் -  சுக ஸ்தானத்தில்  ராஹூ  -  அஷ்டம ஸ்தானத்தில்  செவ்வாய்,  சூர்யன், புதன் - பாக்கிய ஸ்தானத்தில்  சுக்ரன் - தொழில்  ஸ்தானத்தில்  குரு, சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று பகல் 12.03 மணிக்கு சந்திர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று நீண்ட தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும் பணவரத்து இருக்கும். வாகன யோகம் உண்டு. தெளிவான முடிவு எடுப்பதன் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். அரசாங்கம் தொடர்பான விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும். மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9  

newstm.in

Tags:
Next Story
Share it