15-06-2022 - தினப்பலன்: இந்த ராசிக்கு இன்று சந்தோஷமான செய்தி வந்து சேரும்..!!

15-06-2022 - தினப்பலன்: இந்த ராசிக்கு இன்று சந்தோஷமான செய்தி வந்து சேரும்..!!

15-06-2022 - தினப்பலன்: இந்த ராசிக்கு இன்று சந்தோஷமான செய்தி வந்து சேரும்..!!
X

ஆனி 01

சுபகிருது வருஷம்

உத்தராயணம்

க்ரீஷ்மருது

புதன்கிழமை

ப்ரதமை மறு.மாலை மணி 3.29 வரை பின்னர் த்விதீயை

மூலம் மாலை மணி 5.44 வரை பின்னர் பூராடம்

சுபம் நாமயோகம்

கௌலவம் கரணம்

மரண யோகம்

அகசு: 31.34

தியாஜ்ஜியம்: 51.56

நேத்ரம்: 2

ஜீவன்: 1

மிதுன லக்ன இருப்பு: 5.30

சூர்ய உதயம்: 5.54

ராகு காலம்: மதியம் 3.00 - 4.30

எமகண்டம்: காலை 9.00 - 10.30

குளிகை: மதியம் 12.00 - 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்.

ஷடசீதி புண்ணிய் காலம்.

சோழவந்தான் ஸ்ரீஜனகமாரியம்மன் பூக்குழிவிழா.

மதுரை ஸ்ரீ கூடலழகர் குதிரை வாகனத்தில் இரவு தசாவதார காட்சி

திதி: சூன்ய

சந்திராஷ்டமம்: கார்த்திகை , ரோகிணி

1

இன்று அரசியல் துறையினருக்கு எடுக்கக் கூடிய ஒப்பந்தகளை நன்றாக ஆராய்ந்து முடிவுக்கு வரவேண்டும். வெளிநாட்டு ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். லாபம் பெருகும். மேலிடத்தின் கனிவான பார்வை கிடைக்கப் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

2

இன்று நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் வருவாய் உண்டு. சோதனைகள் வெற்றியாக மாறும். உங்கள் செயல்பாடுகள் மற்றவர்களைக் கவரும். உல்லாசப் பயணங்களில் நாட்டம் செல்லும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

3

இன்று நன்மைகள் சேரும். வாக்குவாதங்கள் நீங்கும். சுபகாரியங்களில் கலந்து கொள்ள நேரலாம். பணம் வரவு நன்றாக இருக்கும். இழுபறியாக இருந்தவை சாதகமாக முடியக்கூடும். தேவையற்ற கவலைகள் நீங்கும். உங்களை பற்றி விமர்சனம் செய்து வந்தவர்கள் அதனை விட்டு விடுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

4

இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். கடன் பிரச்சனை தீரும். ஆர்டர் பிடிப்பதில் இருந்த கஷ்டம் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிதாக பணிகளை செய்து முடிப்பார்கள். மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 1, 6

5

இன்று பாதியில் நின்ற வீடுகட்டும் பணியை மீண்டும் தொடருவீர்கள். சிலர் புதிய வீட்டிற்கு குடிபுகுவார்கள். கணவன் மனைவிக்கிடையில் திடீரென்று கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகள் கல்வியில் முன்னேற்றம் அடைய தேவையான உதவிகளை செய்வீர்கள். வழக்குகளில் நல்ல தீர்ப்பு வரும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 5, 6

6

இன்று மற்றவர்களிடம் கவனமாக பேசுவது கருத்து வேற்றுமை வராமல் தடுக்கும். வீண் அலைச்சல் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் போது கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 4, 6

7

இன்று புதிய மாற்றம் உருவாகும். அரசாங்க அனுகூலம் ஏற்படும். வாகனங்களைப் பிரயோகப்படுத்தும் போது மிகவும் கவனம் தேவை. வெளியூர் வெளிநாடு செல்ல வேண்டி வரலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 2, 9

8

இன்று மதிப்பு மரியாதை சிறப்படையும். செல்வாக்கு ஓங்கும். நட்பு வட்டாரத்தில் குதூகலம் ஏற்படும். எல்லா பிரச்சனைகளும் தீரும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். துணிச்சலாக எதையும் செய்து முடித்து காரிய வெற்றி அடைவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 1, 5

9

இன்று மற்றவர்களுடன் இருந்த பகை நீங்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீரும். பணவரத்து கூடும். அரசாங்கம் மூலம் லாபம் உண்டாகும். நீண்ட தூர பயணங்களால் சாதகமான பலன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி விறுவிறுப்படையும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 5, 6

10

இன்று வசூலாக வேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பான பிரச்சனைகள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி தொடர்பான கஷ்டங்கள் குறையும். குடும்பத்தில் மரியாதை கூடும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 4, 6

11

இன்று கணவன், மனைவிக்கிடையில் மனம்விட்டு பேசி எடுக்கும் முக்கிய முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். கடிதம் மூலம் வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும். வர வேண்டிய பணம் வந்து சேரும். கஷ்டங்கள் குறையும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 2, 9

12

இன்று மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் சாதகமாக பலன் தரும். எதிலும் வேகமாக செயலாற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். தொழிலில் சிக்கல்கள் உருவாகாது என்றாலும் சிற்சில வாக்குவாதங்கள் இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 9, 3

Next Story
Share it