1. Home
  2. ஜோதிடம்

(14-06-2020) இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் இன்றைய நாள் பொதுபலன்கள்

(14-06-2020) இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் இன்றைய நாள் பொதுபலன்கள்

(14-06-2020) இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் இன்றைய நாள் பொதுபலன்கள்

கிரகநிலை:

தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் (வ) - தைரிய ஸ்தானத்தில் ராஹூ, புதன்(வ) -  பாக்கிய ஸ்தானத்தில் கேது, சனி (வ) -  தொழில் ஸ்தானத்தில் குரு (வ) - லாப ஸ்தானத்தில் செவ்வாய் - விரைய ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. 

மறு நாள் காலை 3.14 மணிக்கு சூர்ய பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். சுற்றத்தினர் வருகை இருக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு கூடும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். குடும்ப வருமானம் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் - நண்பர்கள் மூலம் ஆதாயம் பெறுவீர்கள். தொழில், வியாபாரம் முன்னேற்றப் பாதையில் செல்லும், சிறப்பாக செயல்பட முடியும்  என்ற நம்பிக்கை ஏற்படும். எதிர்பார்த்த பண உதவியும் கிடைக்க பெறும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

கிரகநிலை:

ராசியில் சூர்யன், சுக்ரன் (வ) - குடும்ப ஸ்தானத்தில்  ராஹூ, புதன்(வ) -   அஷ்டம ஸ்தானத்தில் கேது, சனி (வ)  - பாக்கிய ஸ்தானத்தில் குரு (வ)  - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.

மறு நாள் காலை 3.14 மணிக்கு சூர்ய பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று அறிவுத்திறன் அதிகரிக்கும். இனிமையான வார்த்தைகளால் சிக்கலான காரியத்தை கூட எளிதாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து இருக்கும். எடுத்த முடிவை செயல்படுத்தும் முன் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசிப்பது நல்லது. எந்த ஒரு காரியத்திலும் அவசர முடிவு எடுக்க தூண்டும். வேலை தேடி கொண்டு இருப்பவர்களுக்கு உத்தியோக வாய்ப்புகள் வரும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 1, 5

கிரகநிலை:

ராசியில்  ராஹூ, புதன்(வ) -  களத்திர ஸ்தானத்தில் கேது, சனி (வ) - அஷ்டம ஸ்தானத்தில்  குரு (வ) -  பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் சந்திரன் - விரைய ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் (வ) என கிரகங்கள் வலம் வருகின்றன.

மறு நாள் காலை 3.14 மணிக்கு சூர்ய பகவான் ராசிக்கு மாறுகிறார்.

பலன்:

இன்று வீண் வாக்குவாதங்களால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. வீண் அலைச்சலுக்கு பிறகே எந்த ஒரு காரியமும் நடந்து முடியும். வேலை தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் தாமதமாக வந்து சேரும். எந்த பிரச்சனையும் எதிர்கொள்ளும் தைரியம் உண்டாகும். மனதை கவலை கொள்ளச் செய்த  பிரச்சனைகளில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட்டு சாதகமான பலன் கிடைக்க பெறலாம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 5, 6

கிரகநிலை:

ரண, ருண ஸ்தானத்தில்  கேது, சனி (வ) -  களத்திர ஸ்தானத்தில்  குரு (வ)  - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் (வ) - அயன, சயன, போக ஸ்தானத்தில்  ராஹூ, புதன்(வ) என கிரகங்கள் வலம் வருகின்றன.

மறு நாள் காலை 3.14 மணிக்கு சூர்ய பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சில திட்டங்களை ஆலோசிப்பீர்கள். குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும். எதிர்பார்த்த பணம் கிடைக்கலாம். நீண்ட நாட்களாக முயற்சி செய்த காரியங்கள் வெற்றியை தரும். பெண்களுக்கு எந்த ஒரு விவகாரத்தையும் எதிர் கொள்ளும் மன வலிமை உண்டாகும். எதிலும் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

கிரகநிலை:

பஞ்சம ஸ்தானத்தில்  கேது, சனி (வ) -  ரண, ருண ஸ்தானத்தில் குரு (வ) -  களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் - அஷ்டம  ஸ்தானத்தில் சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் (வ) -  லாப ஸ்தானத்தில்  ராஹூ, புதன்(வ)   என கிரகங்கள் வலம் வருகின்றன.

மறு நாள் காலை 3.14 மணிக்கு சூர்ய பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். திடீர் செலவு ஏற்படும். சிலருக்கு மருத்துவ செலவு ஏற்படும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும். தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். கடன் விவகாரங்களில் கவனம் தேவை. தொழில் தொடர்பான காரியங்கள் தாமதமாக நடக்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான சிக்கல்கள் குறையும். எதிர்பார்த்த மதிப்பெண் பெற அதிக நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 2, 9   

கிரகநிலை:

சுக  ஸ்தானத்தில்  கேது, சனி (வ) - பஞ்சம ஸ்தானத்தில் குரு (வ) -  ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் சந்திரன் -  பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் (வ) - தொழில்  ஸ்தானத்தில்  ராஹூ, புதன்(வ)  என கிரகங்கள் வலம் வருகின்றன.

மறு நாள் காலை 3.14 மணிக்கு சூர்ய பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயந்து வேலை செய்ய வேண்டி இருக்கும். உழைப்பு அதிகரிக்கும். உங்கள் உழைப்பிற்கான அங்கீகாரம் இல்லாமல் போகலாம். குடும்பத்தில் உறவினருடன் கருத்து வேறுபாடு உண்டாகலாம். வீட்டில் உள்ள பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். ஆனாலும் கவனமுடன் நடந்து கொள்ளுங்கள். போட்டித் தேர்வுகள் சாதகமாக அமையும். சிலர் கல்வி பயில வெளியூர்க்கு செல்ல வேண்டி வரும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 9, 3

கிரகநிலை:

தைரிய ஸ்தானத்தில் கேது, சனி (வ) - சுக  ஸ்தானத்தில்  குரு (வ) - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய் - ரண ருண ரோக  ஸ்தானத்தில் சந்திரன் - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் (வ) - பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ, புதன்(வ) என கிரகங்கள் வலம் வருகின்றன. 

மறு நாள் காலை 3.14 மணிக்கு சூர்ய பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று சொத்து விவகாரங்களில் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையில் இடைவெளி குறையும். பிள்ளைகள் நலனில் கவனம் செலுத்துவீர்கள். உறவினர்கள் - நண்பர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். எதிர்பாராத செலவு உண்டாகும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். சுய நம்பிக்கை அதிகரிக்கும். புக்தி தெளிவு உண்டாகும். எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடிக்க தேவையான உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்:  4, 6

கிரகநிலை:

தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் கேது, சனி (வ)  -   தைரிய ஸ்தானத்தில்  குரு (வ) - சுக ஸ்தானத்தில் செவ்வாய் - பஞ்சம்  ஸ்தானத்தில் சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் (வ)  - அஷ்டம  ஸ்தானத்தில் ராஹு, புதன்(வ) என கிரகங்கள் வலம் வருகின்றன.

மறு நாள் காலை 3.14 மணிக்கு சூர்ய பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடுகள் நடக்கும். திடீர் செலவுகள் ஏற்படலாம். வெளிவட்டார பழக்க வழக்கங்களை குறைத்துக் கொள்வது நல்லது. ஆயுதம், நெருப்பு இவற்றை கையாளும் போதும் வாகனங்களில் செல்லும் போதும் கவனம் தேவை. எந்த காரியத்திலும் அவசர முடிவு எடுக்காமல் இருப்பதும் வீண் வாக்குவாதங்களை  தவிர்ப்பதும் நல்லது. குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகளை தலை தூக்கச் செய்யும். எனவே சாதுரியமாக பேசி எதையும்  சமாளிப்பது  நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 5, 6

கிரகநிலை:

ராசியில்  கேது, சனி (வ) - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் குரு (வ) - தைரிய ஸ்தானத்தில் செவ்வாய் - சுக ஸ்தானத்தில் சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் (வ) -  களத்திர ஸ்தானத்தில்  ராஹு, புதன்(வ) என கிரகங்கள் வலம் வருகின்றன.

மறு நாள் காலை 3.14 மணிக்கு சூர்ய பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடிப்பீர்கள். பணவரத்து தாமதப்பட்டாலும் கையில் இருப்பு இருக்கும். முக்கியமான பணிகள் தாமதமாக நடக்கும். மாணவர்களுக்கு கல்விக்கான பணிகளில் தாமதம் உண்டாகும். உழைப்பு அதிகரிக்கும். பொதுவான காரியங்களில் ஈடுபடும் போது கவனமாக இருப்பது நல்லது. வாகனங்களை பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 3, 7

கிரகநிலை:

ராசியில் குரு (வ) -  தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - தைரிய ஸ்தானத்தில் சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் (வ) - ரண, ருண  ஸ்தானத்தில்  ராஹூ, புதன்(வ)  -  அயன, சயன,  போக ஸ்தானத்தில் கேது, சனி (வ)  என கிரகங்கள் வலம் வருகின்றன.

மறு நாள் காலை 3.14 மணிக்கு சூர்ய பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று எதிர் பார்த்த காரிய அனுகூலம் கிடைக்கும்.  உத்தியோகம் தொடர்பான பிரச்சனை தீரும். கடின உழைப்பால் வளர்ச்சி அடைவீர்கள். பேச்சை கட்டுப்படுத்திக் கொள்வது நன்மை தரும். எதைப் பேசினாலும் வார்த்தைகளில் நிதானத்தைக் கடைபிடிப்பது நன்மை தரும். நீங்கள் அமைதியாக இருந்தாலும் வீண் சண்டைகள் மற்றும் வீணான குழப்பங்கள் உங்களைத் தேடி வர வாய்ப்பு இருக்கிறது.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

கிரகநிலை:

ராசியில் செவ்வாய் - தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில் சந்திரன் - சுக ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் (வ) - பஞ்சம ஸ்தானத்தில்  ராஹூ, புதன்(வ)  - லாப ஸ்தானத்தில் கேது, சனி (வ) - அயன, சயன, போக ஸ்தானத்தில் குரு (வ)  என கிரகங்கள் வலம் வருகின்றன.

மறு நாள் காலை 3.14 மணிக்கு சூர்ய பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று ராஜாங்க ரீதியிலான காரியங்கள் கை கொடுக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். பொருள் சேர்க்கை உண்டாகும். சிற்றின்ப செலவுகள் அதிகரிக்கும். நண்பர்களுக்கு உதவிகள்  செய்வீர்கள். பணவரத்து திருப்திதரும். வீண்பழி ஏற்படலாம். தகுந்த வரன் கிடைத்து திருமணம ஏற்பாடு இனிதே நடந்தேறும். வீடு, நிலம் மற்றும் வாகனங்கள் வாங்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

கிரகநிலை:

ராசியில் சந்திரன் - தைரிய ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் (வ)  -  சுக ஸ்தானத்தில்  ராஹூ, புதன்(வ) -  தொழில்  ஸ்தானத்தில் கேது, சனி (வ) - லாப ஸ்தானத்தில்  குரு (வ) - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகங்கள் வலம் வருகின்றன.

மறு நாள் காலை 3.14 மணிக்கு சூர்ய பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று தொழில் வியாபாரம் மெத்தனமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவது ஆறுதல் தரும்.  வியாபாரம் தொடர்பான காரியங்களில் கூடுதல் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். உடல் ஆரோக்கியம் மனதில் உற்சாகத்தை  தரும். கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகளுக்காக பாடுபடுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

Trending News

Latest News

You May Like