1. Home
  2. ஜோதிடம்

13-08-2020 - தினப்பலன்: இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப்போகிறது!

13-08-2020 - தினப்பலன்: இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப்போகிறது!

13-08-2020 - தினப்பலன்: இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப்போகிறது!

கிரகநிலை:

ராசியில் செவ்வாய் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - தைரிய ஸ்தானத்தில் ராஹூ, சுக்ரன்  - சுகஸ்தானத்தில் சூர்யன், புதன் - பாக்கிய ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ)  என கிரகங்கள் வலம் வருகின்றன. 

இன்று காலை 7.11 மணிக்கு புதன் பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று எதிலும் கவனமாக இருப்பது நல்லது. அக்கம்பக்கத்தினரிடம் சில்லறை சண்டைகள் உண்டாகலாம்எதையும் சமாளிக்கும் மனநிலை ஏற்படும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சிறு தடங்கல்கள் உண்டாகலாம். பார்ட்னர் மூலம் நன்மை உண்டாகும். நிதி உதவி எதிர்பார்த்தபடி  கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி குறையலாம். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

கிரகநிலை:

ராசியில் சந்திரன் - குடும்ப ஸ்தானத்தில்  ராஹூ, சுக்ரன்  - தைரிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் - அஷ்டம ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ) -  விரைய ஸ்தானத்தில் செவ்வாய்   என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று காலை 7.11 மணிக்கு புதன் பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைத்து அலுவலக பணிகளை முடிக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வதன் மூலம் நல்லபலன் கிடைக்கும். பிள்ளைகள் உங்களது கருத்துக்களை கேட்டு அதன்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தரும். பெண்களுக்கு சமையல் செய்யும் போது கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

கிரகநிலை:

ராசியில்  ராஹூ, சுக்ரன்  - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில்  சூர்யன், புதன் - களத்திர ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ) - லாப ஸ்தானத்தில்  செவ்வாய் - விரைய ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று காலை 7.11 மணிக்கு புதன் பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று சாமர்த்தியமான பேச்சின் மூலமும் சூழ்நிலையை புரிந்து கொண்டு நடப்பதன் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றமடைய கூடுதலாக நேரம் எடுத்துக்கொண்டு கவனத்தை சிதற விடாமல் படிப்பது அவசியம். மற்றவர்களுக்கு உதவப்போய் வீண் பிரச்சனை உண்டாகலாம். கவனம் தேவை. அரசியல் துறையினருக்கு பெயர், புகழ், கௌரவம் யாவும் தேடி வரும்

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

கிரகநிலை:

ராசியில் சூர்யன், புதன் - ரண, ருண ஸ்தானத்தில்  கேது, குரு (வ), சனி (வ) - தொழில் ஸ்தானத்தில்  செவ்வாய் - லாப ஸ்தானத்தில் சந்திரன் - அயன, சயன, போக ஸ்தானத்தில்  ராஹூ, சுக்ரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று காலை 7.11 மணிக்கு புதன் பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. காரிய தடை தாமதம் அலைச்சல் இருக்கும். கல்வியில் தேர்ச்சி கிடைக்கும். இருதரப்பு வாதங்களையும் கேட்டு அதன்பிறகே நியாயத்தை சொல்வது நல்லது. எதிர்ப்புகள் நீங்கும். நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்ததை விட அதிகரிப்பது மனமகிழ்ச்சியை தரும். மக்களின் ஆதரவைப் பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

கிரகநிலை:

பஞ்சம ஸ்தானத்தில்  கேது, குரு (வ), சனி (வ) - பாக்கிய ஸ்தானத்தில்  செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில்  ராஹூ, சுக்ரன்  - விரைய ஸ்தானத்தில் சூர்யன், புதன்   என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று காலை 7.11 மணிக்கு புதன் பகவான் ராசிக்கு மாறுகிறார்.

பலன்:

இன்று எதிரிகளால் இருந்து வந்த பிரச்சனை தீரும். நண்பர்கள் மூலம் தேவையான உதவிகள் கிடைக்கும். தொழில்வியாபாரம் தொடர்பான பயணங்கள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். இனிமையான பேச்சின்மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள். கலைத்துறையினருக்கு திறமைக்கேற்ற கதாபாத்திரங்கள் கிடைக்கப்பெற்று ரசிகர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். சுகவாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் சிறப்பாக அமையும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7

கிரகநிலை:

சுக  ஸ்தானத்தில்  கேது, குரு (வ), சனி (வ) -  அஷ்டம ஸ்தானத்தில்  செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் - தொழில்  ஸ்தானத்தில்  ராஹூ, சுக்ரன்  - லாப ஸ்தானத்தில்  சூர்யன், புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று காலை 7.11 மணிக்கு புதன் பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக பணி தொடர்பான அலைச்சல் இருக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். குடும்பத்தில் உங்களது பேச்சுக்கு எதிர்பேச்சு பேசியவர்கள் அடங்கி விடுவார்கள். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆனால் பணவரத்து திருப்திகரமாக இருக்கும். வாடிக்கையாளர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பது நன்மை தரும். வியாபார ஸ்தலத்திற்காக புதியதாக இடம் வாங்குவீர்கள்.  

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

கிரகநிலை:

தைரிய ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ) -  களத்திர ஸ்தானத்தில்  செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ, சுக்ரன்  - தொழில் ஸ்தானத்தில் சூர்யன், புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன. 

இன்று காலை 7.11 மணிக்கு புதன் பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று கணவன், மனைவிக்கிடையில் மகிழ்ச்சி நீடிக்கும்.   பிள்ளைகள் தொடர்பான காரியங்களை செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும். உங்களது செயல்களுக்கு இருந்த முட்டுகட்டைகள் விலகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரத்து கூடும். பிள்ளைகள் விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உறவினர்கள் வருகை இருக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுடன் பேசும் போது வார்த்தைகளை கோர்த்து பேசுவது முக்கியம்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

கிரகநிலை:

தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில்  செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் சந்திரன் - அஷ்டம  ஸ்தானத்தில் ராஹு, சுக்ரன்  - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று காலை 7.11 மணிக்கு புதன் பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். கல்வியில் வெற்றி பெற தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. காரிய தடை, தாமதம், வீண் அலைச்சல் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் திடீர் போட்டி இருக்கும். வீண் வார்த்தைகளை பேசுவதை தவிர்ப்பது நல்லது. வாடிக்கையாளர்கள் மன நிறைவடைவதற்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

கிரகநிலை:

ராசியில்  கேது, குரு (வ), சனி (வ) - பஞ்சம ஸ்தானத்தில்  செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் - களத்திர ஸ்தானத்தில்  ராஹு , சுக்ரன் - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று காலை 7.11 மணிக்கு புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்ப பிரச்சனை தீரும். மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத செலவு ஏற்படும். மற்றவர்களுடன்  வாக்குவாதங்களை தவிர்ப்பதால் பகை ஏற்படாமல் இருக்கும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டு கிடைப்பது அரிது. சிலரது எதிர்பாராத பேச்சு மனவருத்தத்தை தரலாம் கவனம் தேவை. சொத்து சார்ந்த விஷயங்கள் அனுகூலம் தரும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

கிரகநிலை:

சுக ஸ்தானத்தில்  செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன் - ரண, ருண  ஸ்தானத்தில்  ராஹூ, சுக்ரன்  - களத்திர ஸ்தானத்தில் சூர்யன், புதன் - அயன, சயன,  போக ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ)   என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று காலை 7.11 மணிக்கு புதன் பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கும் போது தீர ஆலோசித்தபின் முடிவு எடுப்பது நல்லதுஉத்தியோகத்தில்  இருப்பவர்கள் மேல் அதிகாரிகள், சக ஊழியர்களின் கருத்துக்கு மாற்று கருத்து சொல்லாமல்  இருப்பது நன்மை தரும்.குடும்பத்தில் ஏதாவது வேண்டாத பிரச்சனை தலை தூக்கலாம். உறவினர்கள் நண்பர்கள் பிள்ளைகள் என்று யாரிடமும் வீண் சண்டையை தவிர்ப்பது நல்லது

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

கிரகநிலை:

தைரிய ஸ்தானத்தில்  செவ்வாய் - சுக ஸ்தானத்தில் சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில்  ராஹூ, சுக்ரன்  - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், புதன் - லாப ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ)    என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று காலை 7.11 மணிக்கு புதன் பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் கருத்து மோதல் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே  இருந்த பூசல்கள் சரியாகும். பிள்ளைகளுக்கு தேவையன பொருட்களை வாங்குவது மற்றும் அவர்களது நலனுக்காக பாடுபட வேண்டியும் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் பணியாற்றுவதால் உடல் சோர்வடைய நேரலாம். வேலை செய்யும் இடத்திலும் மேல் அதிகாரிகளிடமும் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பார்த்த பணி உயர்வு கிட்டும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

கிரகநிலை:

தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில்  செவ்வாய்  - தைரிய ஸ்தானத்தில் சந்திரன் - சுக ஸ்தானத்தில்  ராஹூ, சுக்ரன்  - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், புதன் - தொழில்  ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ) என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று காலை 7.11 மணிக்கு புதன் பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று உங்களது கருத்துக்கு சிலர் மாற்று கருத்து கூறலாம். எதிர்த்து பேசாமல் அமைதியாக இருப்பது நல்லது. மாணவர்கள் எவ்வளவு திறமையாக படித்தாலும் பாடங்கள் கடினமானவை போல தோன்றும். மனதை தளரவிடாமல் படிப்பது வெற்றியை தரும்.கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். அனுசரித்து செல்வது நல்லது. தாய் வழி உறவினர்களுடன் சஞ்சலம் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

Trending News

Latest News

You May Like