1. Home
  2. ஜோதிடம்

(12-07-2020) இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் இன்றைய நாள் பொதுபலன்கள்

(12-07-2020) இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் இன்றைய நாள் பொதுபலன்கள்

(12-07-2020) இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் இன்றைய நாள் பொதுபலன்கள்

கிரகநிலை:

தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன் - தைரிய ஸ்தானத்தில் ராஹூ, புதன், சூர்யன்  -  பாக்கிய ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ)  - விரைய ஸ்தானத்தில் செவ்வாய், சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. 

பலன்:

இன்று உத்தியோகத்தில் கூடுதல் பணிச் சுமையை ஏற்க வேண்டி இருக்கும். மேலதிகாரிகளிடம் உங்களது கருத்துக்களை தெரிவிக்கும்போது கவனமாக பேசுவது நல்லது. வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையாக செல்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

கிரகநிலை:

ராசியில் சுக்ரன் - குடும்ப ஸ்தானத்தில்  ராஹூ, புதன், சூர்யன்  -   அஷ்டம ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ)  - லாப ஸ்தானத்தில் செவ்வாய், சந்திரன்   என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று குடும்பத்தில் நிம்மதி குறையலாம். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. வாடிக்கையாளர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பது நன்மை தரும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

கிரகநிலை:

ராசியில்  ராஹூ, புதன், சூர்யன்  -  களத்திர ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ)  - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், சந்திரன்  - விரைய ஸ்தானத்தில் சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று கண் நோய் ஏற்படலாம். வேளை தவறி உணவு உண்ணும்படி நேரலாம். தொழில் வியாபாரத்தில் திடீர் போட்டி இருக்கும். வீண் வார்த்தைகளை பேசுவதை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

கிரகநிலை:

ரண, ருண ஸ்தானத்தில்  கேது, குரு (வ), சனி (வ)  -  பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், சந்திரன்  - லாப ஸ்தானத்தில் சுக்ரன் - அயன, சயன, போக ஸ்தானத்தில்  ராஹூ, புதன், சூர்யன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று எச்சரிக்கையாக இருங்கள். வாகனம், பூமி மூலம் லாபம் கிடைக்கும்.

தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். அதே நேரத்தில் பல தடைகளை தாண்டி செயல்பட வேண்டி இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

கிரகநிலை:

பஞ்சம ஸ்தானத்தில்  கேது, குரு (வ), சனி (வ)  -  அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், சந்திரன்  - தொழில் ஸ்தானத்தில் சுக்ரன் -  லாப ஸ்தானத்தில்  ராஹூ, புதன், சூர்யன்   என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல் திறமை வெளிப்படும். சுதந்திரமாக செயல்படும் வாய்ப்பு கிடைக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

கிரகநிலை:

சுக  ஸ்தானத்தில்  கேது, குரு (வ), சனி (வ)  - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், சந்திரன்  - பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் - தொழில்  ஸ்தானத்தில்  ராஹூ, புதன், சூர்யன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சனை குறையும். கணவன், மனைவி இருவரும் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து திருப்தியடைவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

கிரகநிலை:

தைரிய ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ)  - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், சந்திரன்  - அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ, புதன், சூர்யன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. 

பலன்:

இன்று அடுத்தவர்களுக்காக  எந்த பொறுப்பையும் ஏற்காமல் இருப்பது நல்லது. பெண்களுக்கு வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பொருள்வரத்து கூடும். பயணம் செல்ல நேரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

கிரகநிலை:

தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ)   -  பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய், சந்திரன்  - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன்  - அஷ்டம  ஸ்தானத்தில் ராஹு, புதன், சூர்யன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று பெரியோரின் ஆலோசனை படி செயல்படுவது நல்லது. எல்லாவற்றிலும் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். பணவரத்து கூடும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனை தீரும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

கிரகநிலை:

ராசியில்  கேது, குரு (வ), சனி (வ)  -  சுக ஸ்தானத்தில் செவ்வாய், சந்திரன்  - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன் -  களத்திர ஸ்தானத்தில்  ராஹு, புதன், சூர்யன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று சுபகாரியங்கள் நல்லபடியாக நடக்கும். வீண் செலவுகளு, மருத்துவ செலவுகளும் வந்து போகும். உறவினர்கள் வருகையால் சிலருக்கு மனக் கசப்பு ஏற்படும். வீண் பேச்சுக்கு இடமளிக்காதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

கிரகநிலை:

தைரிய ஸ்தானத்தில் செவ்வாய், சந்திரன்  - பஞ்சம ஸ்தானத்தில் சுக்ரன் - ரண, ருண  ஸ்தானத்தில்  ராஹூ, புதன், சூர்யன்   -  அயன, சயன,  போக ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ)   என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று நீண்ட நாளாக இருந்த கஷ்டம் நீங்கும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அரசாங்கம் மூலம் லாபம் ஏற்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் சாதகமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

கிரகநிலை:

தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், சந்திரன்  - சுக ஸ்தானத்தில் சுக்ரன் - பஞ்சம ஸ்தானத்தில்  ராஹூ, புதன், சூர்யன்   - லாப ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ)   என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். வாக்கு வன்மையால் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்க பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சுபகாரியங்கள் கொண்டாட்டங்கள் இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

கிரகநிலை:

ராசியில் செவ்வாய், சந்திரன்  - தைரிய ஸ்தானத்தில் சுக்ரன்  -  சுக ஸ்தானத்தில்  ராஹூ, புதன், சூர்யன்  -  தொழில்  ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ)  என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி கிடைக்க பெறுவீர்கள். பெரியோர் மூலம் அனுகூலம் உண்டாகும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

Trending News

Latest News

You May Like