1. Home
  2. ஜோதிடம்

09-02-2019- தினப்பலன். இன்று இந்த ராசிக்காரர்களுக்கு காரிய தடைகள் விலகும்.  

09-02-2019- தினப்பலன். இன்று இந்த ராசிக்காரர்களுக்கு காரிய தடைகள் விலகும்.  

09-02-2019-newstm-daily-astrology

09-02-2019- தினப்பலன். இன்று இந்த ராசிக்காரர்களுக்கு காரிய தடைகள் விலகும்.  

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

இன்றைய பஞ்சாங்கம்

விளம்பி வருஷம் I உத்தராயணம் I ஹேமந்தருது I 09 February 2019 I தை - 26 I சனிக்கிழமை

சதுர்த்தி காலை 10.26 மணி வரை பின்னர் பஞ்சமி I உத்தரட்டாதி மாலை 3.38 மணி வரை பின் ரேவதி

சித்த யோகம் I சித்த்ம் நாமயோகம் I பத்திரை கரணம்

ராகு காலம்: காலை 9.00 - 10.30 I எமகண்டம்: மதியம் 1.30 - 3.00 I குளிகை: காலை 6.00 - 7.30

சூலம்: கிழக்கு I பரிகாரம்: தயிர்

குறிப்பு: இன்று மேல்நோக்கு நாள் I முகுந்த சதுர்த்தி I வர சதுர்த்தி

வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமி பவனி I திருநெல்வேலி ஸ்ரீசாலைக்குமார சுவாமி வருஷாபிஷேகம் I இன்று கருட தரிசனம் நன்று.

திதி: பஞ்சமி I சந்திராஷ்டமம்: உத்திரம், ஹஸ்தம்

உங்கள் ராசிக்கான சனிப் பெயர்ச்சி பலன்கள் மற்றும் பாிகாரங்களை படிக்க கிளிக் செய்யுங்கள்...

இன்று சிறிய விஷயத்துக்கு கூட கோபம் வரலாம். கட்டுப்படுத்துவது நன்மை தரும். திடீர் பண தேவை உண்டாகலாம். தொழில் வியாபாரம் தொடர்பான வீண் அலைச்சல் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிதாக பணிகளை செய்யும் படியிருக்கும். தற்காலிக பதவி உயர்வு கூடுதல் பொறுப்புகள் கிடைக்க பெறலாம் உறவினர் மூலம் நன்மை உண்டாகலாம்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 5இன்று எதிர்பார்த்த பணம் கைக்கு வருவதில் தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாகம் பற்றி யாருடனும் விமர்சனம் செய்யாமல் இருப்பது நல்லது. பதவி உயர்வு, சம்பள உயர்வு தாமதப்படலாம். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த மனகுழப்பங்கள் தீரும். எதிலும் தெளிவான சிந்தனை இருக்கும். குழந்தைகள் பற்றிய கவலை உண்டாகும். அவர்களின் நலனுக்காக பாடுபடுவீர்கள்.  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9இன்று குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் உங்களுக்கு டென்ஷன் தருவதாக இருக்கலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நல்ல பலன் தரும். பிள்ளைகளிடம் அனுசரித்து செல்வதும் அவர்கள் போக்கில் விட்டு பிடிப்பதும் நல்லது. மனதில் இருந்த வீண்கவலைகள் நீங்கும்.   அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் இருந்த முட்டுக்கட்டைகள் நீங்கும். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 4, 6 இன்று கோபத்தை கட்டுப்படுத்துவதும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நன்மை தரும். வீண் செலவை தடுக்க திட்டமிட்டு செயல்படுவது நல்லது. மாணவர்கள்  சக மாணவர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். மிகவும் பொறுமையுடனும், கவனமாக வும் பாடங்களை படிப்பது அவசியம். பெண்களுக்கு மனகுழப்பம் நீங்கி எதிலும் தெளிவான முடிவு எடுக்கும் மனநிலை ஏற்படும். காரிய தடைகள் விலகும். எதிர்பார்த்த பணம் வரலாம்.   அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5இன்று எல்லா பிரச்சனைகளும் தீரும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். சாமர்த்தியமாக செயலாற்றுவீர்கள். சில நேரத்தில் இடம், பொருள் தெரியாமலும் செயல்பட்டு விடுவீர்கள். மனதில் நம்பிக்கை உண்டாகும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். கலைத் துறையினருக்கு ஓய்வில்லாமல் உழைக்க நேரும். அதற்கேற்றவாறு கூடுதல் வருமானமும் வரும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும் அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6இன்று பேச்சின் இனிமையால் காரிய வெற்றி உண்டாகும். எதிலும் தாமதமான போக்கு காணப்படும். எதிர்ப்புகள் விலகும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தமான போக்கு மாறும். வேகம் பிறக்கும். கடன் பிரச்சனை தீரும். போட்டிகள் மறையும். புதிய ஒப்பந்தங்கள் வரும். லாபம் பெருகும். பழைய பாக்கிகள் வசூலாகும். உடல்நிலையில் இருந்துவந்த சிரமங்கள் முற்றிலும் நீங்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்க பெறுவார்கள்.   இடமாற்றத்துடன்  பதவி உயர்வு சிலருக்கு கிடைக்கலாம். குடும்ப பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே மனகசப்பு நீங்கும். தொழில் வியாபாரத்தில் பார்ட்னர்கள் மூலம் நன்மை உண்டாகும். வியாபாரத்திற்கு தேவையான நிதி உதவியும் கிடைக்கலாம். விளையாட்டுகளில் ஈடுபாடு அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9இன்று பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க நினைப்பீர்கள். எதிர்பாராத திருப்பங்களால் திடீர் நன்மை உண்டாகும். எதிர்ப்புகள்  விலகும். காரிய தடை தாமதம் நீங்கும். ஆரோக்கியம் உண்டாகும். அரசியல் துறையினருக்கு மேலிடத்துடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்களின் கோபத்திற்கு ஆளாகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.   நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9இன்று மாணவர்களுக்கு கல்வியில் இருந்த பிரச்சனைகள் தீரும்.  முடிவு எடுக்க முடியாமல் இழுபறியாக இருந்த விஷயங்களில் நல்ல முடிவு கிடைக்கும். புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. வெளியூர் பயணங்கள் செல்ல நேரலாம். வரவேண்டிய நிலுவையில் உள்ள பணம் வந்து சேரும். தந்தை மூலம் நன்மை உண்டாகும். எந்த ஒரு காரியத்திலும் தெளிவான முடிவினை எடுப்பீர்கள். நினைத்தபடி பணவரவுகளைப் பெறலாம்.  அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9இன்று மனஅமைதி உண்டாகும். இழுபறியாக பாதியில்  நின்ற காரியம் நன்கு நடந்து முடியும். விரும்பிய  காரியத்தை நிறைவேற்ற  தேவையான மனோ பலம் கிடைக்கும். வராமல் நின்ற பணம் கைக்கு வந்துசேரும். புதிய நபர்களின் நட்பும், அதனால் மன மகிழ்ச்சியும் ஏற்படும். மதிப்புகள் கூடும். மாணவர்களுக்கு பாடங்கள் படிக்க வேண்டுமே என்ற கவலைகுறையும்.  சக மாணவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 5இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள்.  வேலைபளு குறையும். திறமையான பேச்சின் மூலம் சக ஊழியர்களின் நட்பை பெறுவீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கி ஒற்றுமை உண்டாகும்.  பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பது மனதிருப்தியை தரும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். ஆனால் மனதில் ஏதாவது குறை இருக்கும் வெளிக்காட்ட மாட்டீர்கள். பிள்ளைகளுடன்  அனுசரித்து செல்வது நன்மை தரும். உறவினர்கள் வருகை இருக்கும் . உறவினர் நண்பர்களிடம் நற்பெயர் எடுப்பீர்கள். ஆன்மீக நாட்டம் உண்டாகும். வீண் அலைச்சல் ஏற்படலாம்  அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

newstm.in

Trending News

Latest News

You May Like