07-05-2019- தினப்பலன்: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு பொருளாதார நிலை திருப்தி தரும்

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் கணித்த இன்றைய ராசி பலன் மற்றும் பஞ்சாங்கம்

07-05-2019- தினப்பலன்: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு பொருளாதார நிலை திருப்தி தரும்
X

07-05-2019-newstm-daily-astrology

07-05-2019- தினப்பலன்: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு பொருளாதார நிலை திருப்தி தரும்

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

7-May-19 | விகாரி வருஷம் | உத்தராயணம்
வஸந்தருது | சித்திரை - 24 | செவ்வாய்கிழமை

திரிதியை மறு நாள் காலை 3.02 மணி வரை. பின் சதுர்த்தி
ரோகிணி மாலை 5.10 மணி வரை பின் மிருக சீரிஷம்
அமிர்த யோகம் | நாமயோகம்: அதிகண்டம் | கரணம்: தைதுலம்

அகஸ்: 31.06 | த்யாஜ்ஜியம்: 8.15 | நேத்ரம்: 0 | ஜீவன்: 1/2
மேஷ லக்ன இருப்பு (நா.வி): 1.14 | சூரிய உதயம்: 5.56

ராகு காலம்: மதியம் 3.00 - 4.30 | எமகண்டம்: காலை 9.00 - 10.30
குளிகை: மதியம் 12.00 - 1.30 | சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்

குறிப்பு: இன்று மேல் நோக்கு நாள்
பலராம ஜெயந்தி.
திரேதா யுகாதி.
அட்சய திரிதியை.
வீரபாண்டி கௌமாரியம்மன் கோவிலில் பொங்கல். இரவு புஷ்ப விமானத்தில் பவனி. ரம்ஜான் முதல் தேதி.

திதி: திரிதியை
சந்திராஷ்டமம்: அனுஷம், கேட்டை

சூரியன் பரணி 3ம் பாதம் உச்சம்
சந்திரன் ரிஷபம் உச்சம்
செவ்வாய் மிருகசீரிஷம் 3ம் பாதம் நட்பு
புதன் பரணி 2ம் பாதம் நட்பு
குரு மூலம் 1ம் பாதம் ஆட்சி
சுக்ரன் ரேவதி 3ம் பாதம் உச்சம்
சனி பூராடம் 3ம் பாதம் நட்பு
ராகு புனர்பூசம் 2ம் பாதம் நட்பு
கேது பூராடம் 4ம் பாதம் நட்பு

இன்று பொருளாதார நிலை திருப்தி தரும். செலவுகள் ஏற்படினும் சுபச்செலவுகளாகவே இருக்கும். அதனால் கவலைப்பட வேண்டாம். புதிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அனுகூலமாக இருக்கும் நாள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் பெற கடினமாக பணியாற்ற வேண்டி இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நல்லது. எதிலும் முழு கவனத்துடன் ஈடுபடுவது நன்மையை தரும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். கணவன், மனைவிக்கிடையே  வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5இன்று நன்மையளிக்ககூடிய நாளாகவே அமையும். சக நண்பர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்படலாம். வருமானம் நன்றாகவே இருக்கும். அவ்வப்போது கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் அமையும். தந்தை ஆதரவாக இருப்பார். மற்றவர்களுக்கு உதவ போய் வீண் பழி ஏற்படலாம் கவனம் தேவை. தொழில் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆனால் பணவரத்து திருப்திகரமாக இருக்கும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பது நன்மை தரும் கூடுதல் பணிச்சுமையை ஏற்க வேண்டி இருக்கும். மேலிடத்திடம் உங்களது கருத்துக்களை தெரிவிக்கும்போது கவனமாக பேசுவது நல்லது.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9இன்று செலவுகள் அதிகரிப்பதால் சுபச்செலவுகளாக அதை மாற்றிக் கொள்ளுங்கள். ஆடை, ஆபரணம் போன்றவற்றை வாங்க வேண்டுமென்ற ஆர்வம் இருப்பின் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். வீண் அலைச்சல், தடை தாமதம் ஏற்படலாம் கவனம் தேவை. புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5இன்று பணவரவு எதிர்பார்த்த பணவரவு தாராளமாக கிடைக்கும். அதற்காக பணத்தை அதிக அளவில் செலவழிக்க வேண்டாம். மனதில் இனம்புரியாத கவலை ஒன்று இருந்து கொண்டே இருக்கும். உடன்பிறந்தோரை பற்றி கவலை இருக்கும். புதிய நபர்களின் நட்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். உடல் நல பாதிப்பு ஏற்படலாம். ஏற்கனவே செய்த ஒரு செயலை நினைத்து வருந்த நேரிடும். பயணங்கள் செல்ல நேரிடலாம். தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை. குடும்பத்தில் ஏதாவது வீண் விவகாரங்கள் ஏற்பட்டு நீங்கும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை உண்டாகலாம்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9இன்று ஞாபக சக்தியும், எதையும் கிரகிக்கும் ஆற்றலும் இருக்கும். பிள்ளைகள் மற்றவர்கள் பெருமைப்படக் கூடிய வகையில் நடந்து கொள்வார்கள். சிக்கன நடவடிக்கையை மேற்கொள்வீர்கள். எதிலும் எச்சரிக்கையாக இருப்பதும் அவசியம். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். பணவரத்து கூடும். ஏற்கனவே செய்த ஒரு காரியத்தின் பலன் இப்போது கிடைக்கும். திடீர் மனவருத்தம் ஏற்படலாம். மற்றவர்களுக்கு உதவப்போய் வீண் பிரச்சனை உண்டாகலாம். கவனம் தேவை. வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக செல்வது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7இன்று கேட்ட இடத்தில் கடன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. அது உங்கள் தொழிலில் முன்னேற்றத்திற்காக கிடைக்க வேண்டியது. அதற்கான முயற்சிகளை இப்போது செய்யலாம். மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கும். எல்லா நன்மைகளும் உண்டாகும். சிற்றின்ப செலவு அதிகரிக்கும். மனதில் ஏதாவது கலக்கம் ஏற்படும். காரணமே இல்லாமல் வீண் பழி சுமக்க நேரிடும். ஒதுங்கி சென்றாலும் வலிய வந்து சிலர் சண்டை போடலாம் கவனமாக இருப்பது நல்லது. வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9இன்று வருமானத்தில் ஏற்றத் தாழ்வு இருக்கக் கூடிய நாளாகும். அவ்வப்போது உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மருத்துவச் செலவுகள் ஏற்படுவது மனதிற்கு வருத்தத்தை அளிக்கும். பெண்களுக்கு அதிக வேலைப்பளு உள்ள நாள். பிள்ளைகளுக்காக கூடுதலாக பாடுபட வேண்டி இருக்கும். சகோதரர்களிடம் கவனமாக பேசுவது நல்லது. மன துயரம் நீங்கும். உத்தியோகத்தில்  இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படும். சக ஊழியர்களிடம் இருந்த மன வருத்தங்கள் நீங்கும். மேல் அதிகாரிகள் சொன்ன வேலையை செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9இன்று கிரகிப்புத் திறன் நல்லபடி இருக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனித்து வரும் பெண்களுக்கு அலைச்சல் அதிகமாக இருக்கும். நல்ல வாய்ப்புகள் கைநழுவக் கூடும். மறைமுக எதிரிகளால் பிரச்சினைகள் உருவாகலாம். அதே நேரத்தில் அதற்கான கூடுதலாக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். மனதில் ஏதாவது ஒரு கவலை இருக்கும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் செலவு ஏற்படும். தொழில் வியாபாரத்தில் லாபம் குறையும். பணவரத்து சீராக இருக்கும். ஆர்டர்கள் வருவது தாமதப்படும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. போட்டிகள் குறையும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9இன்று சுமாரான நாள். தொழிலதிபர்கள் தங்களிடம் வேலை பார்க்கும் ஆட்களின் நலன் கருதி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். திருமண வயதில் மகன் அல்லது மகள் இருந்தால் அவர்களின் திருமண பேச்சுவார்த்தை வெற்றியளிக்கும். வாழ்க்கை துணையின் பேச்சை கேட்டு செயல்பட வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையே வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நல்லது. உறவினர்கள், நண்பர்கள் மூலம் கிடைக்கும் உதவி தாமதப்படும். கூடுதலாக செய்யும் முயற்சிகள் மூலம் விரும்பியபடி காரியத்தை செய்து முடிப்பீர்கள்.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7இன்று ஓரளவு மனநிம்மதி அளிக்கக் கூடிய நாளாகவும், தெய்வ பக்தியுடன் திகழக்கூடிய நாளாகவும் இருக்கும். வேலையில் கவனத்தை செலுத்தவும்.பழைய கடன்கள் இருப்பின் அவற்றை அடைத்து மனநிம்மதி பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேளை தவறி உணவு உண்ணும்படி நேரலாம். தொழிலில் திடீர் போட்டி இருக்கும். வீண் வார்த்தைகளை பேசுவதை தவிர்ப்பது நல்லது. மன நிறைவடைவதற்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி தருவதாக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும்.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5இன்று உணவு விசயத்தில் கவனம் தேவை. உடம்பில் அல்ர்ஜி போன்ற விசயங்கள் வந்து மறையும். கணவன் -  மனைவியரிடேயே ஒற்றுமை பலப்படும்.  வீணான மனக் கசப்பு வந்து மறையும். இடை ஞ்சல்களால் மன நிம்மதி குறையும். வாகனங்களை  ஓட்டி செல்லும் போது கவனம் தேவை. பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது அவசியம். தனிமையாக இருக்க நினைப்பீர்கள். தொழில் வியாபாரம்  சுமாராக நடக்கும்.  ஆர்டர்கள் கிடைத்தாலும்  சரக்குகள் அனுப்புவது  தாமதமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூல்  ஆனாலும் எதிர்பார்த்தபடி இருப்பது சிரமம்.      அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9  இன்று பணப் பற்றாக்குறை ஏற்படக் கூடும். வேறு ஏதும் பெரிதாக பிரச்சினை வருவதற்கு வாய்ப்பில்லை. உடன் பிறந்தோரின் பிரச்சினைகளுக்கு நீங்கள் முன்நின்று தீர்த்து வைப்பீர்கள்.  புது நம்பிக்கை வாழ்வில் ஏற்படும். எந்த காரியத்திலும் சாதகமான பலன் பெற வாக்குவாதங் களை தவிர்ப்பது நல்லது. பயணங்களின் போது கவனம் தேவை. இருந்த பிரச்சனை குறையும். பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். அடுத்தவர்களுக்காக  எந்த பொறுப்பையும் ஏற்காமல் இருப்பது நல்லது. வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பொருள் வரத்து கூடும். பயணம் செல்ல நேரலாம்.  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9    

newstm.in

Tags:
Next Story
Share it